மகிந்தராஜபக்சவை சுற்றியுள்ள நெருக்கடிகள் அல்லது ராஜபக்ச குடும்பத்தின் எதிர்காலம்? நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் -கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்

March 8, 2010 at 10:04 am Leave a comment

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
இலங்கைத் தீவில் இப்பொழுது மகிந்த ராஜபக்ஸ அல்லது ராஜபக்ஸ குடும்பம் இரண்டாவது வெற்றியை பெற்றிருக்கிறது. ஒன்று புலிகளுடனான போரின் போது கிடைத்த வெற்றி. அடுத்தது ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றி. இந்த இரண்டு வெற்றிகளும் அநேகமாக யாருமே எதிர்பார்த்திருக்காதவை. ஏன் வெற்றி வெற்றவர்களே எதிர்பார்த்திராத வெற்றிகள் இவை. அதிலும் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்த லின் வெற்றி பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது. அதேவேளை இந்த வெற்றி இலங்கையின் அரசி யல், சமூக, பொருளாதார நிலைமைகளிலும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தவுள்ளன. உண்மையில் இந்த விளைவுகள் சாதகமாவதும் பாதகமாவதும் வெற்றி பெற்ற ராஜபக்ஸ குடும்பத்தின் கைகளில் இல்லை. பதிலாக எதிர்த்தரப்புகளின் கைகளிலேயே அது தங்கியுள்ளது.
இப்பொழுது வெற்றி பெற்றிருப்பவர் மகிந்த ராஜபக்ஸ அல்ல. அவர் இப்போது நெருக்கடி என்ற பெருங்குழியின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இனிவரும் நாட்கள் அநேகமாக மகிந்த ராஜபக்ஸவுக்கான நெருக்கடியாகவும் ராஜபக்ஸ குடும்பத்தின் நெருக்கடியாகவும் இருக்கப் போகின்றன. அதே வேளை இதனை மக்களும் ஏனைய அரசியற் கட்சிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சரியாகக் கையாளாதுவிட்டால், அது மக்களின் மீதான நெருக்கடியாகவும் மாறக்கூடிய அபாயமுண்டு. எதிர்க்கட்சிகள், எதிரணிகள், ஊடகங்கள் மீது ஏற்படக்கூடிய பெரும் அபாயநிலையாகவும் மாறக்கூடும். எது நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை நாடு பெரும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படவேபோகிறது.
இப்போது புலிகளுடனான போர் முடிந்த பின்னர், அது சிங்கள அரசியற் கட்சிகளின் போராகமாறியுள்ளது. சிறுபான்மை மக்களின் மீது செலுத்தப்பட்ட நெருக்கடிகள் தளர்வடைந்து அது, பெரும்பான்மைச் சமூகத்துக்குள்ளேயான நெருக்கடியாக மாற்றமடைந்துள்ளது. புலிகளை முற்றாக அழித்தால் மகிந்த ராஜபக்ஸ தன்னுடைய கையைத் தானே சுட்டுக் கொண்டதாகத்தான் அமையும் என அரசியல் ஆய்வாளர் ஒருவர் புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னே குறிப்பிட்டது இங்கே நினைவுக்கு வருகிறது. இப்போதைய நிலை ஏறக் குறைய அப்படித்தானிருக்கிறது.
மகிந்த ராஜபக்ஸவின் நான்காண்டுகால ஆட்சியா னது இலங்கைத் தீவின் நீண்டகாலப் போரை முடிவுக் குக் கொண்டு வந்தது என்பதைத் தவிர ஏனைய எல்லா விதத்திலும் எதிர்நிலையான விசயங்களையே உருவாக்கியுள்ளது.  ஜே. ஆர்.ஜெயவர்த்தனாவுக்குப் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் உள்ள அத்தனை அதிகாரங்களையும் சிறுபான்மைச் சமூகங்களுக்கெதிராகவும் பிற அரசியற்கட்சிகள், மக்களுக் கெதிராகவும் பாவிக்கக் கூடியவராக மகிந்த ராஜபக்ஸ இப்போதிருக்கிறார். ஜே.ஆரின் காலத்தில் அவருக்குத்தோதாக சிறில் மத்யூ, காமினி பொன்சேகா, லலித் அத்துலத்முதலி போன்றோர் இருந்தனர். மகிந்த ராஜபக்ஸவுக்குத்தோதாக அவருடைய சகோதரர்கள் இருக்கிறார்கள்.
ஜே. ஆர் சிறுபான்மைச் சமூகங்களின் ஜன நாயக உரிமைகள் அத்தனையையும் நிராகரித்து அவர்களின் மீது கேள்விக்கிடமில்லாத வகையில் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகித்தார். எதிர்க்கட்சியான சிறி லங்கா சுதந்திரக் கட்சியைச் சிதறடித்து, அந்தக் கட்சியின் தலைவியாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக் காவின் குடியுரிமையையும் பறித்தார். ஏறக்குறைய இதைப் போன்றதொரு கையாளல் முறைமையைத் தான் மகிந்த ராஜபக்ஸவும் மேற்கொள்கிறார். ஜே.ஆர். தன்னுடைய இரண்டாவது பதவிக்காலத்தில் முடிவில்லாத நெருக்கடிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தார். இந்தியப் படைகளை வெளியேற்ற முடியாமை, பொருளாதாரா நெருக்கடிகள், வேலையில்லாப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமை, இவற்றை வைத்து ஜே.வி.பி மீள் எழுச்சி கொண்டமை என்ற நெருக்கடிகளால் அவர் திணறினார். இறுதியில் வேறு வழியின்றி பிரேமதாஸவிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்து ஒதுங்கிக் கொண்டார். மகிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது பதவிக்காலமும் அத்தகையதொரு கொந்தளிப்புக் காலமாகவே மாறக்கூடிய நிலையே உண்டு. ஆனால், தன்மைகள், வடிவங்கள், தரப்புகள்தான் மாற்றமடையப் போகின்றன.
போரில் பெற்ற வெற்றியைப் பகிர்ந்து கொள்வதற்குப் போட்டியாக ஜெனரல் சரத் பொன்சேகா இப்படித் திடீரென வருவார் என திரு. மகிந்த ராஜபக்ஸவோ ராஜபக்ஸ குடும்பமோ எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், அந்த மாபெரும் நெருக்கடியை முறியடித்து அவர் அல்லது அவர்கள் வெற்றியடைந்து விட்டனர். அதுவும் அதிகப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்குக் கிடைத்த மகத்தான வரவேற்பு இது என்று அரசாங்கத் தரப்பில் சொல்லப்படுகிறது. இவர்கள் எல்லோரும் என்னதான் சொன்னாலும் இந்த வெற்றியை நிராகரிப்போரும் இருக்கிறார்கள். இந்த வெற்றியைக் கடுமையாக எதிர்ப்போரும் இருக்கின்றார்கள். இந்த நிராகரிப்பும் எதிர்ப்பும் தனியே எதிர்க்கட்சிகள், எதிரணிகளின் எதிர்ப்பு என்று கொள்ள முடியாது. அது பொதுமக்களின் மன எதிர்ப்பாக இருப்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும். இதுதான் இங்கே நமது கவனத்திற்குமுரியது. இந்த எதிர்ப்பு அல்லது அதிருப்திதான் இனிவரும் நாட்களின் இலங்கைத் தீவின் நிலவரமாகவும் அரசியலாகவும் இருக்கப்போகிறது. இதுதான் ராஜபக்ஸ குடும்பத்தின் எதிர்காலமாகவும் இருக்கப்போகிறது.
அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை, எதிர்ப்பை திசை திருப்பிவிடுவதற்கு முன்னர் போர் என்ற தேசிய விவகாரம் இருந்தது. இப்பொழுது அது இல்லை. முன்னர் எதிர்க்கட்சிகளோ ஊடகங்களோ அரசாங்கத்தின் மீது போர்க்கொடி தூக்கினால், தேசவிரோதக் குற்றஞ் சாட்டி அவற்றை அடக்கிவிடுவதற்கு அரசாங்கத்துக்கு வாய்ப்பிருந்தது. பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்ற போர்வையில் அரசாங்கத்தை எதிர்ப்போர் எவரின் மீதும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்கு வசதி கிடைத்தது. எத்தகைய ஜனநாயக மறுப்பையும் வெற்றிகரமாகச் செய்யவும் முடிந்தது. புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற ஒரேயொரு குற்றச் சாட்டுகளின் மூலம் எவரையும் கட்டிப்போடவும் காணாமற்போகச் செய்யவும் கூடியதாக இருந்தது.
இதன் மூலம் எத்தகைய அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளையும் திசை திருப்பிச் சமாளித்துக் கொள்வதற்கும் அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் ஆட்சியாளருக்கு கடந்த காலங்களில் போர் என்ற விவகாரம் வாய்ப்பாக இருந்தது. ஆனால், அது இப்போது இல்லை. ஆகவே இன்று மகிந்த ராஜபக்ஸ வெட்ட வெளியில் நிற்கிறார். எதிலும் மறைந்து கொள்ள முடியாத, எதைச் சொல்லியும் திசைதிருப்ப முடியாத ஒரு பகிரங்க வெளியில் நிற்கிறார். அதே வேளை அவருடைய கடந்த காலம் என்பதும் பெரும் பாரங்களையுடையதாகவே இருக்கிறது. குடும்ப ஆதிக்கம், ஊழல், போர்க்குற்றங்கள், ஊடக வன்முறை, ஜனநாயக மறுப்பு என்ற பல விசயங்கள் அவருக்கு இந்தச் சுமையைக் கொடுக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டு களையெல்லாம் வெற்றி கொண்டு, வெளியே அவர் பல மான நிலையில் இருப்பதைப் போலத் தென்பட்டாலும் அவருடைய கட்டமைப்பினுள்ளும் அவரைச் சுற்றியும் அவர் நெருக்கடிக்குள்ளாகித்தானிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலை அடுத்து தென்பகுதியில் இந்தத் தேர்தல் தவறானது என்று நடத்தப்பட்ட 02.02.2010 இல் நடத்தப்பட்ட போராட்டமும் 04.02.2010 இல் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தமையும் இங்கே கவனிக்கத்தக்கன.
