Archive for October, 2009

கதியிழந்த மக்கள் அல்லது கடவுளர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளுதல்

எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009

Sirupuluthy 1

‘எதுவரை’ என்ற கேள்வியைப் போலவே, ‘எப்படித் தொடங்குவது’ என்பதும் யோசித்தால் மிக ஆயாசப்படுத்துகிற கேள்விதான்.  மூகத்தை நிமிர்த்துவதற்கு வேண்டிய தொடக்கங்களை விடுங்கள். எழுதுவதைத் தொடங்குவதுகூட இன்னும் பெரும் சவாலாகவே இருக்கிறது.  நெடுநேரம் வெற்றுத் தாளையே பார்த்துக்கொண்டிருந்த பிறகு, ஷோபாசக்தி போல  ‘கேளுங்கள் பௌசரே’ என்று ஆரம்பித்துவிடலாம்  என்பதே ஆகிவருகிறது. காதுகளுடன் ஒருவர் முன்னால் இருப்பதுதான் எவ்வளவு வசதி!

போரின் முடிவில் கஜினி முகம்மதாகச்  சிந்திப்பதா அசோகச் சக்கரவர்த்தியாகச் சிந்திப்பதா என்ற தெரிவில் ஒருவேளை ‘எதுவரை’ என்ற கேள்விக்கு விடை வந்துவிடலாம்  போலத் தோன்றுகிறது. ஆனால் இன்றும் இதுபற்றி ஒரு உரையாடலை ஆரம்பிப்பது அவ்வளவு சுலபமாய்த் தெரியவில்லை. நம்  சமூகத்தின் வீரம், புத்திசாலித் தனம், ஏனைய மூடர்களைக் கட்டிமேய்த்து ஆண்டகாலம் போன்ற ஏறுபட்டி தளநார் வகைகளின் எழுப்ப  நினைவுகளிலிருந்து இன்னும் நாம் இறங்கி வந்ததாகத் தெரியவில்லை.

போரிலும் போரின் பின்னுமான வாதைகளுக்குள் நேரடியாகச் சிக்குப்படாது, வெளியிலிருந்து அழிவுகளை உணர்ந்தவர்களின் வீரக் குமுறலையும் பழிதீர்ப்பு மனவோட்டத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. (more…)

Advertisements

October 25, 2009 at 12:09 pm Leave a comment

ஒரு மைய உலகமும் தேசிய இன விடுதலையும் – எஸ்.வி. ராஜதுரை -கட்டுரை

எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009

S.V. Rajathurai

(சென்ற ஆண்டு (2008) ஜூன் மாத வாக்கில், இலண்டனில் உள்ள நன்பரொருவர், மு.திருநாவுக்கரசு எழுதிய ‘ஒற்றை மைய உலக அரங்கில் போரும் சமாதானமும்’ என்னும்  நூலின் கணிணி அச்சுப் பிரதியன்றை எனக்கு அனுப்பிவைத்து அந்த நூலிற்கு அறிமுகவுரை எழுதித்தரும்படி கேட்டுக் கொண்டார். மு.திருநாவுக்கரசின் விருப்பத்தின்படியே அந்த வேண்டுகோளை விடுப்பதாகக் கூறினார். எனக்குக் கிடைத்த அந்த கணிணி அச்சுப் பிரதி, ஏற்கனவே இறுதி செய்யப்பட்டு, சென்னையிலுள்ள ‘தமிழ் முழக்கம்’ பதிப்பகத்தின் வெளியீடாக அச்சுக்குக் கொண்டு செல்லப்படவிருந்தது. அதில் பக்கத்துக்குப் பக்கம் அச்சுப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் இருந்ததால், உடனடியாக  அறிமுகவுரை எழுதுவதைத் தவிர்த்து, பிழை நீக்கம் செய்வதற்காக மூன்று மெய்ப்புகளைச் சரிபார்த்து, ‘தமிழ் முழக்கம்’ பதிப்பக மேலாளர் கண்ணன் என்பாருக்கு  அனுப்பிக் கொண்டிருந்தேன். எனது உடல்நலக் குறைவைப் பொருட்படுத்தாமல் ஏறத்தாழ இரு மாத காலம் இந்தப் பணியில் ஈடுபட்டேன்.

மூன்றாவது மெய்ப்பைத் திருத்தி  முடிக்கையில்தான், எனது அறிமுகவுரையையும் எழுதி அனுப்பினேன். இலண்டன் நண்பருக்கும் எனது அறிமுகவுரையின் நகலை அனுப்பினேன். மு.திருநாவுக்கரசின் நூலை  அச்சிட்டு வெளியிடும் பொறுப்பு முழுவதும் ‘தமிழ் முழக்கம்’ கண்ணனுக்கே தரப்பட்டிருந்ததால், அவருக்கு நான் 13.8.2008 அன்று எழுதிய கடிதத்தில் கீழ்க்காணும் கருத்தைத்  தெரிவித்திருந்தேன்: “நான் அறிமுகவுரையாக எழுதியுள்ள ‘ஒருமைய உலகமும் தேசிய இன விடுதலையும்’ என்னும் கட்டுரை நூலாசிரியரின் கருத்துகள் சிலவற்றை  மறுதலிக்கின்றது. எனவே, வாசகர்கள், எடுத்த எடுப்பிலேயே இந்த நூல் குறித்த திறனாய்வைப் படித்த பிறகு நூலுக்குள் நுழைவதற்குப் பதிலாக, எனது அறிமுகவுரையை  ‘எதிர்வினையாக’ நூலின் கடைசியில் சேர்ப்பதுதான் சரியாக இருக்கும்.’ மு.திருநாவுக்கரசின் கருத்துகள் சிலவற்றை  மென்மையாக நான் மறுதலித்துள்ளதை மேற்சொன்ன இலண்டன் நண்பருக்கு-அவர் இந்த நூல் குறித்து என்னிடம் தொலைபேசியில் பேசிய போதெல்லாம் – ஒன்றுக்கும்  மேலான முறை கூறியிருக்கிறேன். (more…)

October 21, 2009 at 9:10 am 1 comment

கைவிடப்பட்ட நிலம் – விமுக்தி ஜயசுந்தர

எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009

vimukthy
உலகத் திரைப்பட விழாக்களில் மிகச் சிறந்த திரைப்பட விழாவான பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இலங்கையைச்  சேர்ந்த இளம் சிங்களத் திரைப்படக் கலைஞரான விமுக்தி ஜயசுந்தர இயக்கிய ‘சுலங்க எனு பினிஸ’ (The Forsaken Land) கைவிடப்பட்ட நிலம் என்ற 108 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப் படத்திற்கு கேன்ஸின் கேமரா டி ஓர் என்ற உயர் விருது பெற்றதைக் குறிப்பிட வேண்டும். அத்தோடு பாங்கொக் நகரில் நடைபெற்ற மூன்றாவது உலகத் திரைப்பட விழாவின் போதும் இத்திரைப் படத்திற்குச் சர்வதேச அளவிலான  சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. ‘இரண்டு தசாப்த கால யுத்தத்தின் விளைவுகளையும் போர் நிறுத்தம் அமுலில் இருந்த சூழலில் மனித வாழ்க்கையில் உள்ள வெறுமையை ஆழமாக ஆராயும் படைப்பாக 27 வயது நிரம்பிய விமுக்தியின் திரைப்படத்தைக்  குறிப்பிட முடியும்’ என வீரகேசரி வார வெளியீட்டில் எழுதியிருந்த சதீஷ் கிருஷ்ணப்பிள்ளை குறிப்பிடுகின்றார்.

விமுக்தி ஏற்கனவே ‘நிகண்ட தேசய’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அவர் இத்திரைப்படம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போது  ‘எனது தாய் நாட்டில் உள்ள ஏராளமான பிரச்சினைகளையே இத் திரைப்படம் பிரதிபலிக்கின்றது. மேற்கத்திய நாட்டவர்களுக்காக இது  உருவாக்கப்பட்டதாகப் பலர் கருதுகின்றனர். ஆனால் எனது நாட்டவர்களுக்காகவும் ஆசிய நாட்டவர்களுக்காகவுமே இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்திலிருந்து நான் இவ்விருதைப் பெற்றதன் மூலம் ஆசியர்களுக்காகவே இப்படம்  தயாரிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது’ என்கிறார் விமுத்தி ஜயசுந்தர. (more…)

October 21, 2009 at 8:40 am Leave a comment

நான் எப்போது அடிமையாயிருந்தேன்… புஸ்பராணி – நேர்காணல்

எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009

ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் தோழியர் புஸ்பராணி. தலைமறைவுப் போராளிகளிற்குச் சோறிட்டு வீட்டிற்குள் தூங்கவைத்துவிட்டு பட்டினியுடன் வீட்டு வாசலில் காவலிருந்த ஒரு போராளிக் குடும்பத்தின் மூத்த பெண்பிள்ளை. “ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” தந்த மறைந்த தோழர் சி.புஸ்பராஜாவின் மூத்த சகோதரி. அறுபது வயதை நெருங்கும் பிராயத்திலும் அரசியற் கூட்டங்கள், இலக்கியச் சந்திப்புகள், பெண்கள் சந்திப்புகள், தலித் மாநாடுகள் என உற்சாகமாகத்  தனது பங்களிப்பைச் செலுத்திக்கொண்டிருப்பவர். தனக்குச் சரியெனப்பட்டதை எந்தச் சபையிலும் சந்தர்ப்பத்திலும் எதற்கும் அஞ்சாமல் துணிந்து பேசிக்கொண்டிருக்கும்  கலகக்காரி.

தமிழரசுக் கட்சியின் தொண்டராக ஆரம்பிக்கப்பட்ட அவரது அரசியல் வாழ்வு எழுபதுகளின் ஆரம்பத்தில் ஆயுதந் தாங்கிய இளைஞர் போராட்டக் குழுக்களின் பக்கம் அவரைக்  கூட்டிவந்தது. சில வருட இயக்க அனுபவங்களிலேயே போராட்ட இயக்கங்களுக்குள் பெரும் கசப்புகளைச் சந்திக்க நேரிட்ட அவர் இயக்க அரசியலிலிருந்து  ஒதுங்கிக்கொண்டாலும் தொடர்ந்தும் இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிட்டது. புஸ்பராணி 1986ல் பிரான்சுக்குப் புலம் பெயர்ந்தார். ஈழப்  போராட்டத்தில் தனது அனுபவங்களை நூலாக எழுதி வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் புஸ்பராணியைச் சந்தித்து “எதுவரை இதழிற்காகச் செய்யப்பட்ட  இந்நேர்காணல் அவரின் புத்தகத்திற்கான ஒரு முன்னுரைபோல அமைந்துவிட்டதில் மகிழ்ச்சியே. ஒன்றரைமணி நேரங்கள் நீடித்த இந்த நேர்காணல் பாரிஸில் 20.06.2009ல் பதிவு செய்யப்பட்டது.

சந்திப்பு: ஷோபாசக்தி
படங்கள்: தியோ ரூபன்

Puspharani

நான் யாழ்ப்பாணத்தின் கடற்கரைக் கிராமமான மயிலிட்டியில் 1950ல் பிறத்தேன். எனக்கு ஆறு சகோதரர்கள், ஆறு சகோதரிகள். குடும்பத்தில் நான் நான்காவது. மறைந்த  புஸ்பராஜா எனக்கு அடுத்ததாகப் பிறந்தவர். எனக்கும் தம்பி புஸ்பராஜாவுக்கும் ஒருவயதுதான் இடைவெளி. (more…)

October 20, 2009 at 6:11 pm 1 comment

இலங்கை அரசியல்: தேசியவாதங்களும் அதன் தோல்விகளும் – கட்டுரை

எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009

Sivalingam

இலங்கைவாழ் தமிழர் சமூகம் தற்போது திருப்புமுனையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த அறுபது வருடத்திற்கும் மேலாக இச்சமுதாயத்தின் மேல் திணிக்கப்பட்டிருந்த இரட்டை வேட அரசியல் அதற்கான அதிக விலையைக் கொடுத்துள்ளது. ஒருபுறத்தில்  ‘தனிஈழம்’ எனவும், மறுபுறத்தில் ‘சமஷ்டி’ எனவும் ‘உள்ளக சுயநிர்ணய உரிமை’ எனவும் பல்வேறு முரண்பட்ட குழப்ப அரசியலை  மக்கள் மீது விதைத்து ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்ற பிரிவினர் தமிழ் மக்களின் சமூக வாழ்வை சீரழித்ததுடன் இறுதியில் அவர்களே  அவர்களது சுயநலமிக்க அரசியலுக்கும் இரையாகிவிட்டுள்ளனர். இந்தநிலையில் தமிழர் சமூகம் தனது கடந்தகால அரசியலிலிருந்து  மீண்டெழ வேண்டு மெனில் தனது தவறுகளிலிருந்து அர்த்தமுள்ள பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். இதன்மூலமே அரசியல்  விடுதலையையும் சமூக மேம்பாட்டையும் எட்ட முடியும்.

சுதந்திரத்தின் பின் 60 ஆண்டுகால தமிழர் அரசியலில் முப்பது ஆண்டுகள் அகிம்சை வழியும், முப்பது ஆண்டுகள் வன்முறை சார்ந்த  ஆயுத அரசியலாகவும் கழிந்துள்ளது. இந்த இரண்டு காலகட்டத்திலும் வெவ்வேறு அரசியல் தலைமைகள் தமிழ்த் தேசிய கோட்பாட்டை  நோக்கியே நகர்ந்தார்கள். இப்போது முடிவில் தமிழ் மக்கள் இப்போராட்டத்தினால் மிகவும் களைப்புற்று பலவீனப்படுத்தப்பட்டு இலங்கை  அரசினை நோக்கியே மீண்டும் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் கைவிடப்பட்டு விட்டார்கள். இந்த நிலைமைக்கு பெருமளவிலான காரண  கர்த்தாக்கள் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளே. (more…)

October 20, 2009 at 2:40 pm Leave a comment

விமர்சனம் – பக்கிரி – கவிதை

எதுவரை? இதழ் 2 செப்டம்பர் அக்டோபர் 2009

Pakkiri

திரைச் சேலையின் மறைவில்
லாந்தர் வெளிச்சத்தில்
அரிதாரத்தை பூசிக்கொண்டே
முணு முணுத்தோம்…
பாடம் செய்யப்பட்ட வசனங்களை
வேடங்கள் கூட
முகம் பார்த்தே ஒதிக்கினோம்.
ஆர்மோனியப் பெட்டியின் வாசிப்பிற்கிடையே
சுற்றி சுற்றி வந்து
துள்ளிக் குதித்தோம்.
தாளக்கட்டுகளை மிஞ்சி ஒலித்தது
கர்ஜனையும்
ஒப்பாரியும்
அழுகையும்
சிரிப்பும்.
காலமேற்றலும் வழிபாடுதலும் நடந்தேற
ஆனந்த களிப்பில்
விழித்திருந்து கேட்டவர்களும்
தூங்கிப் போனவர்களும்
கலைந்து போக…
வேடத்தை கலைத்து விட்டு
மீண்டும்
நாங்களாகவே…

October 20, 2009 at 2:33 pm Leave a comment

நல்லாட்சி வெகு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. – பேராசிரியர் ஜயந்த செனவிரத்ன

எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009

Prof Senivirathna

களனி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவரும் இவர், இலங்கையின் மாற்று சிந்தனைப் போக்கில் முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் இருந்து வருபவர். அரசியல் அமைப்பு, தேசிய சிறுபான்மை இன மக்களின் உரிமைகள், மனித உரிமைகள் தொடர்பில் நீண்டகாலமாக  பணியாற்றிவரும் இவரை அண்மையில் கேரளாவில் நடந்த இலங்கை தொடர்பான மகாநாடு ஒன்றில் சந்திக்க முடிந்தது அவருடன் நடாத்திய உரையாடலை இங்கு தருகிறோம். – எம். பௌசர்

போருக்குப் பிந்திய இன்றைய இலங்கை நிலவரம்  எப்படி இருக்கிறது?

முதலில் நான் ஒன்றைக் கூறவேண்டும். யுத்தமானது பௌதீக ரீதியில் மட்டுமே முடிவடைந்துள்ளது. ஏனெனில், யுத்தத்திற்கு பின்னணியாக இருந்த காரணிகள் இன்னும் அவ்வாறே தீர்க்கப்படாது உள்ளது. அவற்றைப் பற்றி பேசுவதற்கு அரசு உண்மையாக முயற்சி  எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறானதொரு நிலைமையின் காரணமாக தமிழ் மக்களைப் போலவே தமிழ் மக்களின்  உரிமையின் பொருட்டு முன்னின்று செயற்பட்ட சிங்கள சமூக குழுக்களுக்குள்ளும் விரக்தி நிலைப்பாடு உருவாகியுள்ளது.

பௌதீக ரீதியில் யுத்தம் நிறைவடைந்துள்ள போதும் இப்போதைய சூழ்நிலையில் மனிதத்துவம் தொடர்பிலான பாரிய பிரச்சினைகள் பல தற்போது உருவாகியுள்ளன. விசேடமான யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 3 இலட்சத்திற்கு அண்ணளவான தமிழ் மக்கள் இன்னும் வடக்கின்  அகதி முகாம்களில்  வாழ்கின்றனர். அந்த முகாம்களின் நிலையை மிகவும் மோசமானது. சுகாதார நிலைமைகள் மிகவும் கீழ்மட்டத்தில் காணப்படுகின்றது. இந்த சுகாதார நிலைமைகள் காரணமாக ஒரு நாளைக்கு 5 – 15 பேர் இன்றும் இறக்கின்றனர். சிறுவர்கள் மற்றும் ஆண் பிள்ளைகள் காணாமல் போகும் நிலைமை காணப்படுகின்றது. பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாக நிலவுகின்றது. இந்த மக்களை மீண்டும் மீள் குடியேற்றுவது எப்போது நடைபெறும் என்ற நிலைமை காணப்படுகின்றது. உண்மையிலேயே இது மிகவும்  துர்பாக்கியமான நிலைமையாகும். (more…)

October 20, 2009 at 9:53 am Leave a comment

Older Posts


October 2009
M T W T F S S
« Sep   Dec »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts