ஒகோனி மக்களின் போராட்டம் – சொகரி எகின்னே

June 2, 2010 at 4:39 pm Leave a comment

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

நைகர் ஆற்றின் மற்றைய கழிமுகப் பிரதேசங் களைப் போல, 1958ல் ஒகோனிகளின் நிலத்தில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது அந்த நிலத்தின் வரலாற்றில் நிகழ்ந்த துர்ப்பாக்கிய நிகழ்வாகும். அந்த மக்களின் துயரத்தில் கென்சரோ விவாவின் குறுக்கீடு முக்கியமானதாகும். அது அவர்களின் போராட்டத்தில் பாரிய தாக்கம் செலுத்தியது. இப்போராட்டத்தில் ஒன்பது ஒகோனி செயல்பாட்டாளர்கள் தூக்கிலிடப் பட்டனர்.

நதிப் பிரதே அரசின் தலைநகர் போட் வராகெட்டிலிருந்து வடக்குப் பக்கமாக உள்ள 400 சதுர மைலில் பரந்து கிடக்கும் 200 கிராமங்களில் கிட்டத்தட்ட 5,00,000 ஒகோனி மக்கள் வாழ்கிறார்கள். கழிமுகத்தின் மற்றைய பிரதேசங்களைப் போல ஒகோனிகளின் நிலத்திலும் நூற்றுக்கணக்கான குழாய்கள் குடிமனைகளுக்கூடாகவும் விவசாய நிலங்களுக்கூடாகவும் மசகு எண்ணெய்யை கொண்டு செல்கின்றன. அவைகளிலிருந்து வெடித்தெழும் தீச்சுவாலைகளால் கரும் தூசும் கக்கும் சூழலை மாசுபடுத்துகின்றன. கடந்த 40 வருடங்களாக நாள் தவறாமல் இந்நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இவை எண்ணெய் கம்பெனிகளின் கவனக்குறைவாலும் பராமரிப்பு குறைவாலும் நிகழ்கின்றன. சூழல் துஷ்பிரயோகம் தொடர்ந்து வரும் அரசாங்கங்களின் பாராமுகம், சரியான வளப்பங்கீடு இன்மை, விவசாய நிலங்களின் சேதத்துக்கு இழப்பீடு இன்மை போன்றவையே நைகர் கழிமுகப் பிரதேசங்களில் நடைபெறும் போராட்டத்துக்கு காரணங்களாகும்.

நைஜீரியாவின் வரலாற்றில் ஒன்பது ஒகோனி செயற்பாட்டாளர்களை தூக்கிலிட்டது ஒரு முக்கிய நிகழ்வாகும். வன்முறை, மோசடி இயல்பு கொண்டது நைஜீரிய சர்வாதிகார ஆட்சி என்பதை இந்நிகழ்வு நிரூபிக்கிறது. 1992ல் செல்பெற்றோலியம் அபிவிருத்தி கம்பெனி (ELF  உடனும் Agip உடனும் இணைந்து செயல்படுவது) நைஜீரியாவின் மொத்த எண்ணெய் உற்பத்தியின் அரைப்பங்கை உற்பத்தி செய்தது. அவைகளின் 94 எண்ணெய் வயல்களில் ஐந்து ஒகோனி நிலத்தில் உள்ளன.

நைஜீரிய அரசாங்கம், செல் கம்பெனி ஆகிய இரு கொடுங்கோலர்களுக்கும் எதிரான ஒகோனி மக்களின் போராட்டத்தின் நோக்கம் தங்களது இருப்புக்கு மாற்று ஏற்பாட்டை அடைதலாகும். சமஷ்டி ஆட்சிமுறையும் உச்ச அளவில் இராணுவமயப்பட்டது மான நைஜீரிய அரசாங்கம் மோசடிகளும் சுயநலமும் மலிந்ததாகும். அது நரமாமிசம் உண்ணும் பிசாசு நிலைக்கு இழிந்துள்ளது. அதன் பிரதான விசுவாசி பல்தேசியக் கம்பெனிகளாகும். அவைகள் எண்ணெய் வர்த்தகத்துக்குக்காக மக்களையும் வளங்களையும் துஷ்பிரயோகம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளன.

நைஜீரிய சமஷ்டி அரசாங்கம் இனிமேலும் ஒகோனி மக்களது பொதுச் சொத்துக்களை நிர்வகிப்பவராக இருக்கக் கூடாது என்றும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டுமென்ற பயமில்லாமல் எண்ணெய் கம்பெனிகள் செயல்பட்டு சூழலை நாசமாக்கக் கூடாதென்றும் ஒகோனி மக்கள் உறுதியாக கூறுகின்றனர். இதன் பொருட்டாக ஒத்துழையாமை யையும் நேரடி நடவடிக்கையையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு வன்முறையற்ற இயக்கமொன்ற கென்சரோ விவா தலைமையில் இயங்குகிறது. அது பல வகைகளில் மார்ட்டின் லூதர் சிங்கின் சிவில் உரிமைகள் இயக்கத்தை ஒத்தது. கென்சரோவிவா தனித்தனியாக ஆனால் தங்களுக்குள் தொடர்புடைய மூன்று எதிரிகளுடன் போராட வேண்டிய நிலையில் உள்ளார். முதலாவது நைஜீரிய அரசு இரண்டாவது செல் கம்பெனி. மூன்றாவது தரப்பினர் குறைந்தளவு எதிர்ப்புடையவர்களெனினும் மிகவும் சிக்கலான வர்கள். அவர்கள் மேலோங்கிய (elite)  ஒகொனிகளும் பாரம்பரிய ஆட்சியாளர் அடங்கிய குழுவினராவர்.

சரோவிவா ஒகோனி மக்களை தன்னாட்சிக் காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடத் தூண்டினர். பாப்பே, எலெமெ, கோகனா, கென்கனா, நையோகனா, ரை என்ற ஆறு பிராந்தியங்களாக பிரிபட்டிருக்கும் ஒகோனிகளுக்கு பொதுவான அடையாளம் ஒன்றை – உலகளாவிய அடையாளம் ஒன்றை உருவாக்குவது இதற்கு முதல்படியாகும். உரிமை மசோதாவும் ஒகோனிகளுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை கொடுத்தது. அது சுயநிர்ணயம், வளக்கட்டுப்பாடு, தன்னாட்சி போன்ற உரிமைகளையும் கோர வழி செய்தது.
ஒகோனி மக்களை இயக்குவதற்கான கருவிகளாக தனித்துவ அடையாளமும் உரிமைகள் மசோதாவும் இருந்தன. இந்த உரிமைகள் மசோதாவை கென்சரோ விவாவே எழுதினார். 26 ஆகஸ்டு 1990 ஆறு கோத்திரங்களின் தலைவர்கள் உட்பட 30 முக்கிய ஒகோனிகள் இதை ஏற்று கைச்சாத்திட்டனர். எலெமே கோத்திரம் மட்டும் இதை ஏற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்திலிருந்து விலகிக்கொண்டது. பின் நோக்கி பார்க்கும் போது எலெமே கோத்திரத்தின் பின்வாங்கல் சுயநலமானதென்பதும் அதனால் போராட்டம் பின்னடைந்தது என்பதும் தெளிவா கிறது. கடைசியில் சரோ விவாவை அது தனிமைப் படுத்தியது.

உரிமைகள் மசோதா ஒகோனி மக்களின் காலனித்துவ காலத்துக்கு முன்னுள்ள வரலாற்றையும் அவர்களின் பிரதேசத்தில் இருந்து எடுக்கும் எண்ணெய் வருமானத்தால்தான் நைஜீரியா செழிக்கிற தென்பதையும் இதற்கு பதிலாக அவர்கள் எதையும் பெறவில்லை என்பதையும் விளக்குகிறது. அது அரசாங்கத்தின் இனக்கொலை மற்றும் ஒகொனி மொழியை இல்லாமல் செய்யும் போக்கையும் ஒகோனி இருப்புக்கு இருக்கும் ஆபத்தையும் எடுத்துக் காட்டுகிறது. கடைசியாக அது ஏழு கோரிக்கைகளை நைஜீரிய அரசுக்கு முன்வைக்கிறது. அவைகள் வளக்கட்டுப்பாடு, இனக்குழு தன்னாட்சி மற்றும் சுற்றுச்சூழல் இனியும் சேதமுறாமல் இருக்க 27 பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பவைகளை அக்கோக்கைகள் கொண்டுள்ளன. ஒகோனி மேலோங்கிகளை உரிமைகள் மசோதாவை ஒப்புக்கொள்ள வைப்பது இலகுவானதெனினும் போராட்டத்தில் இணைப்பது இலகுவானதல்ல.

ஒகோனி கோத்திர உட்பூசல் அரசியலின் சிக்கல் களையும் அவைகளிடையே உடன்பாடுகனெ சரோவிவா அரும்பாடு பட்டதையும் தனது புத்தகத்தில் விளக்கும் இக்மே ஒகொண்டா தொடக்கத்திலிருந்தே ஒம்ஓஎஸ்ஒபி (MOSOP-Movement for the Survival of Ogeni People) ஒரு பலவீனமான கூட்டு என்று குறிப்பிடுகிறார். ஆயினும் ஒகோனி உரிமைகள் மசோதாவும் எம்ஓஎஸ்ஓபியும் ஒகோனிக்கு ஓர் அடையாளத்தை வழங்கி அவர்கள் ஓர் இனக்குழுவாக (ethnic) செயல்பட வைத்தது என்பதை மறுப்பதற்கில்லை என்கிறார். விழிம்பு நிலைக்குழுவினரான இளைஞர்களையும் பெண்களையும் எம்ஓஎஸ்ஓபிக்குள் அடக்கிக் கொள்வது சரோ விவாவின் நோக்கம். இதனால் ஒகோனி மக்களின் தேசிய இளைஞர் சபையும் (NYCOP)  ஒகோனி பெண்கள் சங்கங்களின் கூட்டமைப்பும் (FOWA) சரோவின் இலக்கத்தில் முக்கிய பங்கு வகித்தன.

இருந்தபோதிலும் யதார்த்தம் வேறுவிதமாக இருந்தது. 1990ல் இருந்து எம்ஓஎஸ்ஓபி ஒகோனி மேலோங்கிகளின் இயக்கமாக மாறத் தொடங்கியது. இந்த மேலோங்கிகள் ஆங்கிலம் பேசபவர்களாகவும் ஒகோனி வெகுசனங்களை குறிப்பாக பெண்களை ஓரம் கட்டுபவர்களாகவும் இருந்தனர். ஒரு வருடத்தில் ஒகோனி ஐக்கியத்திலும் எம்ஓஎஸ்ஓபி யிலும் பாதக விளைவுகள் ஏற்படத் தொடங்கின. சுதாகரித்துக் கொண்ட சரோவிவா ஒகோனி சார்பான நிலைப்பாடுகளை எடுத்து மக்களின் மனிதனாக மாறினார். அதனால் மேலோங்கிகள் அவரை தங்கள்  நலத்துக்கும் அதிகாரத்துக்கும் எதிரானவராக பார்க்க தொடங்கினர். பல்வேறு நலன்களை கொண்ட குழுவினர் மீது சரோவின் இயக்கத்தின் தாக்கம் பற்றி அடோகியுவெய்சன் இவ்வாறு குறிப்பிடுகிறார். “அரசுக்கும் பல்தேசிய கம்பெனிகளுக்கும் எதிராக ஒரு அசைவியக்கத்தை மேற்கொள்ளும் சரோவிவா பல்வேறு வரலாற்று செயல்பாடுகளையும் உட் செரித்து கொண்டவராக இருந்தார். அவரின் எண்ணெய் மற்றும் சூழல் உரிமைகளுக்கெதிரான போராட்டம் மற்ற சிறுபான்மை இனத்தவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாய் அமைந்தது”.
உள்ளூர் மட்டத்தில் புரட்சிகர செயல்பாடுகளை பூரணமமாக உணராத பாரம்பரிய நோக்குடையவர் களுடனும் மாறுதலை ஏற்றுக்கொள்ள மனோபாவ முடையவர்களுடனும் அவர் மோதினார்.

ஒன்பது ஒகோனி செயல்பாட்டாளர்களின் தூக்கு தண்டனைக்கு பிறகு எம்ஓஎஸ்ஓபி தன்னையும் போராட்டத்தையும் கொண்டு நடத்த முடியவில்லை. குற்றச்சாட்டுக்கள் பெருகின; பிரிவினைகள் மேலெழுந்தன; காட்டிக் கொடுப்புகள் மலிந்தன. எல்லாவற்றையும் விட இயக்கத்தின் மையமாக இருந்த மக்களின் பக்திக்கும் நம்பிக்கையும் உரிய தலைவர் மௌனியாக்கப்பட்டார்.

15 வருடங்களுக்கு பின்னர் நைகர் ஆற்றின் கழிமுகப் பிரதேசத்திலிருந்து நாலு விவசாயிகளும் பூமியின் நண்பர்கள் இயக்கமும் (நெதர்லாந்து) செல் கம்பெனிக்கெதிராக வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு ஹக்கில் (Hague)  நடந்தது. இந்த வழக்கு எண்ணெய் கம்பெனியால் ஏற்படும் சூழல் பாதிப்பையும் கவனக்குறைவையும் வெளிச் சத்துக்கு கொண்டுவந்தது. நீதிக்கான போராட்டம் இன்னும் தொடர்கிறது.

Advertisements

Entry filed under: கட்டுரை.

ஆளுமை – த.இராமலிங்கம் – கருணாகரன் அவலத்தின் வணிகம் – காலச்சுவடு கண்ணன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


June 2010
M T W T F S S
« May    
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts


%d bloggers like this: