Posts filed under ‘நேர்காணல்’

வாழ்வின் அனைத்து பரிமாணங்களும் சிக்கல்களும் அரசியலும் கலையும் யுத்தமென்ற பெரும் பூதத்தால்தானே கட்டியாளப்பட்டன! -ஷோபாசக்தி

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

என்னுடனான உரையாடலின் போது வாசிப்பு மீதான உங்களது தீராத ஆவலை வெளிப்படுத்தியதுடன் இலக்கியப் பிரதியை எழுதுவது என்பது உங்களுக்கு சலிப்பூட்டக் கூடிய வேலை என்றும் சொல்லியுள்ளீர்கள். ஆனால் சர்ச்சைக் குரிய பல்வேறு விவாதங்களில் மிக ஆர்வத்து டன் நீங்கள் இறங்குவதிலும் கருத்துப் போர்களை நடத்துவதிலும் சளைக்காமல் தானே இருக்கிறீர்கள். இதுவும் உங்களுக்கு அலுப்பை, மனத் தளர்வை ஏற்படுத்தவில்லையா?

நான் அளவுக்கு அதிகமாகக் கருத்துப் போர்களில் ‘மினக்கெடுகிறேன்’ என்றொரு விமர்சனம் நீண்ட காலமாகவே உள்ளதுதான். என்னுடைய அரசியல் இலக்கிய நிலைப்பாடுகள், மதிப்பீடுகள் காலத்திற் குக் காலம் மாறி வந்தவைதான். ஆனால் நான் ஒரு நிலைப்பாட்டில் இருக்கும்போது அந்த நிலைப் பாட்டை முழுமையாக நம்பும்போது அந்த அரசியல் அல்லது இலக்கிய நிலைப்பாட்டிற்காக ஓயாமல் போரிடுவதுதான் நேர்மையான செயல் என்று நான் கருதுகிறேன். இதில் அலுப்பென்றும் சலிப்பென்றும் எதுவுமில்லை.

சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் இருப்பது போலவே இலக்கியத்தளமும் வர்க்கங்களாலும் சாதியாலும் பால்நிலையாலும் மேல் கீழாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. பாஸிசத்தின் அடிவருடிகளும் இந்துத்துவ வெறியர்களும் சாதியப் பற்றாளர்களும் குறுந் தேசியவாதிகளும் இலக்கியத் தளத்தினுள் தீவிரமாக இயங்கும்போது நாம் அவர்களைத் தீவிரமாக எதிர்த்து விரட்டியடித்தேயாக வேண்டும். இதிலென்ன சலிப்புள்ளது. உண்மையில் இதுவொரு உற்சாகமான வேலை.

தவிரவும் இலக்கியத்தளத்திலோ அரசியல் வெளிகளிலோ நான் வரித்துள்ள கருத்துகள் மிக மிகச் சிறுபான்மையினரின் கருத்துகளாகவே இருக்கும் போது எனக்கு இன்னும் பொறுப்பும் வேலையும் அதிகமிருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களிலும் நான் ஒருவனே ட்ரொஸ்கியவாதி. நான் புலம்பெயர் சிறுபத்திரிகை களில் எழுதத் தொடங்கிய காலத்தில் ட்ரொஸ்கியம் சார்ந்தே எனது கருத்துப் போர்கள் நிகழ்ந்தன. அம்மா மற்றும் எக்ஸில் இதழ்களைத் தளமாகக்கொண்டு நாங்கள் மிகச் சிலர் தலித்தியம், பின்நவீனத்தும், விளிம்புநிலை அரசியல் குறித்த உரையாடல்களை, விவாதங்களைப் புகலிடத்தில் ஆரம்பித்தபோதும் சுற்றி நின்ற கொடும்பகையை எதிர்கொள்ள ஓயாமல் கருத்துப்போர் நடத்த வேண்டியிருந்தது. (more…)

June 2, 2010 at 6:29 pm Leave a comment

ஒரு வினாடி உணர்வை எழுத எத்தனை பக்கங்கள் அப்படியும் முழுமை கிட்டுவதில்லை- சாந்தன்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
கட்டடப் பொறியியல் மற்றும் கணனி போன்ற துறைகளில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் இலக்கிய ஈடுபாடு கொண்டது எவ்வாறு?
இலக்கிய ஈடுபாடுதான் முதலில் வந்தது. சிறு வய திலிருந்து வாசிப்பு நாட்டம் அதன் அடுத்த கட்டமாய் எழுதும் முனைப்பு. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதிவிட்டுப் பெறுபேறுகளுக்காகக் காத்திருந்த 66 புரட்டாதியில் என் முதற் கதை ‘கலைச்செல்வி”யில் பிரசுரமானது. மொறட்டுவை தொழில் நுட்பவியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது முதலா வது சிறுகதைத் தொகுதி ‘பார்வை” வெளியாயிற்று, 1970இல் தொழில் நுட்பவியல் கல்லூரிக் கால கட்டம் கலை இலக்கியச்செயற்பாடுகளுக்கு வாய்ப்பாக அமைந்ததென நினைக்கிறேன்.
கலை இலக்கியச்செயற்பாடுகளுக்கு மட்டுமன்றி அரசியல் ஈடுபாடுகளுக்கும் ஏற்றதாக அமைந்தது. அது தமிழ் மாணவர் பேரவை இயங்கிக் கொண்டிருந்த காலம். மொறட்டுவை தொழில் நுட்பவியல் கல்லூரி நாட்களில் தான் ‘எழில்” சஞ்சிகையும் வெளியாயிற்று. நான், மாவை நித்தியானந்தன் உட்பட சில மாணவ நண்பர்கள் இணைந்து அதனை வெளியிட்டோம். கலை இலக்கியம், சமூகம் பற்றிய பிரக்ஞையுடன் ஐந்தோ ஆறோ இதழ்கள் வந்தன.
கொழும்பு கலை இலக்கிய நண்பர் கழகம்?
அடுத்த கட்டம். எழிலில் இணந்திருந்த நான், நித்தி போன்றோரும், கொழும்பில் அவ் வேளையில் பணியாற்றிக்கொண்டிருந்த சண்முகன், யேசுராசா முதலிய பலரும் சேர்ந்து செயற்பட்ட அமைப்பு அது. எழுபதுகளின் தொடக்கத்தில் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் தீவிரமாக இயங்கிற்று, மாதாந்த சந்திப்புகள்,நூல் வெளியீடுகள், விமர்சனங்கள்  என.
கொழும்பிலும், திருகோணமலையிலும் பணியாற்றிய காலங்கள் உங்களது எழுத்தாக்க முயற்சிகளில் எந்தளவிற்குத் தாக்கம் செலுத்தின?
மேற்குறிப்பிட்ட கழகச்செயற்பாடுகளுக்கப் பால், பரந்தளவிலான பரிச்சயங்கள் கொழும்பில் கிட்டின. பொது நிகழ்வுகள், படக்காட்சிகள், கண்காட்சிகள், இவற்றோடு, பிரிட்டிஷ் கவுன்சில், அமெரிக்கன் சென்ரர், சோவி யத் நட்புறவுக் கழகம் இவற்றின் நூல கங்களும் செயற்பாட்டு முயற்சிகளுக்கு வாய்ப் பாக அமைந்தன.
திருகோணமலை வாழ்வு ஓராண்டே யெனினும், ஒருவிதத்தில் அது ஒரு திருப்பு முனையுமாயிற்று. ‘இலங் கையன்” என்று மட்டும் எண்ணிக்கொண்டிருந்தவ னைத் ‘தமிழன்” என்றும் உணர்த்தியது அது. ‘அந்நியமான உண்மைகள்” அப்போது வெளியான கதைதான். யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாடு நடந்த காலமும் அது தான்.
(more…)

March 7, 2010 at 4:44 pm Leave a comment

மிக ஏழ்மையான மக்கள் ஏன் இந்த அமைப்பின் தலைவர்களை கொலை செய்ய விரும்புகின்றனர்? – பேராசிரியரான தோழர் ஜி.என்.சாய்பாபா

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
இந்தியாவில் இடம்பெயர்தலுக்கு எதிரான கூட்டமைப்புக்கு தலைமை ஏற்று பல்வேறு போராட்டங்களுக்கு வழிகாட்டுதல் அளிப்பவருமான புதுதில்லி பல்கலைகழகத்தின் மூத்த நிலை பேராசிரியரான தோழர் ஜி.என்.சாய்பாபா அவர்கள் கடந்த நவம்பர் மாதம் இலண்டன் வந்திருந்தார். இந்தியா, பிரேசில், ஈரான், பிலிப்பைன்ஸ், துருக்கி மற்றும் பல நாடுகளின் புரட்சிகர அமைப்புக்களின் ஒருங்கிணைப்பாக செயல்பட்டுவரும் சர்வதேசிய அரசியல் கைதிகள் விடுதலை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கெடுக்க வந்திருந்தபோது இந்நேர்காணல் பெறப்பட்டது.

இந்தியாவில் தற்போதைய சூழல், புதிய பொருளாதார மண்டலங்கள், இந்துத்துவா, சர்வதேசிய சூழல், பின் நவீனத்துவம், இனப்படுகொலைகள், மாவோயிஸ்ட் இயக்கத்தின் எதிர்கால போக்குகள் குறித்தும் நீண்ட உரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இவற்றின் முதல் பகுதி இது.
லால்கர், சட்டீஸ்கர், க்ரின்ஹண்ட் என்பது குறித்து நீங்கள் என்ன குறிப்பிட விரும்புகிறீர்கள்?
லால்கர் இயக்கம் ஆதிவாசி மக்களின் தன்னெழுச்சி யுடன் நடந்த ஒன்றாகும். 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லால்கர் அருகே கண்ணி வெடி தாக்குதல் ஒன்று நடந்த பின்பு அரசாங்கம் ஆதிவாசி மக்கள் மீது கொடூர மான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது. அந்த கண்ணிவெடி தாக்குதல் சிறப்பு பொருளாதார மண்ட லத்தை திறந்து வைக்க வந்திருந்த அன்றைய மத்திய இரும்பு மற்றும் எஃகுதுறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானையும் மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியையும் குறிவைத்து வெடிக்கப்பட்ட தாகும்.

March 7, 2010 at 10:12 am Leave a comment

நான் எப்போது அடிமையாயிருந்தேன்… புஸ்பராணி – நேர்காணல்

எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009

ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் தோழியர் புஸ்பராணி. தலைமறைவுப் போராளிகளிற்குச் சோறிட்டு வீட்டிற்குள் தூங்கவைத்துவிட்டு பட்டினியுடன் வீட்டு வாசலில் காவலிருந்த ஒரு போராளிக் குடும்பத்தின் மூத்த பெண்பிள்ளை. “ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” தந்த மறைந்த தோழர் சி.புஸ்பராஜாவின் மூத்த சகோதரி. அறுபது வயதை நெருங்கும் பிராயத்திலும் அரசியற் கூட்டங்கள், இலக்கியச் சந்திப்புகள், பெண்கள் சந்திப்புகள், தலித் மாநாடுகள் என உற்சாகமாகத்  தனது பங்களிப்பைச் செலுத்திக்கொண்டிருப்பவர். தனக்குச் சரியெனப்பட்டதை எந்தச் சபையிலும் சந்தர்ப்பத்திலும் எதற்கும் அஞ்சாமல் துணிந்து பேசிக்கொண்டிருக்கும்  கலகக்காரி.

தமிழரசுக் கட்சியின் தொண்டராக ஆரம்பிக்கப்பட்ட அவரது அரசியல் வாழ்வு எழுபதுகளின் ஆரம்பத்தில் ஆயுதந் தாங்கிய இளைஞர் போராட்டக் குழுக்களின் பக்கம் அவரைக்  கூட்டிவந்தது. சில வருட இயக்க அனுபவங்களிலேயே போராட்ட இயக்கங்களுக்குள் பெரும் கசப்புகளைச் சந்திக்க நேரிட்ட அவர் இயக்க அரசியலிலிருந்து  ஒதுங்கிக்கொண்டாலும் தொடர்ந்தும் இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிட்டது. புஸ்பராணி 1986ல் பிரான்சுக்குப் புலம் பெயர்ந்தார். ஈழப்  போராட்டத்தில் தனது அனுபவங்களை நூலாக எழுதி வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் புஸ்பராணியைச் சந்தித்து “எதுவரை இதழிற்காகச் செய்யப்பட்ட  இந்நேர்காணல் அவரின் புத்தகத்திற்கான ஒரு முன்னுரைபோல அமைந்துவிட்டதில் மகிழ்ச்சியே. ஒன்றரைமணி நேரங்கள் நீடித்த இந்த நேர்காணல் பாரிஸில் 20.06.2009ல் பதிவு செய்யப்பட்டது.

சந்திப்பு: ஷோபாசக்தி
படங்கள்: தியோ ரூபன்

Puspharani

நான் யாழ்ப்பாணத்தின் கடற்கரைக் கிராமமான மயிலிட்டியில் 1950ல் பிறத்தேன். எனக்கு ஆறு சகோதரர்கள், ஆறு சகோதரிகள். குடும்பத்தில் நான் நான்காவது. மறைந்த  புஸ்பராஜா எனக்கு அடுத்ததாகப் பிறந்தவர். எனக்கும் தம்பி புஸ்பராஜாவுக்கும் ஒருவயதுதான் இடைவெளி. (more…)

October 20, 2009 at 6:11 pm 1 comment


August 2017
M T W T F S S
« Jun    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts