Posts filed under ‘சிறுகதை’

கம்யூனிஸ்ட்- ஜிஃப்ரி ஹஸன்

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

ஆங்கில மீடியத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையில் உந்தப்பட்டு எனது ஊரிலிருந்து தொலைவிலிருந்த பல்கலைக்கழகமொன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கு என்னைப் போன்று சிங்களமோ, ஆங்கிலமோ தெரியாத அநேகமான தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் வந்திருந்தனர். அவர்கள் பொதுவாக நாட்டின் வடக்குப்புறத்திலும்-கிழக்குப்புறத்திலுமிருந்து வந்திருந்தனர். எங்களது இந்தப் பல்கலைக் கழகமும் காட்டுப்புறத்தில்தான் அமைந்திருந்தது.

தனிச் சிங்கள ஊரான கும்பல்கமவில் உருப்படியாக அமைந்திருந்தது அது மட்டும்தான். மலைகளால் சூழப்பட்ட, ஏற்றமும் இறக்கமுமான நிலத்தில் நேராகவும், சாய்வாகவும் கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. பிரமாண்டமான நவீன மாடிக் கட்டடங்களோ குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளோ நவீன விடுதி வசதிகளோ குறைந்தபட்சம் சமதரை யான பாதைகளோ அங்கில்லை. நாட்டிலுள்ள ஆகவும் ஏழ்மையான பல்கலைக்கழகம் இதுவாகத் தானிருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த மாத்திரத்தில் எல்லோருக் குள்ளும் வந்துவிடும். (more…)

Advertisements

June 2, 2010 at 3:30 pm Leave a comment

அரசனும் குதிரை வீரனும் அழியுங்காலத்தின் சனங்களும் – ஜெகன் அபூர்வன்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
பாழடைந்த நூலகத்தின் படிக்கட்டில் அவன் அமர்ந்திருந்தான். புதர்களும் குப்பைகளுமாக சிதறிக்கிடக்கும்; அந்த இடத்தில் சற்றுக்கு முன்புதான் மௌனம் கலையாமல் மரத்தின்கிளைகள் சலசலக்க அந்தப் பட்ஷி பறந்திருந்தது. அவன் நூலகத்தைப் பார்த்தான் புராதன சுவர்களில் எண்ணற்ற வெடிப்புக்களிடையே பசுமை படர்ந்திருந்தது. எல்லா சந்தர்ப்பங்களிலும் கண்டுவிடத்தவறும்
ஓவியங்கள் சுவர்களில் மறைந்திருந்தன.
ஏராளமான காலடிகளின் ஓசை படிக்கட்டுக்களில் கேட்டுக் கொண்டிருந்தது. யார் வருகிறார்கள்? அவன் திரும்பிப் பார்த்தான் எவருமேயில்லை. ஆனாலும் இடைவிடாத ஓசை கேட்டபடியிருந்தது. அவன் மேலேறிச் சென்றான். புத்தகங்கள் எங்கும் சிதறிக்கிடந்தன. தாள்கள் காற்றில் எழுந்து பறந்தபடியிருந்தன. யாரோ வாசிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. அவனின் மௌனத்தை விட்டத்தில் தொங்;கவிட்டு சவுக்கால் அடிப்பது போன்ற பிரமையை உணர்ந்தான். யாருமில்லாத நூலகத்தில் யாரேனும் எப்போதுமிருந்து கொண்டுதானிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டான்.
நேரம் நடுப்பகலைத் தொட்டுக் கொண்டிருந்தது. இத்தோடு அவன் இந்த நூலகத்திற்கு நூறாவதோ அல்லது நூற்றியோராவது தடவையோ வருகின்றான். நூலகத்தின் சுவர்களின் வெண்ணிறம் உதிராத நாட்களில் அவனது அநேக பொழுதுகள் இதனுள்த்தான் கழிந்தன . இப்போது பழுப்பேறிய சுவர்களில் வேர் விட்டிருக்கும் மரங்களும் திறந்துகிடக்கும் கதவுகளும் கூரைகளும் மனதை என்னவோ செய்வது போலிருந்தன.
(more…)

March 6, 2010 at 6:44 pm Leave a comment

மூன்று படுகளத்துடன் தேடுபவன் – த மலர்ச்செல்வன்.

எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009

தற்செயலாக ‘அஃ’ இதழை வாசித்துக் கொண்டிருந்தபோது படுகள இதழ்களை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் மேலெழுந்தது.அந்த இதழ்களைத் தேடி நான் அலையாத இடமேயில்லை. தேடாத நூலகங்களே இல்லை. விசாரிக்காத எழுத்தாளர்களேயில்லை இறுதியில் ஆவணக் காப்பாளர் குரும்புச்சிட்டி குலசிங்கத்திடம்இருப்பதாக அறிந்து அவர் வாசல் அடைந்தேன்.

வீடு முழுவதும் பழைய கடதாசியால் நிரம்பியிருந்தன. எழுத்துக்கள் எங்கும் ஒட்டிக்கொண்டு ஊஞ்சலாடின. அவர் மர வேலைகள் நிறைந்த அறையைத் திறந்து என்னை அழைத்துக்கொண்டு போனார். அறை நகர்ந்து கொண்டே இருந்தது. இரு பகலும் ஒரு இரவும்  நடந்திருப்போம். அறையின் முடிவில் சிலர் எந்தச் சலனமுமில்லாது ஏடுகளை ஆராய்ந்துகொண்டேயிருந்தனர். எங்களைக் கண்டு  எதுவும்  பேசவில்லை. அடிக்கடி கண்ணாடியைச் சரி செய்துகொண்டு படியெடுத்துக்கொண்டேயிருந்தனர்.

“யார் இவர்கள்?” என்று கேட்டேன். “சாம வேதத்தை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் இசைஞானிகள்” என்றார் குலசிங்கம்.

“இளையராஜாவின் குழுவினரா?” என்றேன் “இல்லை இல்லை, இவர்கள் மேதைகள்” என்றார். திரும்பினேன் பின் பக்க மொட்டையிலிருந்து ‘சரிகமபதநிச” ஆவியாகிக்கொண்டிருந்தன. சற்றுப் பின் மேதைகள் உறைநிலையாய் போனார்கள். (more…)

December 21, 2009 at 2:52 pm Leave a comment

விட்டு விடுதலையாகி…

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

nwshad 0

இங்கே..,
பூமியில், ஆசியாக் கண்டத்தில், இலங்கையில், கொழும்பில், பழைய டப்ளியு பெரேரா மாவத்தையில், 186/2 இலக்க அறையில், கணிணி முன் உட்கார்ந்து, தலைநகரில் தற்கொலைத் தாக்குதல் பற்றிச் சிறுகதை எழுதிக் கொண்டிருக்கிறேன்…

இப் பெருவெளிச் சுழற்சி முடிவடைந்து, இதனை விட்டு விடுதலையாகி விட மட்டும்… இன்னும் ஒரு மணி நேரத்தில் தலைநகரில், ஒரு இராணுவ உயர்  அதிகாரியைக் குறி வைத்து வெடித்துச் சிதறவிருக்கிறேன். உலகில் வாழும் கடைசி மணித்துளியில், ஒரு சிறுகதை எழுதிக் கொண்டிருக்கிறேன்..
கதைக்கு விட்டு விடுதலையாகி என்று தலைப்பு வைத்திருக்கிறேன். கொஞ்சம்தான் எழுதியிருக்கிறேன். இன்னும் முற்றும் போடவில்லை. ஆனால், இலக்கை நெருங்கும் நேரம் நெருங்குகிறது. (more…)

August 7, 2009 at 9:11 am Leave a comment

எம்.ஜி.ஆர்.கொலைவழக்கு – ஷோபாசக்தி

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

sopashakthy

கேளுங்கள் பௌசர்! இதுதான் கதை. இந்தக் கதையை நீங்கள் நம்பலாம் அல்லது நம்பாதிருக்கலாம். இந்தக் கதையை நீங்கள் உங்கள்  பத்திரிகையில் பிரசுரிப்பதும் பிரசுரிக்காமல் விடுவதும் உங்கள் பிரச்சினை. இந்தக் கதை நடந்து அதிக நாட்களாகவில்லை. நீங்கள் பெரியார்  நினைவு விழாவுக்குப் பாரிஸிக்கு வந்துவிட்டுப் போனீர்களே, அதற்கு இரண்டு நாட்கள் கழித்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. அன்று கடும் குளிர்நாள். மைனஸ் ஏழு என்றளவில் குளிர் வதைத்தது. நான் வெளியே எங்கேயும் போவதில்லை என்ற முடிவுடன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகிய மஹ்முட் தர்வீஷ் பற்றிய விவரணப் படம் ஒன்றை நான்  பார்த்துக் கொண்டிருந்த போது எனது சொந்தக்காரப் பொடியன் நியூட்டன் என்னைத் தொலைபேசியில் அழைத்து “மாமா நாங்கள் டொனாஸைப் பிடிச்சு வைச்சிருக்கிறம். நீங்கள் ஒருக்கா என்ர வீட்ட வரவேணும்” என்றான். எனக்கு டொனாஸ் என்றால் யாரென்று  தெரியவில்லை. நான் “அது ஆர் டொனாஸ்?” என்று கேட்டேன். (more…)

July 3, 2009 at 6:49 am Leave a comment


December 2017
M T W T F S S
« Jun    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Categories

Feeds

Flickr Photos

Recent Posts