ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் உறுதிப்படுத்த ஓர் அரசியல் வலுமிக்க கூட்டணி தேவை.- ஒமர்
March 8, 2010 at 9:31 am Leave a comment
எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றிக்கு பகாரமாக சிங்கள மக்களின் பெரும்பான்மையினர் மகிந்த ராஜபக்சவின் மறுபடியும் ஜனாபதியாக்கியுள்ளனர். தற்போதுள்ள ஜனாதிபதி முறையினை இல்லாம லாக்கப் போவதாக 2005 இல் ஜே.வி.பி இன் ஒத் துழைப்புடன், வெற்றி பெற்ற மகிந்த தரப்பு அந்த வாக்குறுதியினை பாதுகாக்கத் தவறியது மாத்திரமல்ல, இதற்கு மேல் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப் பது என்ற பேச்சுக்கு இடமேயில்லை என பிரகடனம் செய்து விட்டது. மறுபுறம் தமிழ், முஸ்லிம், மலையத் தமிழ் மக்கள் செறிவாகவுள்ள ஆறு மாவட்டங்களிலும் மகிந்த தோல்வி யைத் தழுவியுள்ளார். சிரித்துச் சிரித்தும், தமிழில் பேசிய வாறும் அடுத்த கட்டப்பழிவாங்குதல் அடுத்தடுத்து நடை பெறும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கிண்ணியா, மூதூர் போன்ற பிரதேங்களில் இரவு நேர மீன்பிடி தடைசெய்யப்பட்டுள்ளது.
ஆறு வருடங்கள் அல்ல எட்டு வருடங்கள் ஆதிக்கத்; தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றினை நாடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டு இப்போது கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஏகபோக அதிகாரத்தில் வீற்றிருப்பது உறுதி யாகிவிட்டது. லங்கா பத்திரிகை சீல் வைக்கப்பட்டது. நல்ல வேளை நீதித்துறைக்கு இன்னமும் சற்று உயிர் இருப்பதனால் தடை நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் வெற் றியைத் தொடந்து அரசியல் எதிர்ப்பாளர்களின் மீதான பழிவாங்குதல் ஆரம்பமாகிவிட்டது. அரசியல் விமர் சனங்களுக்கு ஆப்பு வைக்கும் முயற்சிகள் தீவிரமயப் படு;த்தப்பட்டுள்ளது. பொன்சேகா பாதுகாப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டு தனியாளாக்கப்பட்டுவிட் டார். அவர் எதிர்நீச்சல் போட்டுத் தப்பிப்பிழைப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். நிச்சயமாக அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை தயாராக்கப்பட் டுக் கொண்டிருக்கும். இதனால்தான் அவர் நாடுகடந்து செயற்படாதவாறு தடுக்கப்பட்டுள்ளார். அவருடன் தோளுடன் தோள் நின்று போரிட்ட இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தம்முடன் இருப்பவர்கள் யாவரும் தேசாபிமானிகள் மற்றவர் கள் அனைவரும் தேசத்துரோகிகள் என்ற மகிந்த ஆளுங்குழுமத்தின் கூராயுதம் தேர்தலுக்கு முன்பும் பின்பும் மிகவும் இயல்பாக அரசியல் எதிரிகளை குறிவைப்பதற்குப் பயன்படுத்தப்படு கின்றது.
மங்கள சமரசிங்க கூறுவது போல, தேர்தல் முடிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும் கணணிப் பொறிமுறையில் மோசடி செய்யப்பட்டு மகிந்த ஜனா திபதியாக்கப்பட்டிருப்பது உண்மையானால், இதற்கு மேல் ஜனநாயக முறைமை என்பது இலங்கையில் கேள் விக்குறியாகவே இருக்கும். மேலும் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் எதிர்ப்பாளர்கள் குறிப் பாக ஜே.வி.பி.யினர் பழிவாங்கப்படு;வார்கள் எனின் ஜனநாயக வழிக்குத் திரும்பிவிட்ட அவர்களோ அல் லது அவர்களைப் போன்ற வேறு சக்திகளோ மறுபடி யும் ஆயுதப் போராட்டம் நோக்கி தள்ளப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். ஜனநாயக பூர்வமான நல் லாட்சியின் மீது நம்பிக்கையிழக்கப்படுகின்ற போது ஆயுத வழிமுறையின் மீது நம்பிக்கையேற்படுவது தவிர்க்க முடியாததாகும். தமிழ் மக்களின் அரசியல் போராட்ட வரலாறு ஆயுத வழிமுறைக்குத் தள்ளப்பட் டதற்கான பொறுப்பினை அரச பயங்கரவாதம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனையொத்த விளைவைத்தான் தென்னிலங்கையும் விரைவில் மீண்டும் சந்திக்க வேணடியிருக்கும்.
2010 ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மற் றும் மத்திய பிரதேசங்களைச் சேர்ந்த பெரும்பான்மை யான தமிழ், முஸ்லிம், மலையக தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்ச ஆட்சியின் மீதான தமது ஆழமான அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். விடுதலைப் புலிகளுடனான இரண்டு தசாப்த கால யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்து மேற்படி மூன்று சமூகங்களின் மீதான அரசபடைகளின் கெடுபிடிகளையும் விடுதலைப் புலிகளின் கெடுபிடிகளையும் முடிவிற்குக் கொண்டு வந்ததற்குப் உபகாரமான முஸ்லிம், தமிழ் மற்றும் மலையத் தமிழ் மக்கள் உண்மையில் மகிந்த ராஜபக் சவிற்கு வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வெளிப்படுத்திய செய்தி வேறுவிதமாக உள்ளது. மகிந்த ராஜபக்ச, ஹெல உறுமய கூட்டின் ஆட்சியின் மீதான ஆழமான அச்சம்தான் அது. விடுதலைப் புலி களின் தொடர் தோல்வி ஆரம்பித்த 2007 தொடக்கம் 2009 யுத்தம் முடிவடைந்த பின்னுள்ள ஆறு மாதங்கள் வரைக்கும் குறிப்பாக வடக்குக் கிழக்குப் பிரதேசங் களில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட மேலாதிக்க நகர்வுகள் இத்தகைய ஆழமான அச்சத்தை இந்த மக்களுக்கு கொடுத்துள்ளது.
குடும்ப ஆட்சி ஒழிக்கப்படும், ஜனநாயகம் மீட் டெடுக்கப்படும், வீண் விரயம் ஒழிக்கப்படும் என்ற பொன்சேகா வின் கொள்கைகளுக்கு மேற்படி தமிழ், முஸ்லிம், மலையத் தமிழ் சமூகங்கள் வாக்களித்துள்ள னர் என்பதைவிட, எண்ணிக்கைச் சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஒரு மூச்சுவிடும் அவகாசம் கிடைக்கும் என்ற அற்பமான எதிர்ப்புத்தான் அவர்களின் வாக் களிப்புக்குக் காரணம் என்பது நமது கள ஆய்வுகளின் போது கிடைத்த பொதுவான கருத்துக்களாகும். (சில தரப்பினர் இதனைத் தந்திரோபாய ரீதியான வாக் களிப்பு என்றும் கூறுகின்றனர் )
நான்கு வருட மகிந்த குடும்ப ஆட்சி இந்த சமூகங் களுக்குப் பிடிக்கவில்லை. ஆக தம்மை ஆள்வதற்கான ஆணையினை மகிந்த ஆளுங்குழுமத்திற்கு இந்த சமூகங்கள் வழங்கவில்லை. இது வெளிப்படையான உண்மை. மகிந்த இதனை ஏற்றுக் கொள்வதுடன், இந்த பிரதேசங்களில் தனக்கு வாக்களித்த மக்களும் இருக்கின்றார்கள் எனவே குறிப்பிட்ட பிரதேசங்களின் மீள்கட்டமைப்பு, மற்றும் நீண்டகால அபிவிருத்திக்கு தான் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட் டினை மேற்கொள்ளப் போகின்றாரா அல்லது அரசி யல் பழிவாங்கலை செய்யப் போகின்றாரா என்பது தான் கேள்வி. இரண்டாவது நிலைப்பாட்டினை எடுப்பாராயின், அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையும், ஏழு வருடங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ச குழுத்தின் ஆட்சியையும் எப்படி முகங்கொடுக்கப் போகின்றார்கள் என்பதை எண்ணிக்கைச் சிறுபான்மை யான முஸ்லிம், தமிழ், மலைத் தமிழ் சமூகங்களும் மிகவும் எச்சரிக்கையுடன் தீர் மானிக்க வேண்டும்.
மகிந்த ஆளும் குழுமத்திற்கு இரண்டு விதமான சிந்தனைப் போக்குகள் உள்ளது. ஒன்று ஒற்றை ஆட்சி முறையினை உறுதிப்படுத்திக் கொள்வது: வடக்கு கிழக்கில் எண்ணிக்கைச் சிறுபான்மை சமூகங்களின் இன ரீதியான அரசியலை முடிவிற்குக் கொண்டு வரு வது: இன ரீதியான கட்சிகளைப் பலவீனப்படுத்து வது: சனத்தொகை வீதத்தை மாற்றியமைத்து இன ரீதியான தனித்துவத்தை இல்லாமல் செய்வது, சித்தாந்த ரீதியில் சிங்கள சமூகத்திற்கு இருக்கும் அச்சத் தைப் போக்கி அவர்களைத் திருப்தி செய்து, மிகப் பெரும் பாலான சிங்கள மக்களின் வாக்குப் பலத்தில் ஆட்சியதி காரத்தை என்றென்றைக்கும் உறுதிப்படுத் திக் கொள்வது. இரண்டாவது போக்கு, நிலவுகின்ற ஜனநாயக முறைமைகளையும் அரசியல் எதிர்பாளர் களையும் ஆட்களை அச்சுறுத் தியும் விலைக்கு வாங்கி யும் சலுகைகளை வழங்கியும் தமக் கான உறுதியான அரசியல் தளத்தினை நிறுவிக் கொள்வது இந்த வழி முறையானது இலங்கை தழுவிய அளவில் மேற் கொள்ளப்படுகின்றது.
இப்படிப்பட்ட ஒரு மோசமான அரசியல் சக்தியை எதிர்கொண்டு முறியடிப்பதில் இரண்டு வகை மாற்று அரசியல் சக்திகள் களத்தில் உள்ளன. ஒன்று, வழமை யான சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளும் அதன் கூட்டுகளும். இரண்டாவது, மெய்யான முற்போக்கு, ஜனநாயக சக்திகள் இவர்கள் முதலாவது தரப்பை விடவும் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளனர். எதிரியின் கொடூரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சமயங்களில் இந்த இரண்டு பிரிவினர்களுக்கு இடை யிலும் கூட தற்காலிகமான ஒரு ஐக்கிய முன்னணி தேவைப்படலாம். அது போன்ற ஒன்றிற்குத்தான் மக்கள் விடுதலை முன்னணி போன்ற அமைப்பு முயற்சிக்கின்றது.
ஆக, அரசியல் எதிரி மோசமானவன் என்பதை இனங் கண்டு கொண்டால், அவனைத் தொலைத்துக் கட்டுவதற்கு பலமான கூட்டணி அவசியமாகும். கூட்டணியின் பிரதான இலக்கு எதிரியை எவ்வளவு விரைவாக ஒழித்துக் கட்ட முடியுமோ அவ்வளவு விரைவாக அதனைச் செய்து முடிக்க வேண்டும். இந்த பிரதான இலக்கினை அடைவதற்காக எந்தவகையான விட்டுக் கொடுப்புகளையும் செய்ய கூட்டணியின் உறுப்பினர்கள் தயாராக இருக்க வேண்டும். இந்த விட யத்தில் வழவழா கூட்டணி ஒருபோதும் சரி வராது. இக் கூட்டணி மூலமாக எனக்கு என்ன கிடைக்கும் என்பதை விட பொதுவில் மக்களுக்கு என்ன கிடைக் கும், நாட்டுநலனுக்கு என்ன கிடைக்கும் என்பதுதான் கூட்டணிக் கான அடித்தளமாக இருக்க வேண்டும். இவ்வாறாக பலமான கூட்டணியினை அமைப்பது முடியாது போனால், எதிரி உங்கள் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி தனித்தனியாக ஒழித்துக் கட்டி விடுவான். இதற்கு ஈரமான உதாரணம், 1987ம் ஆண்டு, விடுதலைப் புலிகள் டொலோவிற்கு எதிராக துப்பாக்கி களை திருப்பிய கணமே, இதர தமிழ்ப் போராட்ட அமைப்புக்கள் தமக்குள் வலுவான கூட்டணியினை அமைத்து தமது சக்திகளை ஒருங்கு திரட்டியிருந் தால், விடுதலைப்புலிகளின் அழித்தொழிப்பு போக்கினைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம், விடுதலைப் போராட்டத் தின் திசைவழியும் இன்று வேறு விதமாக இருந்திருக்கக் கூடும்.
இன்று மகிந்த ஆளும் குழுமம் அனைத்து வகை யான ஜனநாயக மீறல்களையும் செய்து கொண்டு அதன் உச்சமாக, தேர்தல் முடிவுகளை கணணி நுட்பத் தைப் பயன்படுத்தி அல்லது அச்சுறுத்தி வெற்றியை தன்பக்கம் திருப்பியிருக்கும் என்பது உண்மையானால், இக் குழுமத்தின் ஆபத்தான பண்பினை இதர அரசியல் கட்சிகள் சரியாகக் கணிப்பிட்டுக் கொள்ள வேண்டும். முதலாவதாக வலுவாக கூட்டணியினை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆதாரங்களைக் கொண்டு பரந்து பட்ட மக்கள் முன்பாக, குறிப்பாக சிங்கள மக்கள் முன் பாக அம்பலப்படுத்தல் வேண்டும், சர்வதேச சமூகத் திற்கு உண்மைகளைக் கொண்டு செல்ல வேண்டும். மக்களைத் தொடர்ச்சியாக வீதிக்கு இறக்க வேண்டும். இவற்றைச் செய்யத் தவறினால் மிக விரைவில் எதிர்க் கட்சிகள் ஒவ்வொன்றாக அழித்தொழிக்கப்பட்டு விடும். இதற்கென அரச பயங்கரவாதத்தினால் பல் வேறு வழிமுறைகள் – சாம, பேத, தான, தண்டம் பயன் படுத்தப்படும். இந்த வழிமுறைகள் ஏற்கனவே தொடங் கப்பட்டுவிட்டன. இப்போதும் கூட எதிரணிகள் விழித்துக் கொள்ளாவிட்டால், அவர்களின் அரசியல் முடிவு இப்போதே எழுதப்பட்டுவிட்டது.
Advertisements
Entry filed under: கட்டுரை.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed