இந்து சமுத்திரத்தில் வல்லரசுப் பலப்பரீட்சை, இலங்கை உள் நாட்டுப் போரின் பூகோள அரசியல்- -மஹ்டி டாரியஸ் நஸெம்றோயா

March 8, 2010 at 6:34 am Leave a comment

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் உயிரைக் காவுகொண்ட, தமிழ்ப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்குமான, கொடூர யுத்தத்தின் பால் வௌ;வேறு வெளிநாட்டு அரசுகள் காட்டிய ஆதரவும் நிலைப்பாடுகளும், இந்த அந் நிய அரசுகளின் பூகோள – போர்த் தந்திரோபாய அக்கறை கள் பற்றிப் பெருமளவில் கூறுகின்றன. இந்திய அரசினதும் மற்றும் சுற்றயல் (periphery) என்று குறிப்பிடக்கூடிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற ஒரு குழுவைச் சேர்ந்த நாடுகளின் அரசுகளினதும் நிலைப்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ ஆதரவாக இருந்தது. யுத்தம் முடி வுக்கு வந்தபின் இலங்கையின் உறவுக்கான ஏதாவது எதிர்கால சாத்தியம் கருதி இந்த அரசுகளிற் பெரும் பாலானவை இந்த ஆதரவை மௌனமாகவும் வழங் கின.
இதற்கு மாறாக, யுரேஷியா எனக் கூட்டாகக் குறிப்பிடப்படக் கூடிய, ஈரான், ரஷ்யா போன்ற ஒரு தொகுதி நாடுகளின் அரசுகள் இலங்கை அரசை ஆதரித்தன. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் போரிடும் இரு பகுதிகளுக்குமான இந்த யுரெஷியா மற்றும் சுற்றயல் இவற்றின் ஆதரவுகளின் துருவத்தன்மையானது, உண் மையிலேயே இன்னமும் பரந்துபட்டதான ஒரு போராட்டத்தின் வாசனையை முகர்ந்தறிவதைத் தடுத்து விடுகிறது. இலங்கைத்தீவின் எல்லைகளுக்கும் இப் பிராந்தியத்தின் எல்லைகளுக்கும் மிகவும் அப்பால் பரந்தகன்ற ஒரு போராட்டமது.
இது ஏன் அவ்வாறுள்ளது? இப்படியான ஒரு கேள்விக்கான விடையிற் பெரும்பகுதி, அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதுமான சர்வதேச மேலாதிக்கத் திற்கெதிராக யுரேஷிய பெரு நிலப்பரப்பில் வளர்ந்து வரும் ஒரு கூட்டின் உருவாக்கத்துடன் தொடர்புபட்டது. பிறிமாக்கோவ் கோட்பாடு கொடுத்த உற்சாகத் தினால் மொஸ்கோ, தெஹ்ரான், பீஜிங் மற்றும் அவர்களின் கூட்டாளிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இந்த யுரேஷியன் கூட்டு. ‘கிழக்கின் நேட்டோ’ என சில வெளியுறவுக் கொள்கை வட்டாரங்களிடையே குறிப்பிடப்படும், உண்மையான இராணுவப் பரிமாணங்களைக்கொண்ட ஒரு பாதுகாப்புக்கூட்டான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), இந்தப் பூகோள- அரசியல் செயலூக்கத்தின் ஒரு மெய்யான குறியீடா கும். இச் செயற்பாட்டின் ஒரு களமாகத்தான்  2009ல் இலங்கை உள் நாட்டுப் போரின் கடைசி அத்தியாய மானது அனேகமாக அமைந்தது.
சீனப்பூதத்தின் நுழைவு: அமெரிக்கா மற்றும் இந்தியாவிடமிருந்து இலங்கை விலகுவதன் ஆரம்பம்.
இலங்கையைப் பொறுத்தளவில் 2007 ஒரு முக்கிய மைல் கல் ஆண்டு. 2007 மார்ச் 12 அன்று, தன் பிரதேசமான அம்பாந்தோட்டையில் சீனர்கள் ஒரு மிகப் பெரிய துறைமுகத்தை நிர்மாணிப்பதை அனு மதிப்பதற்குக் கொழும்பு ஒப்புக் கொண்டது. இத் துறைமுகத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தம், இலங் கைத் துறைமுக அதிகார சபையால் சீனத் துறைமுகப் பொறியியல் கம்பனி மற்றும் சைனோ ஹைடோ கார்ப்பரேஷன் ஆகிய இரண்டு சீனக் கம்பனிகளுடன் முடிவு செய்யப்பட்டுக் கைச்சாத்திடப்பட்டது.  பொருளாதார நன்மைகள் மற்றும் தங்கள் நாட்டுப் போரை முடிவிற்குக்கொண்டு வருவதற்கான சீன உதவி- அனேகமாக இவற்றின் அடிப்படையிலேயே இலங்கை அரசின் தீர்மானம் அமைந்தது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவுடனும் இந்தி யாவுடனுமான இலங்கையின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. சீனாவைச் சுற்றி வளைப்பதும் தன் எல்லை களுக்கப்பால் சீனா ஏதாவது துறைமுகங்களையோ, தளங்களையோ அமைப்பைத் தடுப்பதும் அமெரிக் காவின் கொள்கையாக இருந்து வந்தது. இதன் விளை வாக இலங்கை இராணுவத்திற்கான தன் உதவிகளை அமெரிக்கா குறைத்துக் கொண்டது. இலங்கையை ஒரு சமஷ்டி நாடாக்கி, தமிழர்களுக்குச் சுயாட்சியை வழங்க வேண்டும் என்ற அழுத்தத்தைக் கொழும்பின் மேல் பிரயோகித்ததன் மூலம் தமிழ்ப் புலிகளுக்கான இந்தியாவின் ஆதரவும் அதிகரித்தது. பீஜிங் தனது அரசியல் செல்வாக்கைக் கொழும்புக்கு ஆதரவாகப் பயன்படுத்தியதுடன், இலங்கைக்குப் பெருமளவிலான ஆயுதக் கப்பல்களை அனுப்பவும் தொடங்கிற்று. ஒரு மேலதிக ஒப்பீடாக, 2008ல் இலங்கைக்கான அமெ ரிக்க உதவி வெறும் 7.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வேளையில், சீன உதவியோ ஏறத்தாழ ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தமையைச் சுட்டலாம்.
சீனாவுடனான ஒப்பந்தத்தாலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான விலகலாலும் 2007லிருந்துதான் இலங்கை யுரேஷியக் கூட்டில் ஒரு பகுதியாயிற்று. 2007 இறுதியளவில் ரஷ்யா, ஈரான் மற்றும் சீனாவுடனான பூகோள- போர்த் தந்திரோபாய அரண்களில் இலங்கை தன்னையும் உறுதியாய் இணைத்துக் கொண்டு விட்டது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்தி ரேலியா, கனடா ஆகியவற்றின் அரசுகளும் ஐரோப்பிய யூனியனும் ஏதோ ஒரு விதத்தில் தமிழ்ப் புலிகளுக்குக் கொடுத்த ஆதரவிற்கு இவைதான் உண்மையான அடிப்படைக் காரணங்களேயொழிய, மனிதாபிமான அக்கறைகளல்ல.
இலங்கையுடனான சீன இராணுவத் தொடர்புகள் 1990களில் ஏற்பட்டன என்றாலும் சீன – இலங்கை இராணுவ உறவுகள் மலரத் தொடங்கியது 2007ல்தான். புதுடில்லியிலிருக்கும் கொள்கை ஆய்வுக்கான மத்திய நிலையத்தைச் சேர்ந்த் ப்ரஹ்மா ச்செலானியின் கூற்றுப்படி: ‘இலங்கையின் உள் நாட்டுப் போரில் இராணுவ முட்டுக்கட்டை நிலையினை முடிவுக்குக் கொண்டு வருவதில் சீன ஆயுத விற்பனைகள்தான் தீர்மானகரமான பங்கினை வகித்தன.”  இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கும் சீனத் துறைமுகப் பொறியியல் கம்பனி மற்றும் சைனோ ஹைடோ கார்ப்பரேஷன் ஆகிய இரண்டு சீனக் கம்பனிகளுக்கு மிடையிலான 2007 ஒப்பந்தத்திற்கு சரியாக ஒரு மாதம் கழித்து, ஏப்ரலில், வெடிப்பொருட்கள் மற்றும் பீரங்கி களுக்கான ஒரு பெரிய பேரத்தில் இலங்கை இராணு வத்துடன் சீனா கைச்சாத்திட்டது. அத்துடன், பீஜிங், தமிழ்ப் புலிகளைத் தோற்கடிப்பதில் தெளிவான பங்காற்றிய பல இராணுவ ஜெற் விமானங்களை இலங்கை இராணுவத்திற்கு இலவசமாகக் கொண்டு சென்று கொடுக்கவும் செய்தது.
அம்பாந்தோட்டையில் சீனத் துறைமுகத்தை அமைக்கக் கொழும்பு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஈரானும் ரஷ்யாவும்கூட இலங்கையுடனான தங்கள் இராணுவத் தொடர்புகளை விரைந்து அபிவிருத்தி செய்யத் தொடங்கின. இந்த விஷயத்தில், பீஜிங், மொஸ்கோ, தெஹ்ரான் எல்லாம் இலங்கையுடன் கூட்டுறவும் இராணுவ ஒப்பந்தங்களும் வைத்துள் ளன. 2007லும், 2008லும் இலங்கையின் தலைவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் தெஹ்ரான், மொஸ்கோ, பீஜிங் ஆகிய இடங்களுக்கு மேற் கொண்ட விஜயங்கள் எல்லாம் இந்த யுரேஷிய நாடுகளின் உதவியுடன் தமிழ்ப் புலிகளின் இராணுவ ஆற்றலை அழிக்கச் செய்வதற்கான இலங்கையின் முன்னேற்பாடுகளுடன் தொடர்புபட்டவை.
கடைசியில் சீனா, ரஷ்யா, ஈரான் யாவுமே இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்திற்கு முன்பாகவே இலங்கை இராணுவத்தின் ஆயுதபலத்தை மேம்படுத்த உதவின. யுரேஷியக் கூட்டைப் பொறுத் தளவில், இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடிப்ப தென்பது சீனத்துறைமுகம் நனவாவதை நிச்சயப்படுத்திக் கொள்வதும், சீனா, ரஷ்யா, ஈரானுடன் நட்பைப் பேணும் ஒரு இலங்கை அரசு தொடர்வதை உறுதிப்படுத்துமுகமாகக் கொழும்பில் ஆட்சி மாற்றத் திற்கான எந்த ஒரு சாத்தியத்தையும் தடுப்பதுமாகும். பயமுறுத்தலாக விளங்கும் தமிழ்ப்புலிகள் பலமிழக்கச் செய்யப்பட்டாலன்றி அமெரிக்காவும் அதன் கூட்டளி களும், அனேகமாக இந்தியாவுடன் இணைந்து – சீனாவுடனான இலங்கையின் துறைமுக ஒப்பந்தத்தை இல்லாமலாக்கவும் இலங்கையை யுரேஷிய வட்டத்திலிருந்து விடுவிக்கவுமான நோக்குடன் – இலங்கை அரசைக் கவிழ்க்க முயற்சிக்கலாமென்று இலங்கை அதிகாரிகளுடன் சீன, ரஷ்ய, ஈரானிய அரசுகளும் நம்பினர். இச்சூழலில் 2009 சண்டையின் போது அவர்கள் யாவரும் இலங்கைக்குப் பக்கபலமாக நின்ற துடன், சீனா மற்றும் ரஷ்யாவைப் பொறுத்தளவில் ஐ.நா.பாதுகாப்புச் சபையிலும் ஆதரவாய் விளங்கினர்.
அஸோஷியேற்றட் பிரஸ் (AP) டிசம்பர் 23, 2007ல் அறிவித்தது:
அமெரிக்க செனற் இலங்கைக்கான இராணுவ உதவியைப் பெருமளவில் குறைத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப – முன்னெப்போதுமில் லாத வகையில் இராணுவக் கூட்டுறவு பற்றிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஒரு உயர்மட்ட இராணு வத் தூதுக் குழுவைக் கொழும்புக்கு அனுப்பியதன் மூலம்- ரஷ்யா முன்வந்தது. ஜகேணல் ஜெனரல்ஸ விளதீமிர் மோல்தென்ஸ்கொய் தலைமையிலான உயர் மட்ட ரஷ்ய இராணுவ தூதுகோஷ்டி பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, இராணு வத்தளபதி ஜலெப்டினண்ட் ஜெனரல்ஸ சரத் ஃபொன் சேக்கா மற்றும் விமானப்படைத்தளபதி ரொஷான் குணதிலக்க ஆகியோரைச் சந்தித்ததுடன் நாட்டின் பல முக்கிய இராணுவத் தளங்களுக்கும் விஜயம் செய்தது. ரஷ்ய இராணுவத்தின் ஒரு மூத்த போர்த்தளபதியான கேணல் ஜெனரல் விளதீமிர் மோல்தென்ஸ்கொய் முன்னர் செச்சென்யாவிலிருந்த ரஷ்யப் படைகளின் இயக்கு நிலைத் தளபதியாக இருந்தவர்.இலங்கையைப் போலவே ரஷ்ய சமஷ்டி, சீனா, ஈரான் எல்லாம் தத்தம் நாடுகளிலும் பிரிவினைவாத இயக்கங்களை எதிர் கொள்பவை தான். இந்த இயக்கங்கள் எல்லாம் பூகோள போர்த் தந்திரோபாய காரணங்களுக்காக வெளியாரால் ஆதரிக்கப்படுபவை என நாலு நாடுகளுமே நினைக்கின்றன. 2007ல்,சீனத் துறைமுகத்தை அமைக்க இலங்கை ஒப்புக்கொண்ட பின்னர் அமெரிக்க அரசினால் ஏற்படுத்தப்பட்ட இராணுவ உதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு சீனா வைப் போலவே மாஸ்கோவும் முன்வந்தது மட்டு மன்றி, செச்சென்யாவில் பிரிவினைவாதிகளுக்கெதி ரான இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வை செய்த கேணல் ஜெனரல் விளதீமிர் மோல்தென்ஸ் கொயையும் க்ரெம்ளின் அனுப்பி வைத்தது. கொழும்பிற்கான ஒரு இராணுவ ஆலோசகராக மோல்தென்ஸ் கொய் இலங்கை வந்தார்.
தெஹ்ரானின் உதவியும் இலங்கை இராணுவத் திற்கு மிக முக்கியமானதாக அமைந்தது. இலங்கையி லுள்ள ஒரு செய்தித்தாளான ‘த ஐலண்ட்” இவ்வாறு குறிப்பிட்டது: “எல் ரி ரி ஈ {அல்லது தமிழ்ப்புலித் தாக்குதல் ஒன்றினால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இலங்கை இராணுவம் நசுக்கப்பட்டு விடக்கூடிய பய முறுத்தலிருந்த போது இலங்கையை மீட்பதற்கு ஈரான் முன்வந்தது. ஈரானியத் தலைமையிடம் இலங்கை உதவி கேட்டதும் பல விமானங்கள் நிரம்ப ஈரானிய இராணுவ சாதனங்கள் உடனடியாகவே அனுப்பி வைக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.”
2009ல் ஒரு உயர்மட்ட இராணுவ தூதுக்குழு இலங்கைக்கு வருவதற்கு முன்னரே, ‘போர்த்திறன் சார்ந்த படகுகளின் பாவனையில் ஒரு முன்னணி வல்லுனர் எனப்பரவலாக நம்பப்படும்” ஈரான் எனவும், இலங்கை” ஓர் ஆண்டு காலத்தில் சிறிய போர்ப் படகுகளின் செயற்பாடுகள் சம்பந்தப்பட்ட திறன் களை வளர்த்துக் கொண்டது” எனவுங் கூட ‘த ஐலண்ட்” தெரிவித்தது.
ஈரான், ரஷ்யா, சீனா ஆகியவை இலங்கைக்கு அளித்த உதவியின் எல்லை 2009ல் தமிழ்ப்புலிகளின் மீதான தாக்குதல்களுக்கான இலங்கை இராணுவத்தின் ஆயத்தங்களுக்கான பொருளாதார ஆதரவையும் கூட உள்ளடக்கியது. ஈரானிடமிருந்து மட்டும் இலங்கை பெற்றுக்கொண்டிருந்த உதவியின் அளவு மற்றும் முக்கியத்துவம் இவற்றின் ஆழத்தை ஓரளவு வெளிப் படுத்தும் கட்டுரையொன்றை ‘த ஹிண்டு” செப்டெம் பர் 21, 2009ல் வெளியிட்டது. நவம்பர் 2007ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரான் விஜயம் மேற்கொண்ட பின் இலங்கைக்கு வழங்கிய நாலு மாத வட்டியில்லாக் கடன் வசதியை ஈரான் ஓராண்டாக நீட்டித்தது என அரசினால் நடத் தப்படும் ‘டெய்லி நியூஸ்”  அறிவித்தது.ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹ்மதினொத்து டனான பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து, ஈரானிய அரசு அவ் வசதியை ஜனவரியிலிருந்து ஓகஸ்ற் 31வரை வழங்கிற்று.
இவ்வசதியின் கீழ், 2008ல், 1.05 பில்லியன் டொலர் பெறுமதிக்கு- கிட்டத்தட்ட அதன் மொத்தத் தேவையான – மசகெண்ணையை இறக்குமதி செய்து, தமிழ்ப் புலிகளுடனான அரசின் போர் காரணமாக முக்கியத் துவம் பெற்ற ஒரு ஆண்டின் அன்னியச் செலாவணித் தேவைகளிலிருந்த நெருக்கடியை இலங்கை தளர்த்திக் கொண்டது.இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் செப்டெம்பெர் 3, 2009ல் தெஹ்ரானில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இலங்கைக்கு சாதகமாக, சலுகை வட்டி வீதத்துடனான ஒரு மேலதிக மூன்று மாதக்கடன் பொதியும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஏன் இலங்கையில் ஒரு சீனத் துறைமுகம்? எல்லா இடங்களுமிருக்க ஏன் இலங்கையில்? இலங்கை இந்து சமுத்திரத்தின் கடற் போக்குவரத்துப் பாதையில் ஒரு மிக முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. வர்த்த கம், பாதுகாப்பு, எரிபொருள் வழங்கல், போன்றவற் றுக்கு அத்தியாவசியமான இந்து சமுத்திரத்தின் கடற்பாதைகளின் உயிர்த் துடிப்பான ஒரு சந்திப்பிலுள்ளது இந்த இடம். இதனால்தான், மாஸ்கோ, தெஹ்ரான், பீஜிங் எல்லாம் இலங்கையின் பின்னால் நிற்கின்றன.
சீனத் துறைமுக நிர்மாணம் அம்பாந்தோட்டை யில் நடை பெற்றுக்கொண்டிருக்கையில், எரிபொருள் பாதைகளைக் கைப்பற்றும் ஒரு புதிய பனிப்போரின் பகுதியும் உருவாகிறது. ஆசியாவுக்குச்செல்லும் அனேகமான எரிபொருள் வினியோகங்கள் இலங்கையின் தென்முனையைத் தாண்டியே செல்கின்றன. இதன் காரணமாகத்தான் சீனர்கள் மத்திய கிழக்கு மற் றும் ஆபிரிக்காவிலிருந்து வரும் தங்கள் எரிபொருள் வினியோகங்களைப் பாதுகாப்பதற்காக இந்து சமுத் திரத்தில் ஒரு சங்கிலித் தொடராய்க் கடற்படைத் தளங் களை உருவாக்கும் அவர்களின் திட்டத்தில் இலங்கை யையும் இணைத்துள்ளார்கள். இத் திட்டத்தில் மியான்மார் (பர்மா)வும் ஒரு பங்காளி. அத்துடன், இவ்விரு நாடுகளிலும் அனேகமான விஷயங்களில் அரசுகளின் மேல் இருக்கும் அழுத்தங்கள்,அவை சீனத் துறைமுகங்களைக் கட்டுவதற்காக பீஜிங்குடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களுடன் நேரடித்தொடர்புள்ளவை.
சீனாவுடன் கூடவே ஈரானும்- தனக்கும் சீனா வுக்குமிடையிலான கடற் பாதைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாய்- இலங்கையிலும் பரந்த இந்து சமுத்திரத்திலும் கடல்சார் அக் கறைகளைக் கொண்டுள்ளது. சீனா, ஈரான், இரண்டுமே தங்கள் கடற்படைகளைப் பெருக்கிக் கொண்டுள் ளன. இது வளர்ந்து கொண்டு வரும் முனைப்பொன்றின் அறிகுறி. பால்டிக் கடல், கருங்கடல், செங்கடல், ஏடன் வளை குடா, பாரசீக வளைகுடா மற்றும் அரபிக் கடலிலிருந்து வங்காள விரிகுடா வரை, தென் சீனக் கடல், கிழக்குச் சீனக்கடல், என முழு யுரேஷியாவை யும் சுற்றியுள்ள கடல்கள், நீர்ப்பரப்புகள், யாவும் பல ஆண்டுகளாகவே கடுமையான இராணுவ மயப்படுத் தலுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளன. சரித்திரத்தின் எக்கால கட்டத்திலாவது ஒரே நேரத்தில் இவ்வளவு பெருந் தொகையான போர்க் கப்பல்களை சமுத்திரங் கள் கண்டிரா. யுரேஷிய நீர்ப்பரப்புக்களிலான இந்த இராணுவ மயப்படுத்தல் நடவடிக்கையானது, அடிப்படையில், எதிர்காலத்து மோதலொன்றின் போது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதுடனும் யுரேஷிய நிலப்பரப்பை வளைத்துக் கொள்வதுடனும் சம்பந்தப்பட்டது.
பெலாறுஸ்ஸைப் போலவே, இலங்கையும் 2009ல் SCOவில் இணைந்து கொண்டது. இந்த யுரெஷிய அமைப்பினுள் இலங்கை வந்தமை, யெக்கத்தறீன் பேர்க்கில் நடைபெற்ற – ஈரான் தேர்தல் கலவரங்களை யடுத்து மஹ்மூட் அஹ்மதி நிஜாத் மீது கவனம் படிந் திருந்த – SCO மகா நாட்டில் அறிவிக்கப்பட்டது. ஈரானிய ஜனாதிபதியை மீளத்தெரிவு செய்வதில் SCO தனது முழு ஆதரவையும் செலுத்திக் கொண்டிருந்த வேளையில், தமிழ்ப் புலிகளுக்கெதிரான கூட்டு ஆதர விற்காக இலங்கை நன்றி தெரிவித்துக்கொண்டது.
இலங்கை மற்றும் – ரஷ்யத் தலைமையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பிலும் (Collective Security Treaty Organization, CSTO) உறுப்பினரா யிருந்த -பெலாறுஸ் ஆகிய இரண்டும் SCO வில் பேச்சு வார்த்தைப் பங்காளிகளாக (dialogue partners) கலந்து கொண்டிருந்தன.
ளுஊழுவில் பேச்சுவார்த்தைப் பங்காளியாக இலங்கை கலந்து கொண்டமை, ரஷ்யா, சீனா மற்றும் ஈரானுடனான அதன் போர் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்புகளையும் கூட்டையும் உறுதி செய்கிறது. SCOவின் பேச்சுவார்த்தைப் பங்காளி என்கிற அந்தஸ்து இலங்கையை சீன மற்றும் ரஷ்யாவின் ஆதரவுக் குடையின் கீழ்க் கொண்டு வருகிறது.
SCO சாசனத்தின் சரத்து 14ல் கூறப்பட்டிருக்கா விடினும் ஒரு பேச்சுவார்த்தைப் பங்காளி, அந்த உறவின் கீழ் தனக்கான பாதுகாப்பையும் தற்காப்புக் கான உதவியையும் கோர முடியும். பேச்சுவார்த்தைப் பங்காளிகள், SCOவுடன் பொருளாதார ரீதியிலும் பிணைக்கப்பட்டுள்ளமையானது, ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் அவர்களின் பங்காளிகளின் ஐக்கியத்தால் தோன்றவிருக்கும் யுரேஷியன் ஒன்றியத்துள் இணைவு கொள்வதையும் சாத்தியமாக்குகிறது.
இலங்கையும் யுரேஷியாவிலுள்ள பரந்த முரண்பாடும்.
மேற்குலகம் எனப்படுவதில் இலங்கை உள்நாட் டுப் போரின் கடைசி அத்தியாயத்தைப் பொறுத்தள வில் இரட்டை அளவு கோல்கள் பிரயோகிக்கப் பட்டன. 2008ல் தன் பிரதேச ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வலுக் கட்டாயத்தால் தென் ஒஸெற்றியாவையும் அப்காசியாவையும் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான ஜோர்ஜியா வின் இராணுவ நடவடிக்கைகளை ஆதரித்த அமெரிக் காவும் அதன் தோழமை நாடுகளும், அதனை இலங்கை யைப் பொறுத்தளவில் 2009ல் செய்யவில்லை. சாராம் சத்தில், இலங்கை மற்றும் ஜோர்ஜிய அரசாங்கங்களின் செயற்பாடுகள் அனேகமாகத் துல்லியமான ஒத்த தன்மை கொண்டவை : பிரிந்து போன பகுதியில் இராணுவ பலத்தால் அரசாங்கக் கட்டுப்பாட்டை நிறுவுதல். என்றாலும் இரண்டு விஷயங்களிலும் அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் எதிர்வினை முற்றிலும் வேறுபட்ட விதமானதாக இருந்தது. ஜோர்ஜியா ஆதரவைப்பெற்றது, இலங்கை பெற வில்லை.
மேலும், உள் நாட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்த இராணுவ பலத்தையும் பிரயோகிக்க முடியாதென சர்வதேச ஒப்பந்தப்படி ஜோர்ஜியா சட்டபூர்வமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை அவ்வாறல்ல. சட்ட மொழியில் சொல்வதானால், பிரச்சினைக்கு முன்னர், அப்காசியாவும் தென் ஒசெற்றியாவும் ஜிளோர்ஜிய ஆட்சி முறைக் கட்டமைப்பினுள் சுயாட்சி அந்தஸ்துகளையும் கொண்டிருந்தவை. இப்படிச் சொல்வது இலங்கையில் இடம்பெற்ற எந்தச் சாவையும் நியாயப்படுத்துவதாகவோ அல்லது ஜோர்ஜியாவில் இடம்பெற்ற சண்டையை நியாயப்படுத்துவதாகவோ ஆகாது. ஆனால் பிரயோகிக்கப்பட்ட இரட்டை அளவுகோல்களை இது விளக்கும்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஜோர்ஜியாவை ஆதரித்தமைக்கும் இலங்கையை ஆதரியாமைக்குமான காரணம் யுரேஷியாவை சுற்றிவளைத்துக் கொள்வதுடன் சம்பந்தப்பட்டது. இலங்கையில் சீனத் துறைமுகம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கவில்லை யெனில் அல்லது இலங்கை அரசுக்கும் சீனாவுக்கும் வேறெந்தத் தொடர்புகளும் இல்லையெனில், அமெரிக்க அரசின் எதிர்வினை பெருமளவில் மாறுபட்டதாயிருந்திருக்கும். பாலஸ்தீனியப்பொது சனங்களுக்கெதிராக இஸ்ரேல் செயற்படும் போது இருப்பது போலவோ, சதாம் { ஹ_ஸெய்ன் அமெரிக்காவின் நண்பனாயிருந்த வேளையில் ஈராக்கிய குர்துஸ் மக்கள் மீது நச்சு வாயுப்பிரயோகம் நடத்தியபோது இருந்தது போலவோதான் அமெரிக்காவின் எதிர்வினை அனேக மாக இருந்திருக்கும்.
தமிழரிலிருந்து சிங்களவர் ஈறாக இலங்கை மக்கள் யாவரும் இதிலும் பெரியதும், எல்லாவற்றையும் உள்ள டக்கியதுமான, முழு உலகளாவிய ஒரு பிரச்சினையின் இலக்கில் இருக்கிறார்கள்.அமெரிக்காவுடனும் சுற்றயல் நாடுகளுடனும் முரண் ஏற்படக்கூடிய ஒரு நிலைமையில், இலங்கையின் அருகாமையில் தாண்டிச் செல்கிற கடற்பாதையானது சீனர்களுக்கு எரிபொருளுக்கான உயிர்வழி என்கிற முறையில் இன்றியமையாததாயிருக்கும். இலங்கையை சீனா மற்றும் அதன் நட்பு நாடுகளின் வட்டத்திலிருந்து வெளியே எடுப்பதன் மூலம் சீனாவுக்கு இப்பாதையைப் பாதுகாப்புக் குறைந்ததாக உறுதிப்படுத்திக்கொள்ள அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் முனைவார்கள். இலங்கை பகைக்குழுவாக்கம் (balkanization) செய்யப்படுவது கூட, அனேகமாக அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் நட்புக் கொள்ளச் சாத்தியப்பட்ட – இலங்கையிலிருக்கும் சீன நிலைகளை அண்மித்த இராணுவத் தளங்களை அவர்களுக்கு அளிக்கக்கூடிய – ஒரு தமிழ்த் தேசம் உருவாகுவதற்கு இட்டுச்செல்லலாம்.
மஹ்டி டாரியஸ் நஸெம்றோயா – உலக மயமாக் கல் ஆய்வு நிலையத்தில் (CRG-Centre for Research on Globalization) பூகோள அரசியல் மற்றும் போர்த்தந்தி ரோபாய விவகாரங்களில் சிறப்புத் திறன் விழையும் இணை ஆய்வாளராக உள்ளார்.
(தமிழில்: தங்கதேவன்) ஆதாரம்:  http://www.marketoracle.co.uk/Article 14477.html

இந்து சமுத்திரத்தில் வல்லரசுப் பலப்பரீட்சை, இலங்கை உள் நாட்டுப் போரின் பூகோள அரசியல்- -மஹ்டி டாரியஸ் நஸெம்றோயா
எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் உயிரைக் காவுகொண்ட, தமிழ்ப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்குமான, கொடூர யுத்தத்தின் பால் வௌ;வேறு வெளிநாட்டு அரசுகள் காட்டிய ஆதரவும் நிலைப்பாடுகளும், இந்த அந் நிய அரசுகளின் பூகோள – போர்த் தந்திரோபாய அக்கறை கள் பற்றிப் பெருமளவில் கூறுகின்றன. இந்திய அரசினதும் மற்றும் சுற்றயல் (periphery) என்று குறிப்பிடக்கூடிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற ஒரு குழுவைச் சேர்ந்த நாடுகளின் அரசுகளினதும் நிலைப்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ ஆதரவாக இருந்தது. யுத்தம் முடி வுக்கு வந்தபின் இலங்கையின் உறவுக்கான ஏதாவது எதிர்கால சாத்தியம் கருதி இந்த அரசுகளிற் பெரும் பாலானவை இந்த ஆதரவை மௌனமாகவும் வழங் கின.இதற்கு மாறாக, யுரேஷியா எனக் கூட்டாகக் குறிப்பிடப்படக் கூடிய, ஈரான், ரஷ்யா போன்ற ஒரு தொகுதி நாடுகளின் அரசுகள் இலங்கை அரசை ஆதரித்தன. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் போரிடும் இரு பகுதிகளுக்குமான இந்த யுரெஷியா மற்றும் சுற்றயல் இவற்றின் ஆதரவுகளின் துருவத்தன்மையானது, உண் மையிலேயே இன்னமும் பரந்துபட்டதான ஒரு போராட்டத்தின் வாசனையை முகர்ந்தறிவதைத் தடுத்து விடுகிறது. இலங்கைத்தீவின் எல்லைகளுக்கும் இப் பிராந்தியத்தின் எல்லைகளுக்கும் மிகவும் அப்பால் பரந்தகன்ற ஒரு போராட்டமது.இது ஏன் அவ்வாறுள்ளது? இப்படியான ஒரு கேள்விக்கான விடையிற் பெரும்பகுதி, அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதுமான சர்வதேச மேலாதிக்கத் திற்கெதிராக யுரேஷிய பெரு நிலப்பரப்பில் வளர்ந்து வரும் ஒரு கூட்டின் உருவாக்கத்துடன் தொடர்புபட்டது. பிறிமாக்கோவ் கோட்பாடு கொடுத்த உற்சாகத் தினால் மொஸ்கோ, தெஹ்ரான், பீஜிங் மற்றும் அவர்களின் கூட்டாளிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இந்த யுரேஷியன் கூட்டு. ‘கிழக்கின் நேட்டோ’ என சில வெளியுறவுக் கொள்கை வட்டாரங்களிடையே குறிப்பிடப்படும், உண்மையான இராணுவப் பரிமாணங்களைக்கொண்ட ஒரு பாதுகாப்புக்கூட்டான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), இந்தப் பூகோள- அரசியல் செயலூக்கத்தின் ஒரு மெய்யான குறியீடா கும். இச் செயற்பாட்டின் ஒரு களமாகத்தான்  2009ல் இலங்கை உள் நாட்டுப் போரின் கடைசி அத்தியாய மானது அனேகமாக அமைந்தது.
சீனப்பூதத்தின் நுழைவு: அமெரிக்கா மற்றும் இந்தியாவிடமிருந்து இலங்கை விலகுவதன் ஆரம்பம்.
இலங்கையைப் பொறுத்தளவில் 2007 ஒரு முக்கிய மைல் கல் ஆண்டு. 2007 மார்ச் 12 அன்று, தன் பிரதேசமான அம்பாந்தோட்டையில் சீனர்கள் ஒரு மிகப் பெரிய துறைமுகத்தை நிர்மாணிப்பதை அனு மதிப்பதற்குக் கொழும்பு ஒப்புக் கொண்டது. இத் துறைமுகத்தைக் கட்டுவதற்கான ஒப்பந்தம், இலங் கைத் துறைமுக அதிகார சபையால் சீனத் துறைமுகப் பொறியியல் கம்பனி மற்றும் சைனோ ஹைடோ கார்ப்பரேஷன் ஆகிய இரண்டு சீனக் கம்பனிகளுடன் முடிவு செய்யப்பட்டுக் கைச்சாத்திடப்பட்டது.  பொருளாதார நன்மைகள் மற்றும் தங்கள் நாட்டுப் போரை முடிவிற்குக்கொண்டு வருவதற்கான சீன உதவி- அனேகமாக இவற்றின் அடிப்படையிலேயே இலங்கை அரசின் தீர்மானம் அமைந்தது.இதைத் தொடர்ந்து அமெரிக்காவுடனும் இந்தி யாவுடனுமான இலங்கையின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. சீனாவைச் சுற்றி வளைப்பதும் தன் எல்லை களுக்கப்பால் சீனா ஏதாவது துறைமுகங்களையோ, தளங்களையோ அமைப்பைத் தடுப்பதும் அமெரிக் காவின் கொள்கையாக இருந்து வந்தது. இதன் விளை வாக இலங்கை இராணுவத்திற்கான தன் உதவிகளை அமெரிக்கா குறைத்துக் கொண்டது. இலங்கையை ஒரு சமஷ்டி நாடாக்கி, தமிழர்களுக்குச் சுயாட்சியை வழங்க வேண்டும் என்ற அழுத்தத்தைக் கொழும்பின் மேல் பிரயோகித்ததன் மூலம் தமிழ்ப் புலிகளுக்கான இந்தியாவின் ஆதரவும் அதிகரித்தது. பீஜிங் தனது அரசியல் செல்வாக்கைக் கொழும்புக்கு ஆதரவாகப் பயன்படுத்தியதுடன், இலங்கைக்குப் பெருமளவிலான ஆயுதக் கப்பல்களை அனுப்பவும் தொடங்கிற்று. ஒரு மேலதிக ஒப்பீடாக, 2008ல் இலங்கைக்கான அமெ ரிக்க உதவி வெறும் 7.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வேளையில், சீன உதவியோ ஏறத்தாழ ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தமையைச் சுட்டலாம். சீனாவுடனான ஒப்பந்தத்தாலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான விலகலாலும் 2007லிருந்துதான் இலங்கை யுரேஷியக் கூட்டில் ஒரு பகுதியாயிற்று. 2007 இறுதியளவில் ரஷ்யா, ஈரான் மற்றும் சீனாவுடனான பூகோள- போர்த் தந்திரோபாய அரண்களில் இலங்கை தன்னையும் உறுதியாய் இணைத்துக் கொண்டு விட்டது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்தி ரேலியா, கனடா ஆகியவற்றின் அரசுகளும் ஐரோப்பிய யூனியனும் ஏதோ ஒரு விதத்தில் தமிழ்ப் புலிகளுக்குக் கொடுத்த ஆதரவிற்கு இவைதான் உண்மையான அடிப்படைக் காரணங்களேயொழிய, மனிதாபிமான அக்கறைகளல்ல.இலங்கையுடனான சீன இராணுவத் தொடர்புகள் 1990களில் ஏற்பட்டன என்றாலும் சீன – இலங்கை இராணுவ உறவுகள் மலரத் தொடங்கியது 2007ல்தான். புதுடில்லியிலிருக்கும் கொள்கை ஆய்வுக்கான மத்திய நிலையத்தைச் சேர்ந்த் ப்ரஹ்மா ச்செலானியின் கூற்றுப்படி: ‘இலங்கையின் உள் நாட்டுப் போரில் இராணுவ முட்டுக்கட்டை நிலையினை முடிவுக்குக் கொண்டு வருவதில் சீன ஆயுத விற்பனைகள்தான் தீர்மானகரமான பங்கினை வகித்தன.”  இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கும் சீனத் துறைமுகப் பொறியியல் கம்பனி மற்றும் சைனோ ஹைடோ கார்ப்பரேஷன் ஆகிய இரண்டு சீனக் கம்பனிகளுக்கு மிடையிலான 2007 ஒப்பந்தத்திற்கு சரியாக ஒரு மாதம் கழித்து, ஏப்ரலில், வெடிப்பொருட்கள் மற்றும் பீரங்கி களுக்கான ஒரு பெரிய பேரத்தில் இலங்கை இராணு வத்துடன் சீனா கைச்சாத்திட்டது. அத்துடன், பீஜிங், தமிழ்ப் புலிகளைத் தோற்கடிப்பதில் தெளிவான பங்காற்றிய பல இராணுவ ஜெற் விமானங்களை இலங்கை இராணுவத்திற்கு இலவசமாகக் கொண்டு சென்று கொடுக்கவும் செய்தது.அம்பாந்தோட்டையில் சீனத் துறைமுகத்தை அமைக்கக் கொழும்பு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஈரானும் ரஷ்யாவும்கூட இலங்கையுடனான தங்கள் இராணுவத் தொடர்புகளை விரைந்து அபிவிருத்தி செய்யத் தொடங்கின. இந்த விஷயத்தில், பீஜிங், மொஸ்கோ, தெஹ்ரான் எல்லாம் இலங்கையுடன் கூட்டுறவும் இராணுவ ஒப்பந்தங்களும் வைத்துள் ளன. 2007லும், 2008லும் இலங்கையின் தலைவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் தெஹ்ரான், மொஸ்கோ, பீஜிங் ஆகிய இடங்களுக்கு மேற் கொண்ட விஜயங்கள் எல்லாம் இந்த யுரேஷிய நாடுகளின் உதவியுடன் தமிழ்ப் புலிகளின் இராணுவ ஆற்றலை அழிக்கச் செய்வதற்கான இலங்கையின் முன்னேற்பாடுகளுடன் தொடர்புபட்டவை.கடைசியில் சீனா, ரஷ்யா, ஈரான் யாவுமே இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்திற்கு முன்பாகவே இலங்கை இராணுவத்தின் ஆயுதபலத்தை மேம்படுத்த உதவின. யுரேஷியக் கூட்டைப் பொறுத் தளவில், இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடிப்ப தென்பது சீனத்துறைமுகம் நனவாவதை நிச்சயப்படுத்திக் கொள்வதும், சீனா, ரஷ்யா, ஈரானுடன் நட்பைப் பேணும் ஒரு இலங்கை அரசு தொடர்வதை உறுதிப்படுத்துமுகமாகக் கொழும்பில் ஆட்சி மாற்றத் திற்கான எந்த ஒரு சாத்தியத்தையும் தடுப்பதுமாகும். பயமுறுத்தலாக விளங்கும் தமிழ்ப்புலிகள் பலமிழக்கச் செய்யப்பட்டாலன்றி அமெரிக்காவும் அதன் கூட்டளி களும், அனேகமாக இந்தியாவுடன் இணைந்து – சீனாவுடனான இலங்கையின் துறைமுக ஒப்பந்தத்தை இல்லாமலாக்கவும் இலங்கையை யுரேஷிய வட்டத்திலிருந்து விடுவிக்கவுமான நோக்குடன் – இலங்கை அரசைக் கவிழ்க்க முயற்சிக்கலாமென்று இலங்கை அதிகாரிகளுடன் சீன, ரஷ்ய, ஈரானிய அரசுகளும் நம்பினர். இச்சூழலில் 2009 சண்டையின் போது அவர்கள் யாவரும் இலங்கைக்குப் பக்கபலமாக நின்ற துடன், சீனா மற்றும் ரஷ்யாவைப் பொறுத்தளவில் ஐ.நா.பாதுகாப்புச் சபையிலும் ஆதரவாய் விளங்கினர்.அஸோஷியேற்றட் பிரஸ் (AP) டிசம்பர் 23, 2007ல் அறிவித்தது:அமெரிக்க செனற் இலங்கைக்கான இராணுவ உதவியைப் பெருமளவில் குறைத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப – முன்னெப்போதுமில் லாத வகையில் இராணுவக் கூட்டுறவு பற்றிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஒரு உயர்மட்ட இராணு வத் தூதுக் குழுவைக் கொழும்புக்கு அனுப்பியதன் மூலம்- ரஷ்யா முன்வந்தது. ஜகேணல் ஜெனரல்ஸ விளதீமிர் மோல்தென்ஸ்கொய் தலைமையிலான உயர் மட்ட ரஷ்ய இராணுவ தூதுகோஷ்டி பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, இராணு வத்தளபதி ஜலெப்டினண்ட் ஜெனரல்ஸ சரத் ஃபொன் சேக்கா மற்றும் விமானப்படைத்தளபதி ரொஷான் குணதிலக்க ஆகியோரைச் சந்தித்ததுடன் நாட்டின் பல முக்கிய இராணுவத் தளங்களுக்கும் விஜயம் செய்தது. ரஷ்ய இராணுவத்தின் ஒரு மூத்த போர்த்தளபதியான கேணல் ஜெனரல் விளதீமிர் மோல்தென்ஸ்கொய் முன்னர் செச்சென்யாவிலிருந்த ரஷ்யப் படைகளின் இயக்கு நிலைத் தளபதியாக இருந்தவர்.இலங்கையைப் போலவே ரஷ்ய சமஷ்டி, சீனா, ஈரான் எல்லாம் தத்தம் நாடுகளிலும் பிரிவினைவாத இயக்கங்களை எதிர் கொள்பவை தான். இந்த இயக்கங்கள் எல்லாம் பூகோள போர்த் தந்திரோபாய காரணங்களுக்காக வெளியாரால் ஆதரிக்கப்படுபவை என நாலு நாடுகளுமே நினைக்கின்றன. 2007ல்,சீனத் துறைமுகத்தை அமைக்க இலங்கை ஒப்புக்கொண்ட பின்னர் அமெரிக்க அரசினால் ஏற்படுத்தப்பட்ட இராணுவ உதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு சீனா வைப் போலவே மாஸ்கோவும் முன்வந்தது மட்டு மன்றி, செச்சென்யாவில் பிரிவினைவாதிகளுக்கெதி ரான இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வை செய்த கேணல் ஜெனரல் விளதீமிர் மோல்தென்ஸ் கொயையும் க்ரெம்ளின் அனுப்பி வைத்தது. கொழும்பிற்கான ஒரு இராணுவ ஆலோசகராக மோல்தென்ஸ் கொய் இலங்கை வந்தார்.தெஹ்ரானின் உதவியும் இலங்கை இராணுவத் திற்கு மிக முக்கியமானதாக அமைந்தது. இலங்கையி லுள்ள ஒரு செய்தித்தாளான ‘த ஐலண்ட்” இவ்வாறு குறிப்பிட்டது: “எல் ரி ரி ஈ {அல்லது தமிழ்ப்புலித் தாக்குதல் ஒன்றினால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இலங்கை இராணுவம் நசுக்கப்பட்டு விடக்கூடிய பய முறுத்தலிருந்த போது இலங்கையை மீட்பதற்கு ஈரான் முன்வந்தது. ஈரானியத் தலைமையிடம் இலங்கை உதவி கேட்டதும் பல விமானங்கள் நிரம்ப ஈரானிய இராணுவ சாதனங்கள் உடனடியாகவே அனுப்பி வைக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.” 2009ல் ஒரு உயர்மட்ட இராணுவ தூதுக்குழு இலங்கைக்கு வருவதற்கு முன்னரே, ‘போர்த்திறன் சார்ந்த படகுகளின் பாவனையில் ஒரு முன்னணி வல்லுனர் எனப்பரவலாக நம்பப்படும்” ஈரான் எனவும், இலங்கை” ஓர் ஆண்டு காலத்தில் சிறிய போர்ப் படகுகளின் செயற்பாடுகள் சம்பந்தப்பட்ட திறன் களை வளர்த்துக் கொண்டது” எனவுங் கூட ‘த ஐலண்ட்” தெரிவித்தது.ஈரான், ரஷ்யா, சீனா ஆகியவை இலங்கைக்கு அளித்த உதவியின் எல்லை 2009ல் தமிழ்ப்புலிகளின் மீதான தாக்குதல்களுக்கான இலங்கை இராணுவத்தின் ஆயத்தங்களுக்கான பொருளாதார ஆதரவையும் கூட உள்ளடக்கியது. ஈரானிடமிருந்து மட்டும் இலங்கை பெற்றுக்கொண்டிருந்த உதவியின் அளவு மற்றும் முக்கியத்துவம் இவற்றின் ஆழத்தை ஓரளவு வெளிப் படுத்தும் கட்டுரையொன்றை ‘த ஹிண்டு” செப்டெம் பர் 21, 2009ல் வெளியிட்டது. நவம்பர் 2007ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரான் விஜயம் மேற்கொண்ட பின் இலங்கைக்கு வழங்கிய நாலு மாத வட்டியில்லாக் கடன் வசதியை ஈரான் ஓராண்டாக நீட்டித்தது என அரசினால் நடத் தப்படும் ‘டெய்லி நியூஸ்”  அறிவித்தது.ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹ்மதினொத்து டனான பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து, ஈரானிய அரசு அவ் வசதியை ஜனவரியிலிருந்து ஓகஸ்ற் 31வரை வழங்கிற்று.இவ்வசதியின் கீழ், 2008ல், 1.05 பில்லியன் டொலர் பெறுமதிக்கு- கிட்டத்தட்ட அதன் மொத்தத் தேவையான – மசகெண்ணையை இறக்குமதி செய்து, தமிழ்ப் புலிகளுடனான அரசின் போர் காரணமாக முக்கியத் துவம் பெற்ற ஒரு ஆண்டின் அன்னியச் செலாவணித் தேவைகளிலிருந்த நெருக்கடியை இலங்கை தளர்த்திக் கொண்டது.இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் செப்டெம்பெர் 3, 2009ல் தெஹ்ரானில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இலங்கைக்கு சாதகமாக, சலுகை வட்டி வீதத்துடனான ஒரு மேலதிக மூன்று மாதக்கடன் பொதியும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏன் இலங்கையில் ஒரு சீனத் துறைமுகம்? எல்லா இடங்களுமிருக்க ஏன் இலங்கையில்? இலங்கை இந்து சமுத்திரத்தின் கடற் போக்குவரத்துப் பாதையில் ஒரு மிக முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. வர்த்த கம், பாதுகாப்பு, எரிபொருள் வழங்கல், போன்றவற் றுக்கு அத்தியாவசியமான இந்து சமுத்திரத்தின் கடற்பாதைகளின் உயிர்த் துடிப்பான ஒரு சந்திப்பிலுள்ளது இந்த இடம். இதனால்தான், மாஸ்கோ, தெஹ்ரான், பீஜிங் எல்லாம் இலங்கையின் பின்னால் நிற்கின்றன.சீனத் துறைமுக நிர்மாணம் அம்பாந்தோட்டை யில் நடை பெற்றுக்கொண்டிருக்கையில், எரிபொருள் பாதைகளைக் கைப்பற்றும் ஒரு புதிய பனிப்போரின் பகுதியும் உருவாகிறது. ஆசியாவுக்குச்செல்லும் அனேகமான எரிபொருள் வினியோகங்கள் இலங்கையின் தென்முனையைத் தாண்டியே செல்கின்றன. இதன் காரணமாகத்தான் சீனர்கள் மத்திய கிழக்கு மற் றும் ஆபிரிக்காவிலிருந்து வரும் தங்கள் எரிபொருள் வினியோகங்களைப் பாதுகாப்பதற்காக இந்து சமுத் திரத்தில் ஒரு சங்கிலித் தொடராய்க் கடற்படைத் தளங் களை உருவாக்கும் அவர்களின் திட்டத்தில் இலங்கை யையும் இணைத்துள்ளார்கள். இத் திட்டத்தில் மியான்மார் (பர்மா)வும் ஒரு பங்காளி. அத்துடன், இவ்விரு நாடுகளிலும் அனேகமான விஷயங்களில் அரசுகளின் மேல் இருக்கும் அழுத்தங்கள்,அவை சீனத் துறைமுகங்களைக் கட்டுவதற்காக பீஜிங்குடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களுடன் நேரடித்தொடர்புள்ளவை. சீனாவுடன் கூடவே ஈரானும்- தனக்கும் சீனா வுக்குமிடையிலான கடற் பாதைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாய்- இலங்கையிலும் பரந்த இந்து சமுத்திரத்திலும் கடல்சார் அக் கறைகளைக் கொண்டுள்ளது. சீனா, ஈரான், இரண்டுமே தங்கள் கடற்படைகளைப் பெருக்கிக் கொண்டுள் ளன. இது வளர்ந்து கொண்டு வரும் முனைப்பொன்றின் அறிகுறி. பால்டிக் கடல், கருங்கடல், செங்கடல், ஏடன் வளை குடா, பாரசீக வளைகுடா மற்றும் அரபிக் கடலிலிருந்து வங்காள விரிகுடா வரை, தென் சீனக் கடல், கிழக்குச் சீனக்கடல், என முழு யுரேஷியாவை யும் சுற்றியுள்ள கடல்கள், நீர்ப்பரப்புகள், யாவும் பல ஆண்டுகளாகவே கடுமையான இராணுவ மயப்படுத் தலுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளன. சரித்திரத்தின் எக்கால கட்டத்திலாவது ஒரே நேரத்தில் இவ்வளவு பெருந் தொகையான போர்க் கப்பல்களை சமுத்திரங் கள் கண்டிரா. யுரேஷிய நீர்ப்பரப்புக்களிலான இந்த இராணுவ மயப்படுத்தல் நடவடிக்கையானது, அடிப்படையில், எதிர்காலத்து மோதலொன்றின் போது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதுடனும் யுரேஷிய நிலப்பரப்பை வளைத்துக் கொள்வதுடனும் சம்பந்தப்பட்டது.பெலாறுஸ்ஸைப் போலவே, இலங்கையும் 2009ல் SCOவில் இணைந்து கொண்டது. இந்த யுரெஷிய அமைப்பினுள் இலங்கை வந்தமை, யெக்கத்தறீன் பேர்க்கில் நடைபெற்ற – ஈரான் தேர்தல் கலவரங்களை யடுத்து மஹ்மூட் அஹ்மதி நிஜாத் மீது கவனம் படிந் திருந்த – SCO மகா நாட்டில் அறிவிக்கப்பட்டது. ஈரானிய ஜனாதிபதியை மீளத்தெரிவு செய்வதில் SCO தனது முழு ஆதரவையும் செலுத்திக் கொண்டிருந்த வேளையில், தமிழ்ப் புலிகளுக்கெதிரான கூட்டு ஆதர விற்காக இலங்கை நன்றி தெரிவித்துக்கொண்டது.இலங்கை மற்றும் – ரஷ்யத் தலைமையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பிலும் (Collective Security Treaty Organization, CSTO) உறுப்பினரா யிருந்த -பெலாறுஸ் ஆகிய இரண்டும் SCO வில் பேச்சு வார்த்தைப் பங்காளிகளாக (dialogue partners) கலந்து கொண்டிருந்தன. ளுஊழுவில் பேச்சுவார்த்தைப் பங்காளியாக இலங்கை கலந்து கொண்டமை, ரஷ்யா, சீனா மற்றும் ஈரானுடனான அதன் போர் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்புகளையும் கூட்டையும் உறுதி செய்கிறது. SCOவின் பேச்சுவார்த்தைப் பங்காளி என்கிற அந்தஸ்து இலங்கையை சீன மற்றும் ரஷ்யாவின் ஆதரவுக் குடையின் கீழ்க் கொண்டு வருகிறது.SCO சாசனத்தின் சரத்து 14ல் கூறப்பட்டிருக்கா விடினும் ஒரு பேச்சுவார்த்தைப் பங்காளி, அந்த உறவின் கீழ் தனக்கான பாதுகாப்பையும் தற்காப்புக் கான உதவியையும் கோர முடியும். பேச்சுவார்த்தைப் பங்காளிகள், SCOவுடன் பொருளாதார ரீதியிலும் பிணைக்கப்பட்டுள்ளமையானது, ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் அவர்களின் பங்காளிகளின் ஐக்கியத்தால் தோன்றவிருக்கும் யுரேஷியன் ஒன்றியத்துள் இணைவு கொள்வதையும் சாத்தியமாக்குகிறது.
இலங்கையும் யுரேஷியாவிலுள்ள பரந்த முரண்பாடும்.
மேற்குலகம் எனப்படுவதில் இலங்கை உள்நாட் டுப் போரின் கடைசி அத்தியாயத்தைப் பொறுத்தள வில் இரட்டை அளவு கோல்கள் பிரயோகிக்கப் பட்டன. 2008ல் தன் பிரதேச ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வலுக் கட்டாயத்தால் தென் ஒஸெற்றியாவையும் அப்காசியாவையும் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான ஜோர்ஜியா வின் இராணுவ நடவடிக்கைகளை ஆதரித்த அமெரிக் காவும் அதன் தோழமை நாடுகளும், அதனை இலங்கை யைப் பொறுத்தளவில் 2009ல் செய்யவில்லை. சாராம் சத்தில், இலங்கை மற்றும் ஜோர்ஜிய அரசாங்கங்களின் செயற்பாடுகள் அனேகமாகத் துல்லியமான ஒத்த தன்மை கொண்டவை : பிரிந்து போன பகுதியில் இராணுவ பலத்தால் அரசாங்கக் கட்டுப்பாட்டை நிறுவுதல். என்றாலும் இரண்டு விஷயங்களிலும் அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் எதிர்வினை முற்றிலும் வேறுபட்ட விதமானதாக இருந்தது. ஜோர்ஜியா ஆதரவைப்பெற்றது, இலங்கை பெற வில்லை.மேலும், உள் நாட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்த இராணுவ பலத்தையும் பிரயோகிக்க முடியாதென சர்வதேச ஒப்பந்தப்படி ஜோர்ஜியா சட்டபூர்வமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை அவ்வாறல்ல. சட்ட மொழியில் சொல்வதானால், பிரச்சினைக்கு முன்னர், அப்காசியாவும் தென் ஒசெற்றியாவும் ஜிளோர்ஜிய ஆட்சி முறைக் கட்டமைப்பினுள் சுயாட்சி அந்தஸ்துகளையும் கொண்டிருந்தவை. இப்படிச் சொல்வது இலங்கையில் இடம்பெற்ற எந்தச் சாவையும் நியாயப்படுத்துவதாகவோ அல்லது ஜோர்ஜியாவில் இடம்பெற்ற சண்டையை நியாயப்படுத்துவதாகவோ ஆகாது. ஆனால் பிரயோகிக்கப்பட்ட இரட்டை அளவுகோல்களை இது விளக்கும்.அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஜோர்ஜியாவை ஆதரித்தமைக்கும் இலங்கையை ஆதரியாமைக்குமான காரணம் யுரேஷியாவை சுற்றிவளைத்துக் கொள்வதுடன் சம்பந்தப்பட்டது. இலங்கையில் சீனத் துறைமுகம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கவில்லை யெனில் அல்லது இலங்கை அரசுக்கும் சீனாவுக்கும் வேறெந்தத் தொடர்புகளும் இல்லையெனில், அமெரிக்க அரசின் எதிர்வினை பெருமளவில் மாறுபட்டதாயிருந்திருக்கும். பாலஸ்தீனியப்பொது சனங்களுக்கெதிராக இஸ்ரேல் செயற்படும் போது இருப்பது போலவோ, சதாம் { ஹ_ஸெய்ன் அமெரிக்காவின் நண்பனாயிருந்த வேளையில் ஈராக்கிய குர்துஸ் மக்கள் மீது நச்சு வாயுப்பிரயோகம் நடத்தியபோது இருந்தது போலவோதான் அமெரிக்காவின் எதிர்வினை அனேக மாக இருந்திருக்கும்.தமிழரிலிருந்து சிங்களவர் ஈறாக இலங்கை மக்கள் யாவரும் இதிலும் பெரியதும், எல்லாவற்றையும் உள்ள டக்கியதுமான, முழு உலகளாவிய ஒரு பிரச்சினையின் இலக்கில் இருக்கிறார்கள்.அமெரிக்காவுடனும் சுற்றயல் நாடுகளுடனும் முரண் ஏற்படக்கூடிய ஒரு நிலைமையில், இலங்கையின் அருகாமையில் தாண்டிச் செல்கிற கடற்பாதையானது சீனர்களுக்கு எரிபொருளுக்கான உயிர்வழி என்கிற முறையில் இன்றியமையாததாயிருக்கும். இலங்கையை சீனா மற்றும் அதன் நட்பு நாடுகளின் வட்டத்திலிருந்து வெளியே எடுப்பதன் மூலம் சீனாவுக்கு இப்பாதையைப் பாதுகாப்புக் குறைந்ததாக உறுதிப்படுத்திக்கொள்ள அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் முனைவார்கள். இலங்கை பகைக்குழுவாக்கம் (balkanization) செய்யப்படுவது கூட, அனேகமாக அமெரிக்காவுடனும் இந்தியாவுடனும் நட்புக் கொள்ளச் சாத்தியப்பட்ட – இலங்கையிலிருக்கும் சீன நிலைகளை அண்மித்த இராணுவத் தளங்களை அவர்களுக்கு அளிக்கக்கூடிய – ஒரு தமிழ்த் தேசம் உருவாகுவதற்கு இட்டுச்செல்லலாம்.
மஹ்டி டாரியஸ் நஸெம்றோயா – உலக மயமாக் கல் ஆய்வு நிலையத்தில் (CRG-Centre for Research on Globalization) பூகோள அரசியல் மற்றும் போர்த்தந்தி ரோபாய விவகாரங்களில் சிறப்புத் திறன் விழையும் இணை ஆய்வாளராக உள்ளார்.(தமிழில்: தங்கதேவன்) ஆதாரம்:  http://www.marketoracle.co.uk/Article 14477.html

Advertisements

Entry filed under: சர்வதேசம்.

ஈழச் சிக்கலும் ‘புறநானூற்று வீரம்” எனும் புனைவும் – பாஸ்கர்(தமிழ்நாடு) ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் உறுதிப்படுத்த ஓர் அரசியல் வலுமிக்க கூட்டணி தேவை.- ஒமர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


March 2010
M T W T F S S
« Dec   May »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts


%d bloggers like this: