Posts filed under ‘திரை மொழி’

ABBAS KIAROSTAMI- அப்பாஸ் ஹெரொஸ்ரமி-தமிழில் – ஜி.ரி.கேதாரநாதன்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
அப்பாஸ் ஹெரொஸ்ரமி சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு மேதையாவார். அவர் யதார்த்தங்களை முற்றிலும் புதிய பார்வைக் கோணத்தில் அணுகுகிறார். சிறுசிறு, விடயங்கள் மற்றும் சம்பவங்கள் போன்றவற்றின் அடியாழங்களை அவர் தரிசிக்கிறார். அவற்றின் சலனங்களை நன்கு புரிந்து கொண்டு மறுசிருஷ்டியில் இறங்கும் அவருக்கு அது அதி அற்புதமாக சித்திக்கின்றது. இதற்குள் ஒரு அழகியல் அவர் வசப்பட்டுவிடுகிறது. கட்டுப்பாடான தணிக்கை முறைகளில் இருந்து தமது கலைப்படைப்புக்கு பங்கம் நேர்ந்து விடாது முன்கூட்டியே பார்த்துக் கொள்வதில் அவர் மிகுந்த சாமர்த்தியசாலி. சினிமா, இறுதியில் நெறியாளரின் ஊடகம்தான் என்பது அவரை பொறுத்தவரையில் முற்றிலும் மெய்மையானதொரு கூற்றே என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அப்பாஸ் ஹெரொஸ்ரமி 1990இல் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடவிருந்த வேளையிலேயே வட ஈரானை பூகம்பம் தாக்கியது. அவர் அப்போது தனது மகனுடன் ஈரானின் தலை நகரில் இருந்து தாக்குதலுக்கு இலக்கான பிராந்தியத் திற்கு காரிலே பயணம் செய்து கொண்டிருந்தார். அவரது உன்னதமான படைப்புக்களில் where is the friend’s home திரைப்படத்திற்கு அப்பிராந்தியமே களமாகவிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. சிறு வர்களது மன உலகின் மீது தங்குதடையின்றி ஆழமான பார்வை யைச் செலுத்திய திரைப்படம் அதுவாகும்.
(more…)
Advertisements

March 7, 2010 at 3:35 pm Leave a comment

கைவிடப்பட்ட நிலம் – விமுக்தி ஜயசுந்தர

எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009

vimukthy
உலகத் திரைப்பட விழாக்களில் மிகச் சிறந்த திரைப்பட விழாவான பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இலங்கையைச்  சேர்ந்த இளம் சிங்களத் திரைப்படக் கலைஞரான விமுக்தி ஜயசுந்தர இயக்கிய ‘சுலங்க எனு பினிஸ’ (The Forsaken Land) கைவிடப்பட்ட நிலம் என்ற 108 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப் படத்திற்கு கேன்ஸின் கேமரா டி ஓர் என்ற உயர் விருது பெற்றதைக் குறிப்பிட வேண்டும். அத்தோடு பாங்கொக் நகரில் நடைபெற்ற மூன்றாவது உலகத் திரைப்பட விழாவின் போதும் இத்திரைப் படத்திற்குச் சர்வதேச அளவிலான  சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. ‘இரண்டு தசாப்த கால யுத்தத்தின் விளைவுகளையும் போர் நிறுத்தம் அமுலில் இருந்த சூழலில் மனித வாழ்க்கையில் உள்ள வெறுமையை ஆழமாக ஆராயும் படைப்பாக 27 வயது நிரம்பிய விமுக்தியின் திரைப்படத்தைக்  குறிப்பிட முடியும்’ என வீரகேசரி வார வெளியீட்டில் எழுதியிருந்த சதீஷ் கிருஷ்ணப்பிள்ளை குறிப்பிடுகின்றார்.

விமுக்தி ஏற்கனவே ‘நிகண்ட தேசய’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அவர் இத்திரைப்படம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போது  ‘எனது தாய் நாட்டில் உள்ள ஏராளமான பிரச்சினைகளையே இத் திரைப்படம் பிரதிபலிக்கின்றது. மேற்கத்திய நாட்டவர்களுக்காக இது  உருவாக்கப்பட்டதாகப் பலர் கருதுகின்றனர். ஆனால் எனது நாட்டவர்களுக்காகவும் ஆசிய நாட்டவர்களுக்காகவுமே இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்திலிருந்து நான் இவ்விருதைப் பெற்றதன் மூலம் ஆசியர்களுக்காகவே இப்படம்  தயாரிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது’ என்கிறார் விமுத்தி ஜயசுந்தர. (more…)

October 21, 2009 at 8:40 am Leave a comment


December 2017
M T W T F S S
« Jun    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Categories

Feeds

Flickr Photos

Recent Posts