அதைப் போல இனிவரும் நாட்களில் அவர் எதிர் கொள்ள வேண்டியிருக்கின்ற அபிவிருத்தி, ஜனநாயக மீளமைப்பு, புனர்வாழ்வு, வேலை வாய்ப்புகளை அளித்தல், சம்பள உயர்வு, பொருளாதார உயர்வுக்கான முயற்சிகள், அரசியற் தீர்வு போன்ற முக்கியமான பிரச்சினைகள் எல்லாம் அவருக்கு உவப்பாக இருக்கப் போவதில்லை. அத்துடன், அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்த தமிழ்க்கட்சிகளும் சற்று விலகியநிலையில், ஒரு புதிய அரசியற் தொடக்கத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால் சிறுபான்மை மக்களின் அரசியற் போராட்டங்களும் இன்னொரு வடிவத்தில் அதிகரிக்கலாம். (இது, சிறுபான்மைக் கட்சிகள் எப்படிக்கையாளப்போகின்றன என்பதைப் பொறுத்தே இருக்கிறது). வடக்குக் கிழக்கில் மீள் கட்டுமானம், புனர்வாழ்வு என்பவற்றுக்கு பெருமளவு நிதி தேவைப்படுகிறது. முன்னரைப்போல இந்தப் பிரதேசத்தை யாருடைய கண்களிலிருந்தும் அரசாங்கம் மறைத்து விட முடியாது.
அத்துடன், சர்வதேச ரீதியாகவும் அரசாங்கத்துக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் உண்டு. அதிகாரத்துக்கு மீண் டும் வந்திருக்கும் மகிந்த ராஜபக்ஸவுடன் என்னதான் சமரசங்களைச் செய்தாலும் அடிப்படைமுரண்கள் நிழலாகவே இருக்கப்போகின்றன. இது அபிவிருத்திக்கான உதவிகள், கடன்களில் தாமதங்களை ஏற்படுத்தும். பொதுவாக எந்தத் தரப்பையும் லாவகமாகக் கையாளும் அரசியல் மரபு மகிந்தவின் கூட்டணியிடம் இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. போரின்போது இந்தக் கரடுமுரட் டுத் தனத்தை பிறர் அனுசரிக்கவே வேண்டியிருந்தது. அதற்குக் காரணம், புலிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற அவர்களின் தேவைகள். ஆனால், இனிமேல் அந்தமுறைமை சரிப்படாது.
ஆனால், இதையெல்லாம் சிலர் வேறுவிதமாகப் பார்க்கிறார்கள். மகிந்த ராஜபக்ஸவும் குழு வினரும் இப்போது நெருக்கடி களால் தாம் சூழப்பட்டிருப்பதை நன்கறிவார்கள். இதனால், அவர் களுடைய உளவியல், முன்னரை விடவும் எதிர்நிலையில் – எச்சரிக்கையுணர்வு அதிகரித்த நிலையில் தான் இருப்பார்கள். அதாவது அபாயங்கள் தங்களை நோக்கி வருவதைத் தடுப்பதற்கான காரியங்களை முற்கூட்டியே செய்ய முனைவார்கள் என்கின்றனர் இவர்கள். எதிர்ப்பாளர்களை மடக்குதவற்கான உபாயங்களில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருக்கும் ராஜபக்ஸ வினர் இந்தத்தடவை அதை உச்சநிலையில் பயன்படுத்துவர் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படியான நிலையில் பொதுமக்களும் எதிரணிகளும் மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும். குறிப்பாக தன் மீது வரும் நெருக்கடியைத் திசை திருப்பி, மக்களின் நெருக்கடியாக மாற்றும் ஒரு உபாயத்துக்கும் ஜனாதிபதி போகக் கூடும். இது நாட்டின் ஜனநாயகத் துக்குப் பெரும் சேதங்களை ஏற்படுத்தும்.
ஆக, இப்போது இரண்டு பக்கமும் கூருள்ள ஒரு கத்தியைப் போன்ற அரசியல் நிலைமையே இலங்கைத் தீவில் உருவாகியிருக்கிறது. இதை மிக நுட்பமாகவும் விவேகமாகவும் கையாள வேண்டிய பொறுப்பில் அரசாங்கத்துக்கு வெளியே இருக்கும் சகல தரப்பினரும் இருக்கின்றனர். முன்னைய ஜனாதிபதிகளுக்கு வெளியே இருந்த அதிருப்தியாளர்கள், எதிர்ப்பாளர்களின் மனதிலிருந்த கோபம் வேறு. இப்போதிருக்கும் கோபம் வேறு. இது தீவிரம் நிறைந்தது. காட்டமானது. ஆகவே மக்களை ஒருங்கிணைப்பதற்கு அதிக சிரமப்படப்போவதில்லை.
குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகள் எதற்கும் அவ சரப்படாமல் களநிலைமைகளைச் சரியாக மதிப்பிட்டு காரியமாற்ற வேண்டிய சந்தர்ப்பம் இது. தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை தொடக்கம் போரில் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் அந்த மக்களின் வாழ்க்கை தொடர்பான ஏராளம் முக்கிய மையப்பிரச் சினைகள் தமிழ் முஸ்லிம் கட்சிகளின் முன்னே இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறை பற்றிய சிந்தனை இந்தக் கட்சிகளுக்கு இன்று அவசியம். ஒரு பக்கத்தில் தேசியப் பிரச்சினைகளில் அரசாங்கத்தை தீர்வு நோக்கி அழைத்துச் செல்வது. மறுபக்கத்தில் வடக்குக் கிழக்கின் பிரச்சினைகளில் தேசியத் தரப்புகளை அழைத்து வருவது. இந்த இரண்டு வகையான அணுகுமுறைகள் தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்குத் தேவையாக இருக்கின்றன. இதற்கு இந்தக் கட்சிகள் தமக்குள் கடக்க வேண்டிய பல தடைக்கோடுகளை இவை கடக்க வேண்டும். அப்படிக் கடக்கவில்லை என்றால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது இந்தக் கட்சிகளுக்கான பொறியாகிவிடும்.
பெரும் நெருக்கடி வளையத்தால் சூழப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ஸ ஒரு போதும் சும்மா இருக்கப் போவதில்லை. வியூகங்களை வகுப்பதிலும் போர்களை உருவாக்குவதிலும் வெற்றி கொள்வதிலும் அவர் ஒரு ஓயாத மனிதராக இருக்கிறார். அவரைத் தோற்கடிப்பதற்கான கணிதங்களோடு, வியூகம் அமைக்கவுள்ளவர்கள் அவரையும் விட வேகத்தோடும் விவேகத் தோடும் இருப்பது அவசியம். தவிர, அரசு என்ற பலமான ஒரு அதிகார மையம் ஜனாதிபதியின் கைகளில் இருக்கிறது. எனவே எதிர் வியூகம் என்பது சாதாரணமாக இருக்கப்போவதில்லை.
இங்கே வெற்றி தோல்வி என்பது தனி நபர்களுக்கும் மகிந்த ராஜபக்ஸ ஒரு போதும் சும்மா இருக்கப்போவதில்லை. வியூகங்களை வகுப்பதிலும் போர்களை உருவாக்குவதிலும் வெற்றி கொள்வதிலும் அவர் ஒரு ஓயாத மனிதராக இருக்கிறார். அவரைத் தோற் கடிப்பதற்கான கணிதங்களோடு, வியூகம் அமைக்கவுள்ளவர்கள் அவரையும் விட வேகத்தோடும் விவேகத் தோடும் இருப்பது அவசியம். தவிர, அரசு என்ற பலமான ஒரு அதிகார மையம் ஜனாதிபதியின் கைகளில் இருக்கிறது. எனவே எதிர் வியூகம் என்பது சாதாரணமாக இருக்கப்போவதில்லை.
இங்கே வெற்றி தோல்வி என்பது தனி நபர்களுக்கிடையிலானது – அல்லது அமைப்புகளுக்கிடையிலானது என்று அர்த்தப்படுத்தப்படவில்லை. மாறாக அரசாங்கத்தை மக்களின் நலன்களை நோக்கியும் பிரச்சினைகளை நோக்கியும் பணியவைப்பது, ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் போரிடுவது என்பதாகவே கொள்ளப்படவேண்டும். இதுதான் இன் றைய நிலையில் இலங்கைத் தீவின் மிகப் பெரிய சவால்களாக கருதப்படுகின்றன. இவையே இலங்கையின் ஆகப் பெரும் அச்சுறுத்தல்களாகவும் எதிர்காலம் குறித்த கவலைகளாகவும் பலருக்கும் இருக்கின்றன.

மகிந்தராஜபக்சவை சுற்றியுள்ள நெருக்கடிகள் அல்லது ராஜபக்ச குடும்பத்தின் எதிர்காலம்?  நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள். –கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
இலங்கைத் தீவில் இப்பொழுது மகிந்த ராஜபக்ஸ அல்லது ராஜபக்ஸ குடும்பம் இரண்டாவது வெற்றியை பெற்றிருக்கிறது. ஒன்று புலிகளுடனான போரின் போது கிடைத்த வெற்றி. அடுத்தது ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றி. இந்த இரண்டு வெற்றிகளும் அநேகமாக யாருமே எதிர்பார்த்திருக்காதவை. ஏன் வெற்றி வெற்றவர்களே எதிர்பார்த்திராத வெற்றிகள் இவை. அதிலும் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்த லின் வெற்றி பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது. அதேவேளை இந்த வெற்றி இலங்கையின் அரசி யல், சமூக, பொருளாதார நிலைமைகளிலும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தவுள்ளன. உண்மையில் இந்த விளைவுகள் சாதகமாவதும் பாதகமாவதும் வெற்றி பெற்ற ராஜபக்ஸ குடும்பத்தின் கைகளில் இல்லை. பதிலாக எதிர்த்தரப்புகளின் கைகளிலேயே அது தங்கியுள்ளது.இப்பொழுது வெற்றி பெற்றிருப்பவர் மகிந்த ராஜபக்ஸ அல்ல. அவர் இப்போது நெருக்கடி என்ற பெருங்குழியின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளார். இனிவரும் நாட்கள் அநேகமாக மகிந்த ராஜபக்ஸவுக்கான நெருக்கடியாகவும் ராஜபக்ஸ குடும்பத்தின் நெருக்கடியாகவும் இருக்கப் போகின்றன. அதே வேளை இதனை மக்களும் ஏனைய அரசியற் கட்சிகளும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சரியாகக் கையாளாதுவிட்டால், அது மக்களின் மீதான நெருக்கடியாகவும் மாறக்கூடிய அபாயமுண்டு. எதிர்க்கட்சிகள், எதிரணிகள், ஊடகங்கள் மீது ஏற்படக்கூடிய பெரும் அபாயநிலையாகவும் மாறக்கூடும். எது நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை நாடு பெரும் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படவேபோகிறது. இப்போது புலிகளுடனான போர் முடிந்த பின்னர், அது சிங்கள அரசியற் கட்சிகளின் போராகமாறியுள்ளது. சிறுபான்மை மக்களின் மீது செலுத்தப்பட்ட நெருக்கடிகள் தளர்வடைந்து அது, பெரும்பான்மைச் சமூகத்துக்குள்ளேயான நெருக்கடியாக மாற்றமடைந்துள்ளது. புலிகளை முற்றாக அழித்தால் மகிந்த ராஜபக்ஸ தன்னுடைய கையைத் தானே சுட்டுக் கொண்டதாகத்தான் அமையும் என அரசியல் ஆய்வாளர் ஒருவர் புலிகளின் வீழ்ச்சிக்கு முன்னே குறிப்பிட்டது இங்கே நினைவுக்கு வருகிறது. இப்போதைய நிலை ஏறக் குறைய அப்படித்தானிருக்கிறது. மகிந்த ராஜபக்ஸவின் நான்காண்டுகால ஆட்சியா னது இலங்கைத் தீவின் நீண்டகாலப் போரை முடிவுக் குக் கொண்டு வந்தது என்பதைத் தவிர ஏனைய எல்லா விதத்திலும் எதிர்நிலையான விசயங்களையே உருவாக்கியுள்ளது. ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்குப் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் உள்ள அத்தனை அதிகாரங்களையும் சிறுபான்மைச் சமூகங்களுக்கெதிராகவும் பிற அரசியற்கட்சிகள், மக்களுக் கெதிராகவும் பாவிக்கக் கூடியவராக மகிந்த ராஜபக்ஸ இப்போதிருக்கிறார். ஜே.ஆரின் காலத்தில் அவருக்குத்தோதாக சிறில் மத்யூ, காமினி பொன்சேகா, லலித் அத்துலத்முதலி போன்றோர் இருந்தனர். மகிந்த ராஜபக்ஸவுக்குத்தோதாக அவருடைய சகோதரர்கள் இருக்கிறார்கள். ஜே. ஆர் சிறுபான்மைச் சமூகங்களின் ஜன நாயக உரிமைகள் அத்தனையையும் நிராகரித்து அவர்களின் மீது கேள்விக்கிடமில்லாத வகையில் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகித்தார். எதிர்க்கட்சியான சிறி லங்கா சுதந்திரக் கட்சியைச் சிதறடித்து, அந்தக் கட்சியின் தலைவியாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக் காவின் குடியுரிமையையும் பறித்தார். ஏறக்குறைய இதைப் போன்றதொரு கையாளல் முறைமையைத் தான் மகிந்த ராஜபக்ஸவும் மேற்கொள்கிறார். ஜே.ஆர். தன்னுடைய இரண்டாவது பதவிக்காலத்தில் முடிவில்லாத நெருக்கடிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தார். இந்தியப் படைகளை வெளியேற்ற முடியாமை, பொருளாதாரா நெருக்கடிகள், வேலையில்லாப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமை, இவற்றை வைத்து ஜே.வி.பி மீள் எழுச்சி கொண்டமை என்ற நெருக்கடிகளால் அவர் திணறினார். இறுதியில் வேறு வழியின்றி பிரேமதாஸவிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்து ஒதுங்கிக் கொண்டார். மகிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது பதவிக்காலமும் அத்தகையதொரு கொந்தளிப்புக் காலமாகவே மாறக்கூடிய நிலையே உண்டு. ஆனால், தன்மைகள், வடிவங்கள், தரப்புகள்தான் மாற்றமடையப் போகின்றன. போரில் பெற்ற வெற்றியைப் பகிர்ந்து கொள்வதற்குப் போட்டியாக ஜெனரல் சரத் பொன்சேகா இப்படித் திடீரென வருவார் என திரு. மகிந்த ராஜபக்ஸவோ ராஜபக்ஸ குடும்பமோ எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், அந்த மாபெரும் நெருக்கடியை முறியடித்து அவர் அல்லது அவர்கள் வெற்றியடைந்து விட்டனர். அதுவும் அதிகப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்குக் கிடைத்த மகத்தான வரவேற்பு இது என்று அரசாங்கத் தரப்பில் சொல்லப்படுகிறது. இவர்கள் எல்லோரும் என்னதான் சொன்னாலும் இந்த வெற்றியை நிராகரிப்போரும் இருக்கிறார்கள். இந்த வெற்றியைக் கடுமையாக எதிர்ப்போரும் இருக்கின்றார்கள். இந்த நிராகரிப்பும் எதிர்ப்பும் தனியே எதிர்க்கட்சிகள், எதிரணிகளின் எதிர்ப்பு என்று கொள்ள முடியாது. அது பொதுமக்களின் மன எதிர்ப்பாக இருப்பதை இங்கே நாம் கவனிக்க வேண்டும். இதுதான் இங்கே நமது கவனத்திற்குமுரியது. இந்த எதிர்ப்பு அல்லது அதிருப்திதான் இனிவரும் நாட்களின் இலங்கைத் தீவின் நிலவரமாகவும் அரசியலாகவும் இருக்கப்போகிறது. இதுதான் ராஜபக்ஸ குடும்பத்தின் எதிர்காலமாகவும் இருக்கப்போகிறது. அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை, எதிர்ப்பை திசை திருப்பிவிடுவதற்கு முன்னர் போர் என்ற தேசிய விவகாரம் இருந்தது. இப்பொழுது அது இல்லை. முன்னர் எதிர்க்கட்சிகளோ ஊடகங்களோ அரசாங்கத்தின் மீது போர்க்கொடி தூக்கினால், தேசவிரோதக் குற்றஞ் சாட்டி அவற்றை அடக்கிவிடுவதற்கு அரசாங்கத்துக்கு வாய்ப்பிருந்தது. பயங்கரவாதத்துக்கெதிரான போர் என்ற போர்வையில் அரசாங்கத்தை எதிர்ப்போர் எவரின் மீதும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்கு வசதி கிடைத்தது. எத்தகைய ஜனநாயக மறுப்பையும் வெற்றிகரமாகச் செய்யவும் முடிந்தது. புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற ஒரேயொரு குற்றச் சாட்டுகளின் மூலம் எவரையும் கட்டிப்போடவும் காணாமற்போகச் செய்யவும் கூடியதாக இருந்தது. இதன் மூலம் எத்தகைய அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளையும் திசை திருப்பிச் சமாளித்துக் கொள்வதற்கும் அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் ஆட்சியாளருக்கு கடந்த காலங்களில் போர் என்ற விவகாரம் வாய்ப்பாக இருந்தது. ஆனால், அது இப்போது இல்லை. ஆகவே இன்று மகிந்த ராஜபக்ஸ வெட்ட வெளியில் நிற்கிறார். எதிலும் மறைந்து கொள்ள முடியாத, எதைச் சொல்லியும் திசைதிருப்ப முடியாத ஒரு பகிரங்க வெளியில் நிற்கிறார். அதே வேளை அவருடைய கடந்த காலம் என்பதும் பெரும் பாரங்களையுடையதாகவே இருக்கிறது. குடும்ப ஆதிக்கம், ஊழல், போர்க்குற்றங்கள், ஊடக வன்முறை, ஜனநாயக மறுப்பு என்ற பல விசயங்கள் அவருக்கு இந்தச் சுமையைக் கொடுக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டு களையெல்லாம் வெற்றி கொண்டு, வெளியே அவர் பல மான நிலையில் இருப்பதைப் போலத் தென்பட்டாலும் அவருடைய கட்டமைப்பினுள்ளும் அவரைச் சுற்றியும் அவர் நெருக்கடிக்குள்ளாகித்தானிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலை அடுத்து தென்பகுதியில் இந்தத் தேர்தல் தவறானது என்று நடத்தப்பட்ட 02.02.2010 இல் நடத்தப்பட்ட போராட்டமும் 04.02.2010 இல் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தமையும் இங்கே கவனிக்கத்தக்கன. அதைப் போல இனிவரும் நாட்களில் அவர் எதிர் கொள்ள வேண்டியிருக்கின்ற அபிவிருத்தி, ஜனநாயக மீளமைப்பு, புனர்வாழ்வு, வேலை வாய்ப்புகளை அளித்தல், சம்பள உயர்வு, பொருளாதார உயர்வுக்கான முயற்சிகள், அரசியற் தீர்வு போன்ற முக்கியமான பிரச் சினைகள் எல்லாம் அவருக்கு உவப்பாக இருக்கப் போவதில்லை. அத்துடன், அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடன் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்த தமிழ்க்கட்சிகளும் சற்று விலகியநிலையில், ஒரு புதிய அரசியற் தொடக்கத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால் சிறுபான்மை மக்களின் அரசியற் போராட்டங்களும் இன்னொரு வடிவத்தில் அதிகரிக்கலாம். (இது, சிறுபான்மைக் கட்சிகள் எப்படிக்கையாளப்போகின்றன என்பதைப் பொறுத்தே இருக்கிறது). வடக்குக் கிழக்கில் மீள் கட்டுமானம், புனர்வாழ்வு என்பவற்றுக்கு பெருமளவு நிதி தேவைப்படுகிறது. முன்னரைப்போல இந்தப் பிரதேசத்தை யாருடைய கண்களிலிருந்தும் அரசாங்கம் மறைத்து விட முடியாது. அத்துடன், சர்வதேச ரீதியாகவும் அரசாங்கத்துக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் உண்டு. அதிகாரத்துக்கு மீண் டும் வந்திருக்கும் மகிந்த ராஜபக்ஸவுடன் என்னதான் சமரசங்களைச் செய்தாலும் அடிப்படைமுரண்கள் நிழலாகவே இருக்கப்போகின்றன. இது அபிவிருத்திக்கான உதவிகள், கடன்களில் தாமதங்களை ஏற்படுத்தும். பொதுவாக எந்தத் தரப்பையும் லாவகமாகக் கையாளும் அரசியல் மரபு மகிந்தவின் கூட்டணியிடம் இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. போரின்போது இந்தக் கரடுமுரட் டுத் தனத்தை பிறர் அனுசரிக்கவே வேண்டியிருந்தது. அதற்குக் காரணம், புலிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற அவர்களின் தேவைகள். ஆனால், இனிமேல் அந்தமுறைமை சரிப்படாது. ஆனால், இதையெல்லாம் சிலர் வேறுவிதமாகப் பார்க்கிறார்கள். மகிந்த ராஜபக்ஸவும் குழு வினரும் இப்போது நெருக்கடி களால் தாம் சூழப்பட்டிருப்பதை நன்கறிவார்கள். இதனால், அவர் களுடைய உளவியல், முன்னரை விடவும் எதிர்நிலையில் – எச்சரிக்கையுணர்வு அதிகரித்த நிலையில் தான் இருப்பார்கள். அதாவது அபாயங்கள் தங்களை நோக்கி வருவதைத் தடுப்பதற்கான காரியங்களை முற்கூட்டியே செய்ய முனைவார்கள் என்கின்றனர் இவர்கள். எதிர்ப்பாளர்களை மடக்குதவற்கான உபாயங்களில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருக்கும் ராஜபக்ஸ வினர் இந்தத்தடவை அதை உச்சநிலையில் பயன்படுத்துவர் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படியான நிலையில் பொதுமக்களும் எதிரணிகளும் மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும். குறிப்பாக தன் மீது வரும் நெருக்கடியைத் திசை திருப்பி, மக்களின் நெருக்கடியாக மாற்றும் ஒரு உபாயத்துக்கும் ஜனாதிபதி போகக் கூடும். இது நாட்டின் ஜனநாயகத் துக்குப் பெரும் சேதங்களை ஏற்படுத்தும். ஆக, இப்போது இரண்டு பக்கமும் கூருள்ள ஒரு கத்தியைப் போன்ற அரசியல் நிலைமையே இலங்கைத் தீவில் உருவாகியிருக்கிறது. இதை மிக நுட்பமாகவும் விவேகமாகவும் கையாள வேண்டிய பொறுப்பில் அரசாங்கத்துக்கு வெளியே இருக்கும் சகல தரப்பினரும் இருக்கின்றனர். முன்னைய ஜனாதிபதிகளுக்கு வெளியே இருந்த அதிருப்தியாளர்கள், எதிர்ப்பாளர்களின் மனதிலிருந்த கோபம் வேறு. இப்போதிருக்கும் கோபம் வேறு. இது தீவிரம் நிறைந்தது. காட்டமானது. ஆகவே மக்களை ஒருங்கிணைப்பதற்கு அதிக சிரமப்படப்போவதில்லை. குறிப்பாக சிறுபான்மைக் கட்சிகள் எதற்கும் அவ சரப்படாமல் களநிலைமைகளைச் சரியாக மதிப்பிட்டு காரியமாற்ற வேண்டிய சந்தர்ப்பம் இது. தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை தொடக்கம் போரில் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் அந்த மக்களின் வாழ்க்கை தொடர்பான ஏராளம் முக்கிய மையப்பிரச் சினைகள் தமிழ் முஸ்லிம் கட்சிகளின் முன்னே இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறிமுறை பற்றிய சிந்தனை இந்தக் கட்சிகளுக்கு இன்று அவசியம். ஒரு பக்கத்தில் தேசியப் பிரச்சினைகளில் அரசாங்கத்தை தீர்வு நோக்கி அழைத்துச் செல்வது. மறுபக்கத்தில் வடக்குக் கிழக்கின் பிரச்சினைகளில் தேசியத் தரப்புகளை அழைத்து வருவது. இந்த இரண்டு வகையான அணுகுமுறைகள் தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்குத் தேவையாக இருக்கின்றன. இதற்கு இந்தக் கட்சிகள் தமக்குள் கடக்க வேண்டிய பல தடைக்கோடுகளை இவை கடக்க வேண்டும். அப்படிக் கடக்கவில்லை என்றால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது இந்தக் கட்சிகளுக்கான பொறியாகிவிடும். பெரும் நெருக்கடி வளையத்தால் சூழப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ஸ ஒரு போதும் சும்மா இருக்கப் போவதில்லை. வியூகங்களை வகுப்பதிலும் போர்களை உருவாக்குவதிலும் வெற்றி கொள்வதிலும் அவர் ஒரு ஓயாத மனிதராக இருக்கிறார். அவரைத் தோற்கடிப்பதற்கான கணிதங்களோடு, வியூகம் அமைக்கவுள்ளவர்கள் அவரையும் விட வேகத்தோடும் விவேகத் தோடும் இருப்பது அவசியம். தவிர, அரசு என்ற பலமான ஒரு அதிகார மையம் ஜனாதிபதியின் கைகளில் இருக்கிறது. எனவே எதிர் வியூகம் என்பது சாதாரணமாக இருக்கப்போவதில்லை. இங்கே வெற்றி தோல்வி என்பது தனி நபர்களுக்கும் மகிந்த ராஜபக்ஸ ஒரு போதும் சும்மா இருக்கப்போவதில்லை. வியூகங்களை வகுப்பதிலும் போர்களை உருவாக்குவதிலும் வெற்றி கொள்வதிலும் அவர் ஒரு ஓயாத மனிதராக இருக்கிறார். அவரைத் தோற் கடிப்பதற்கான கணிதங்களோடு, வியூகம் அமைக்கவுள்ளவர்கள் அவரையும் விட வேகத்தோடும் விவேகத் தோடும் இருப்பது அவசியம். தவிர, அரசு என்ற பலமான ஒரு அதிகார மையம் ஜனாதிபதியின் கைகளில் இருக்கிறது. எனவே எதிர் வியூகம் என்பது சாதாரணமாக இருக்கப்போவதில்லை. இங்கே வெற்றி தோல்வி என்பது தனி நபர்களுக்கிடையிலானது – அல்லது அமைப்புகளுக்கிடையிலானது என்று அர்த்தப்படுத்தப்படவில்லை. மாறாக அரசாங்கத்தை மக்களின் நலன்களை நோக்கியும் பிரச்சினைகளை நோக்கியும் பணியவைப்பது, ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் போரிடுவது என்பதாகவே கொள்ளப்படவேண்டும். இதுதான் இன் றைய நிலையில் இலங்கைத் தீவின் மிகப் பெரிய சவால்களாக கருதப்படுகின்றன. இவையே இலங்கையின் ஆகப் பெரும் அச்சுறுத்தல்களாகவும் எதிர்காலம் குறித்த கவலைகளாகவும் பலருக்கும் இருக்கின்றன.

Advertisements

Entry filed under: கட்டுரை.

ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் உறுதிப்படுத்த ஓர் அரசியல் வலுமிக்க கூட்டணி தேவை.- ஒமர் வாசகர் கடிதங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


March 2010
M T W T F S S
« Dec   May »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts


%d bloggers like this: