Posts filed under ‘திறனாய்வு’

ஃபஹீமா ஜஹான் கவிதைகள் – எம். ஏ. நுஃமான்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
ஃபஹீமா ஜஹான் 1990களின் பிற்பகுதியில் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலை மாணவி. கலாசாலை ஆண்டுமலருக்காக என் னிடமிருந்து ஒரு பேட்டி எடுக்கவேண்டும் என அவர் விரும்பினார். என் மனைவி மூலம் தொடர்புகொண்டு பேட்டிக்கான வினாக்களை எழுதி அனுப்பியிருந்தார். அந்த வினாக்களைப் படித்தபோது அவர் ஒரு சராசரி ஆசிரியை அல்ல, நன்கு விபரம் தெரிந்தவர்தான் என்று நினைத் தேன். அவரை நேரில் சந்திக்காமலே தபால் மூலம் நிகழ்ந்த அந்தப் பேட்டி கலாசாலைச் சஞ்சிகையான கலையமுதத்தில் வெளிவந்தது.
அப்போது அவர் கவிதைகளும் எழுதுபவர் என்று எனக்குத் தெரியாது. பின்னர் பத்திரிகைகளில் அவ்வப் போது வெளிவந்த அவரது சில கவிதைகளைப் படித்த போது அவர் மேலெழுந்துவரக்கூடிய கவிஞர் என்பது உறுதிப்பட்டது. மிக அண்மையில்தான் ஒரு கடல் நீரூற்றி என்ற அவரது முதலாவது தொகுப்புப் படிக்கக் கிடைத்தது. அதில் இடம்பெற்றுள்ள கவிதைகள் ஃபஹீமாவின் கவியாளுமை பற்றிய ஒரு மன நிறைவைத் தந்தன.
சமீபத்தில் வெளியான தனது இரண்டாவது தொகுப்பான ‘அபராதி” க்கு ஒரு முன்னுரை தருமாறு அவர் கேட்டபோது மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன். ஆயினும் பதிப்பகத்தாரின் அவசரம் காரணமாகவும், எனது அவ காசமின்மை காரணமாகவும் எனது முன் னுரை இல்லாமலே அபராதி வெளிவர நேர்த்தது. (more…)
Advertisements

March 7, 2010 at 3:53 pm Leave a comment

தாமரைச்செல்வி – கருணாகரண்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
1970களின் பிற்பகுதி. ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகள் அதிகமாக வாசிக்கப்பட்ட காலம் அது. இதற்கான வாய்ப்பை வீரகேசரி உருவாக்கியிருந்தது. அப்போது ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்களை வீரகேசரி, மாதம் ஒரு நாவல் என்ற அடிப்படையில்  வெளி யிட்டு வந்தது. அதில் பல புதிய எழுத்தாளர்களும் அறி முகமானார்கள். அப்பொழுதுதான் தாமரைச்செல்வி யின் ‘சுமைகள்” என்ற நாவலையும் வாசித்தேன். அந்த நாவலை வாசிக்கும்போது எனக்கு வயது இருபது அல் லது இருபத்தொன்றாக இருக்கலாம். அந்த நாவல் அதி கம் என்னைக் கவர்ந்ததற்கு இரண்டு காரணங்களிருந் தன. ஒன்று, நாவலில் இடம்பெறும் களத்தின் அறி முகம். அடுத்தது, எழுதிய தாமரைச்செல்வி எங்கள் ஊருக்கு அண்மையில் இருந்தார் என்பது.
இதற்குப் பின்னர் தாமரைச்செல்வியின் எழுத்து களில் ஒரு கூடுதல் அவதானிப்பு. அவர் அநேகமாக விவசாயிகளின் பிரச்சினைகளை, விவசாயக் கூலிகளின் பிரச்சினைகளையே எழுதினார். நாங்களும் ஒரு விவசாயக் குடும்பம் என்பதால் எங்களின் பிரச்சினைகள், எங்களுடைய கதைகளாகவே இருந்தன அவருடைய கதைகள். இதனால், எங்களின் குடும்பத்தில் தாமரைச் செல்வியின் எழுத்துகளுக்கு உச்ச வரவேற்பு. அவரு டைய சிறுகதைகள் பத்திரிகைகளில் வரும்போது இந்த வரவேற்பின் உற்சாகத்தை எங்களின் வீட்டில் காண லாம்.

March 7, 2010 at 3:09 pm Leave a comment

கலாமோகனின் கதைகள் – திறனாய்வு

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

Kalamhogan

க. கலாமோகன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்ப்  படைப்பாளிகளில் ஒருவராக அறியப்பட்டவர். பிரெஞ்சு மொழியிலும் எழுதி வருபவர். 1983 இல் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தற்போது பிரான்சில் வாழ்ந்து வருகின்றார்.

1999 இல் பிரான்சில் இருந்து எக்ஸில் வெளியீடாக வந்த ‘நிஷ்டை’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கிய  உலகின் கவனிப்பைப் பெற்றவர்.  இதன் பின்னர் 2003 இல் அவுஸ்திரேலியாவில் இருந்து மித்ர வெளியீடாக ‘ஜெயந்தீசன் கதைகள்’ தொகுப்பும் வெளிவந்துள்ளது. இவை தவிர ‘வீடும் வீதியும்’ என்ற நாடக நூலும், பிரெஞ்சு மொழியில் கலா மோகனால் படைக்கப்பட்ட ‘Et damain’ (நாளையும்) கவிதைத் தொகுப்புமாக இதுவரை நான்கு நூல்கள் வெளியாகியுள்ளன. (more…)

August 7, 2009 at 10:15 am Leave a comment

பெரிய மரைக்கார் சின்ன மரைக்கார் தனிவரைவா? இனவரைவா?

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

ghadar

கருத்துவைப்பு முறையாகவே இன்றுவரை விமர்சிக்கப்பட்டு வருகின்ற போதிலும் மேற்படி எஸ்.எல்.எம். ஹனிபாவின் பட்டியலின் தொடக்கமாக வ.இ.இராசரத்தினத்தின் ‘கொழு கொம்பு’ வையும், சண்முகம் சிவலிங்கத்தின் ‘நாலாண்டுகளை’யும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது என் திடமான  கருத்தாகும்.

மேற்படி பட்டியலில் சொல்லப்பட்ட புனை  பிரதிகளை நுணுக்கமாக வாசிப்புச் செய்யும் வாசகன் ஒருவன், பலவிதமான இலக்கிய அனுபவங்களையும்,  கலாசாரத் தன்மைகளையும் நிச்சயமாகப் பெற்றுக் கொள்ளலாம். கடலும் கடல் சார்ந்த களப்பும் நதியும் நதி சார்ந்த களிமுகமுமான ஒரு நீர்க்கரை  நாகரீகத்தை அணுக்கமாகக் கெண்ட ஒரு மக்கள் கூட்ட மொன்று இயற்கையைக் கையகப்படுத்தி, அதனை மாற்றியமைத்து, அபிவிருத்தி செய்து ஆதிபத்தியம் செய்து கொண்ட ஒரு நிலஉருவாக்கத்தினை இப்புனைவுகளிலிருந்து கண்டு கொள்ளலாம். சிறப்பாகக் கிழக்கிலங்கையினை நிலக் குறியாகக் கொண்ட தமிழ் பேசும் மக்களின் பல நூற்றாண்டுகால வாழ்க்கை வரலாற்றினை இப்புனைவுகளில் தோண்டி எடுக்கலாம். கிழக்கிலங்கையின் நிலக் குறிக்குள் வேறுபடும் வெவ்வேறு புனைகளங்களை தரிசித்தனுபவிக்கலாம். (more…)

July 28, 2009 at 1:42 pm Leave a comment


June 2019
M T W T F S S
« Jun    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Categories

Feeds

Flickr Photos

Recent Posts