Posts filed under ‘ஆசிரிய தலையங்கம்’

இனவாதம் அழிவு வாதமே!

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் 1978க்குப் பின் மைய அரசாங்கம் மீண்டுமொருமுறை “சர்வ வல்லமை” பொருந்தி செயற்படுவதற்கான அரசியல் அடித்தளத்தை இலங்கை ஆளும் தரப்பிற்கு வழங்கியுள்ளது.

கேள்விக்குட்படுத்தப்பட முடியாத நிறைவேற்றதிகாரமிக்க ஜனாதிபதியின் அதிகாரங்களுடன் புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கக்கூடிய பாராளுமன்றப் பலத்தையும் பெற்றுவிடக் கூடிய அரசியல் சூழலானது, அரசியலமைப்பு ரீதியாக இலங்கை புதிய மாற்றத்திற்குள் நகர்வதை உறுதிப்படுத்தியுள்ளது.

அமுலுக்கு வரவுள்ள புதிய அரசியலமைப்பானது இலங்கை அரசினதும் அரசாங்கத்தினதும் பண்புகளில் கணிசமான மாற்றத்தை பிரதிபலிக்கக் கூடியதாகவே இருக்கும். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அடித்தளமான அகபுறக்காரணிகளை தீர்ப்பதற்கு மாற்றாக, மேலும் இந்த விடயங்களில் புதிய அரசியலமைப்பானது சிங்கள தேசியவாத சிந்தனைகளை அரசின் கொள்கையாக முன்னிலைப்படுத்தும் என்பதை துணிந்து எதிர்வு கூறமுடியும். (more…)

Advertisements

June 3, 2010 at 8:49 pm Leave a comment

ஆசிரிய தலையங்கம்

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010

இலங்கையின் பெருமளவிலான மக்கள் மோசமான உளவியல் நெருக்கடிக்குள்ளாகி தவிக்கின்றனர்.” என்று சொல்கிறது அண்மையில் வெளிவந்த ஆய்வறிக்கையொன்று. இதன் அர்த்த அடியாழத்தை புரிந்து கொள்ள முயற்சிப்பதே பெரும் கலக்கத்தையும் அச்சத்தையும் நமக்கு தருவதாக உள்ளது. இந்த உண்மைச் சித்தரிப்புக்கு மத்தியில் தான், இந்நிலையை மாற்றுவதற்கான சிந்தனை, செயன்முறைகளையிட்டு பேசவும் உரையாடவுமான வெளிகளை உருவாக்க வேண்டியுள்ளது.

இந்த இயங்கியல் விதி வரலாற்றில் நமக்கு மட்டுமான புதியதொரு போக்கல்ல என்பதும் வெளிப்படையானது. கடந்த முப்பது வருட காலத்திற்குள் இலங்கையில் உருவான பல் மொழிகளில் எழுதக்கூடிய எழுத்தாளர்கள், அரசினாலும் ஆயுத இயக்கங்களினாலும் தனிமனித அதிகாரங்களினாலும் உயிர்கள் பறிக்கப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும், தாய் நாடு இழந்தவர்களாக துரத்தப்பட்டும் நெருக்கடிகளை எதிர்கொண்டபோதும் எழுத்தியக்கம் ஓயவில்லை.

இந்த உண்மைக்கு இலங்கையின் தமிழ் மொழிக் களன் விதிவிலக்கானதல்ல. மூத்த எழுத்தாளர்கள், அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள், புதிய தலைமுறை எழுத்தாளர்கள் அனைவரும் நெருக்கடிக் காலகட்ட எழுத்தாளர்களாகவே கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். நமது இலங்கை தமிழ் மொழிச் சூழல் மூன்று தலைமுறை எழுத்தாளர்களால் இலங்கை, புலம்பெயர் நாடுகளென பரந்தும் விரிந்தும் கிடக்கிறது. படைப்பூக்கமும் சிந்தனைத் திறனும் துணிச்சலும் வாய்க்கப்பெற்ற புதிய தலைமுறை தமது அனுபவங்களையும் பார்வைகளையும் இணையவழி எழுத்தினூடாக பதிவு செய்து வருகிறது. எழுத்திற்கான களத்தை அகலிக்கவும் மானிட அனுபவத்தை தரிசிக்கவுமான வல்லமை நமது எழுத்தாளர்களிடமுள்ளது. அதன் உச்ச விளைச்சலை இனிநாம் பெறத்தான் போகிறோம்.

இதனை சாத்தியப்படுத்தும் செயற்பாடுகளில் ஒன்றாகவே ‘எதுவரை” இதழ் வெளிவரவேண்டும் என்பதே எமது நோக்கும் இலக்கும். இந்தச் சிறுமுயற்சி தேக்கமுறாது முன்செல்ல உங்கள் அனைவரதும் பங்களிப்புத் தேவை! தோழமையுடன் ஆசிரியர்

March 15, 2010 at 3:58 pm Leave a comment

அதிகாரத்தை நோக்கிய மாற்றுக் குரல்கள் தொடர்க…: எம்.பௌசர்

எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009
இலங்கை இன்Editorialறு மிக மோசமான அரசியல், இராணுவச் சூழலுக்குள் தள்ளப்பட்டு நிற்கிறது. உள்நாட்டளவில் தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் விசுவரூபம் கொண்டுள்ள அதேவேளை, உலகின் பல்வேறு நாடுகளின் ஆதிக்கப் போட்டியும் இலங்கை மீது அழுத்தமாய் கால்பதித்து வருகிறது.

தேசிய இனப்பிரச்சினை, யுத்தத்தின் பின்விளைவாய் தோன்றியுள்ள அகதிகள், பொருளாதார நெருக்கடி, ஜனநாயக மறுப்பு, மனித உரிமை மீறல்கள், புனர்வாழ்வு புனரமைப்பு, அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் உள்நாட்டளவில் முக்கியத்துவமாக உள்ளன.

சர்வதேச ரீதியாக உலக ஆதிக்கப் போட்டியின் காரணமாக தெற்காசியாவின் பகடைக்காயாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது. இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின் நலன்களுக்கான அரசியல் போட்டிக் களமாக இலங்கை மாறியும் விட்டது.

இந்த நிலையில், நாம் இலங்கை அரசை முற்றுமுழுதாக ஆதரிப்பதோ, தமிழ்த் தேசியவாதத்தை ஆரத்தழுவி நிற்பதோ இந்த நெருக்கடியை சரியாக அணுகுவதில் பாரிய (more…)

December 21, 2009 at 2:57 pm Leave a comment

கசப்பும் கடும்துன்பமும்…

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

வார்த்தைகளால் விபரணம் செய்ய முடியாத மனித  அவலமும் வெம்மையும் அச்சமும் அடக்குமுறையும் இலங்கை மண்ணில் சர்வமும்  வியாபித்துள்ளது. இந்த அழுகிய புதைகுழிக்குள்ளிருந்து மீண்டெழ எவ்வித வழியுமற்று மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும்  இலங்கையின் அனைத்து மக்களினதும் வாழ்வு தொடரும் அரசியற் போர் சூதாட்டக்களத்தில் பணயம் வைக்கப்பட்டுள்ளது.Editorial

அழிவின் அரசியலும் போராட்டத்தின் அழிவும் தொடர்கிறது. இன்றைய உச்ச நெருக்கடிக்கும் மனித அவலத்திற்கும், உள்நாட்டளவில்  பிரதான பாத்திரப் பொறுப்பாளிகள் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளின் தலைமையுமே! இந்த உண்மையை நேரடியாக சுட்டிக்காட்டுவதற்கு தயங்கும் போக்கும் இன்றைய நிலைக்கு வலுச்சேர்த்தே வந்திருக்கிறது.

இவ்விரு அதிகார மையங்களுக்கிடையில் நிகழும் போரை தேசிய இனப் பிரச்சினையுடன் மாத்திரம் சம்பந்தப்படுத்தி எம்மால்  பார்க்கமுடியவில்ல. இருதரப்பிற்குமே நீடித்து நிற்கும் தேசிய இனப் பிரச்சினைக்கு சாத்தியமான வழியில் அரசியல் தீர்வு காண  வேண்டுமென்ற நிலைப்பாடு கிடையவே கிடையாது! (more…)

August 18, 2009 at 4:02 pm Leave a comment


July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts