Posts filed under ‘வாசகர் கடிதங்கள்’

மூன்றாவது இதழ்

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

எதுவரை மூன்றாவது இதழ் கிடைத்தது. முதலாவது இதழை நண்பர் கேதாரநாதன் கொண்டுவந்து கொடுத்தார். இரண்டாவது இதழ் கிடைக்கவில்லை. நான் நினைக்கிறேன் இலங்கையில் அது யாருக்குமே கிடைக்கவில்லை. இந்த இதழ் முதலாவது இதழைவிட அழகாகவும் வாசிப்பதற்கு நிறைய விடயங்களை உள்ளடக்கியதாகவும் வெளிவந்திருக்கிறது. கட்டுரைகள் கவிதைகள் சிறுகதை பேட்டிகள் என்று வெளிவந்துள்ள விடயங்கள் ஒவ்வொன்றும் கவனத்திற்குரியவையாக அமைந்திருக்கின்றன.
தவ சஜிதரனின் மொழிபெயர்ப்புக்கள் ஆங்கில மொழி பெயர்ப்புடன் சேர்த்து வெளியிடப்பட்டு இருப்பது ஒரு நல்ல முயற்சி. கவிதைக்கு மற்றெல்லாப் படைப்புக்களையும் விட அதிகளவிலான  மாறுபட்ட வாசிப்புக்களுக்கான சாத்தியங்கள் உண்டு என்பதால் கவிதை மொழியாக்கம் முடிந்தளவுக்கு இவ்வாறு வெளியிடப்படுவது நல்லது என்று நினைக்கிறேன். தவிரவும் ஒரு ஆசிய மொழிக் கவிதை ஐரோப்பிய மொழி ஒன்றினூடாக தமிழுக்கு வருகையில் இத்தகைய முயற்சி மிகவும் பயனுடையது. சசிதரனின் முயற்சி பாராட்டுக்குரியது. சசிதரன் சற்று முயன்று இம் மொழிபெயர்ப்பை இன்னமும் செழுமைப்படுத்தியிருக்க முடியும் என்ற எண்ணம் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்தபோது என்னுள் எழுந்தது. (more…)

May 23, 2010 at 2:10 pm Leave a comment

வாசகர் கடிதங்கள்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010

எதுவரை முதல் இதழ் சிறப்பான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது. புலம்பெயர்நாடுகளிலிருந்து வெளிவந்த சஞ்சிகைகளுள் இச்சஞ்சிகை வித்தியாசமான தோற்றப்பாட்டையும் வடிவ அழகியலையும் கொண்டுள்ளது. சஞ்சிகைக்கான ஆக்கங்களைப் பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினை, இதழை நடத்துவதில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாகும். புலம்பெயர்நாடுகளின் படைப்புச் சூழல் என்பது அண்மைக்காலத்தில் பெரும் தேக்க நிலையையே எட்டியுள்ளது. உங்கள் இதழில் அ.மார்க்ஸ், ஜமாலன், போன்றவர்களுடன், நிர்மலா, பி.ஏ.காதர், கலையரசன், சோபாசக்தி, ஆகியோருடன் இலங்கையிலிருந்தும் எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் எழுதியுள்ளது மிகப் பரந்த வாசிப்புத்தளத்தைத் தருகிறது.

சோபாசக்தியின் சிறுகதை அவரின் சிறந்த ஆற்றலை, புனைவு மனத்தை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜமாலனின் கட்டுரையில் அவர் சுட்டிக்காட்டுகின்ற பல்வேறு வியடங்களில் நாம் உடன்பட்டாலும் இலங்கை அரசியல், அதன் உள்விடயங்கள் தொடர்பான அவரது பார்வை குறைபாட்டுடன் உள்ளது. இது ஜமாலனுக்கு மட்டுமல்ல பல வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கும் பொதுவானதே. இலங்கைப் பிரச்சினையில் சிங்கள அரசியல் தலைமைகள் மட்டுமின்றி தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் இழைத்த, இழைத்து வருகின்ற தவறுகள் நிலைமையைச் சிக்கலாக்கியுள்ளது.

இரண்டாவது இதழில் எஸ்.வி.ராஜதுரை எழுதியுள்ள ஒரு மைய உலகமும் தேசிய இன விடுதலையும் என்ற கட்டுரை மிகவும் முக்கியத்து வமானது. தமிழ்த் தேசியவாதிகள் தங்களை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமானால் இக்கட்டுரையை வாசித்து புரிந்து கொள்வது அவசியம். எஸ்.வி.ஆர்.,திருநாவுக்கரசு எழுதிய நூல் தொடர்பாக அவரது முன்னு ரையை பிரசுரிக்க மறுத்தமையையும், அதனை இருட்டடிப்புச் செய்ததும் தனிமனித முடிவு என்பதற்கு அப்பால், தீவிர தமிழ் தேசியத்தின் அடிப்படை பண்புகளின் பாற்பட்டதே அது. இதனை எஸ்.வி.ஆர். நன்கு புரிந்து கொண்டிருப்பார். தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேசத் தலையீட்டை புரிந்து கொள்ளாமல் முன்னே செல்வதற்கு இலங்கை மக்களுக்கு எந்த வழியுமில்லை என்பதே நடைமுறை யதார்த்தமாகும். பாஸ்கரனின் கட்டுரையும் இதனுடன் சேர்த்து வாசிக்கப்படல் வேண்டும்.

கிருபாகரன் வசந்தன், இலண்டன் (more…)

March 15, 2010 at 3:58 pm Leave a comment


August 2017
M T W T F S S
« Jun    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts