Posts filed under ‘பத்தி’

பொதுத் தேர்தலுக்குப் பின் இலங்கையின் அரசியல் -ஒமர்

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

காலம் காலமாக இலங்கையைத் தின்று வந்த இனப்பிரச்சனை பலருக்கும் மிக விரைவில் மறந்து விட்டது. பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி வெற்றி கொள்ளப்பட்ட யுத்தத்தின் பாரதூரமும் யுத்தம் ஏற்படக் காரணமான அரசியல் ஊற்று மூலமும் மறந்து போய்விட்டது.  2010 ஏப்ரல் 8 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மகிந்த அணி பாரிய வெற்றி  பெற்றதைத் தொடர்ந்து  இனப்பிரச்சனைக்கான வேர் மேலும் மறக்கப்பட்டுவிடும் என்பதில் வியப் பில்லை. சிறுபான்மை என்ற ஒரு இனிமேல் இலங்கையில் இல்லை என்ற அரசியல் கூற்றிற்கும் இன அடிப்படையில் அரசியல் தீர்வு கிடையாது. மாறாக மாவட்ட அடிப்படையில் மக்களுக்கான அரசியல் அதிகாரப் பரவலாக்கள் பற்றி மகிந்த சிந்தனை வலியுறுத்தியுறுத்தி வருவதற்கும் இடையில் ஒரு உள்ளாந்த அரசியல் தொடர்பு உள்ளது.

தேசங்கள் அல்லது தேசிய இனங்களின் இறைமையின் அடிப்படையில் விட்டுக் கொடுக் காமால் போராடக் கூடிய, பேரம் பேசக் கூடிய அரசியல் பலம் எந்த சிறுபான்மைக் கட்சிகளுக்கும் இல்லை. ஆனால் அவ்வாறான கோசங்களை உயர்த்திப் பிடித்தக் கொண்டு தமக்குரிய நலன்களை அடைந்து கொள்வதற்கான உபாயங்களை தனித்தும் கூட்டாகவும் இக்கட்சிகள் மேற்கொள்ளும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம். எண்ணிக்கைச் சிறுபான்மை சமூகங்களைப் புறமொதுக்கும் அரசியல் போக்கு தற்போதைய அரசிலும் அரசாங்கத்திலும் மேலோங்கியிருப்பதன் காரணமாக சந்தர்ப்பவாத சிறுபான்மை அரசியல் கட்சிகள் இந்த சூழலை தமது தனிப்பட்ட நலன்களை அடைந்து கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்வதை மிகவும் இலகுவாக்கி விடுகின்றது. (more…)

Advertisements

June 2, 2010 at 1:17 pm Leave a comment

கதியிழந்த மக்கள் அல்லது கடவுளர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளுதல்

எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009

Sirupuluthy 1

‘எதுவரை’ என்ற கேள்வியைப் போலவே, ‘எப்படித் தொடங்குவது’ என்பதும் யோசித்தால் மிக ஆயாசப்படுத்துகிற கேள்விதான்.  மூகத்தை நிமிர்த்துவதற்கு வேண்டிய தொடக்கங்களை விடுங்கள். எழுதுவதைத் தொடங்குவதுகூட இன்னும் பெரும் சவாலாகவே இருக்கிறது.  நெடுநேரம் வெற்றுத் தாளையே பார்த்துக்கொண்டிருந்த பிறகு, ஷோபாசக்தி போல  ‘கேளுங்கள் பௌசரே’ என்று ஆரம்பித்துவிடலாம்  என்பதே ஆகிவருகிறது. காதுகளுடன் ஒருவர் முன்னால் இருப்பதுதான் எவ்வளவு வசதி!

போரின் முடிவில் கஜினி முகம்மதாகச்  சிந்திப்பதா அசோகச் சக்கரவர்த்தியாகச் சிந்திப்பதா என்ற தெரிவில் ஒருவேளை ‘எதுவரை’ என்ற கேள்விக்கு விடை வந்துவிடலாம்  போலத் தோன்றுகிறது. ஆனால் இன்றும் இதுபற்றி ஒரு உரையாடலை ஆரம்பிப்பது அவ்வளவு சுலபமாய்த் தெரியவில்லை. நம்  சமூகத்தின் வீரம், புத்திசாலித் தனம், ஏனைய மூடர்களைக் கட்டிமேய்த்து ஆண்டகாலம் போன்ற ஏறுபட்டி தளநார் வகைகளின் எழுப்ப  நினைவுகளிலிருந்து இன்னும் நாம் இறங்கி வந்ததாகத் தெரியவில்லை.

போரிலும் போரின் பின்னுமான வாதைகளுக்குள் நேரடியாகச் சிக்குப்படாது, வெளியிலிருந்து அழிவுகளை உணர்ந்தவர்களின் வீரக் குமுறலையும் பழிதீர்ப்பு மனவோட்டத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. (more…)

October 25, 2009 at 12:09 pm Leave a comment


December 2017
M T W T F S S
« Jun    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Categories

Feeds

Flickr Photos

Recent Posts