சித்தாந்தன் கவிதைகள்

March 7, 2010 at 7:58 pm 1 comment

எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010
புறக்கணிக்கப்பட்டவர்களின் முறைப்பாடு
ஒரு குழலின் ஆழத்துள் இறங்கும் குருதி
இசையை மூழ்கடிக்கிறது
அதன் கதவுகளை மூடி
சுரங்களை இருளடையச் செய்கிறது.
பூர்வதத்தின் அதிபுனைவுக் கதைகளை
இசையாக வாசிப்பவர்கள்
பிணங்கiளைப் புணருகிறார்கள்
நிணத்தைப் பருகுகிறார்கள்
மலத்தைச் சுற்றும் ஈக்களாய் இரைகிறார்கள்
உண்மையிலவர்கள்
காற்றின் நறுமணத்தை முகர்வதில்லை,
நண்பனே
இலைகளாயும் கனிகளாயும்
உதிர்ந்துள்ள
உன்னையும் என்னையும் பற்றி
இசையின் துளியாக யாரும் பேசவில்லை
மலைகளில் உறைந்திருக்கிறது சரித்திரம்
சூரியனோ
பல நூறு பிணங்களாய்ச் சிதறிக்கிடக்கிறது.
நம்மில் யார்
காலப் பிரக்ஞை ஊறிய முதிர்சுவடுகளின்
ஆழ்வேர்ச் சுனையைத் திறப்பது,
ஒரு சொட்டுக் கண்ணீரை வியர்வையை
ஒரு வேளை உணவை பாதைகளை
குழந்தைகளுக்கான தாலாட்டை
நிலாவெழும் வானத்தை
விதியென முள்வலைக்கு இரையாக்கிவிட்டு
மறுக்கப்பட்ட சொற்களின் வலியறியாது
மனிதர்கள் அலைகிறார்கள்.
நண்பனே
கடவுளின் பானத்தில் சிதறிய துளியை
அவரின் உணவின் பருக்கையை
நீயோ நானோ உண்ணவில்லையாயினும்
சரித்திரம் உண்மையைத் தின்றுவிட்டது.
வானம் விரியும் மையத்தில்
அலகு குத்தும் பறவை
சரித்திரத்தைக் குருதியென உறிஞ்சுகிறது
தாழாத சிறகுகளினால் தன் ஒலியை எழுப்புகிறது.
22.05.2007
தூர்ந்துபோன சுனையூற்றின் அடியில் உக்கியிருக்கும் புன்னகை
திறந்து வைத்திருக்கிறேன் என் தெருவை
நீயோ புறக்கணித்துத் திரும்புகின்றாய்,
நண்பா
யன்னல் கண்ணாடிகள் உடைந்து
சில்லுகளாய்ச் சிதறியிருக்கும் வீட்டின்
உட்புறமாய்
இன்னும் மீதமாயிருக்கிறது அந்திமப் புன்னகை!
எதற்காக
என் கைகளை விடுவித்தாய்
புழுக்களாய் நெளிகின்றன உன் சொற்கள்
தேகத்தில்,
மனந்திறக்காத வீட்டின் வரைபடத்தில்
தொங்கும் தூக்குக் கயிற்றில்
சருக்கிடப்பட்டிருப்பது
நீயுமல்ல நானுமல்ல நம் நினைவுகள்
பருதி தாண்டாத சில பொழுதுகளை
சுமந்திருந்தோம் தோள்களில்,
முடிவற்ற பேருந்துப் பிரயாணத்தில்
யன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த
என்முகத்தில் அறைந்த காற்று
பரிசுத்தமற்ற மனத்தின் இழைகள்
அறுந்து போனதாய்ச் சொல்லிச் சென்றது.
நீ போய் யாரிடமாவது சொல்லப்போவதில்லை
கருணையின் கடலளவு வலியை
நான் காலியாக இருக்கும் நாற்காலியைப் பார்த்துப்
புன்னகை செய்கிறேன்.
என் தெருவில் நடந்து செல்கிறது
யாரோ வளர்க்கும் நாய்.
Advertisements

Entry filed under: கவிதை.

ஒரு வினாடி உணர்வை எழுத எத்தனை பக்கங்கள் அப்படியும் முழுமை கிட்டுவதில்லை- சாந்தன் ஈழச் சிக்கலும் ‘புறநானூற்று வீரம்” எனும் புனைவும் – பாஸ்கர்(தமிழ்நாடு)

1 Comment Add your own

  • 1. sarala  |  March 25, 2010 at 7:05 am

    மனம் பிறழ்ந்த மனித மிருகங்களுக்கு இடையே மாட்டிகொண்டு போராடும் என் மகளின் புலன்களை உணரமுடிகிறது இந்த வரிகள் மூலம் வாழ்த்த முடியவில்லை இந்த வுணர்வு பாதித்தது

    Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


March 2010
M T W T F S S
« Dec   May »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts


%d bloggers like this: