Archive for September, 2009

தொடங்குவதும் முடிப்பதும்- கல்லூரன் கவிதை

எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009
Kalluran
தொடங்குவதும் முடிப்பதும்
முடிப்பதும் தொடங்குவதுமாய்
நகர்ந்து செல்கிறேன்
எதை நோக்கியுமல்ல நண்பனே
ஒரு மதுக்குவளைக்காய்
அதில் என்னைக் கரைத்துத் தொலைத்து
ஒரு செடியில் காற்றாய் அசைவதற்காய்
எந்தச் சுடுகலனும் தேவையில்லை எனக்கு
நான் மெல்ல மெல்ல சாகவேண்டும் என்பதற்காய்
மரணத்தை நினைக்கிறேன்
அதே போல (more…)

September 24, 2009 at 7:10 pm Leave a comment

இரவுகள் தொங்கவிடப்பட்ட சுவர் ஓவியங்களில் நிலம் பறிபோன காட்சி – எ ம். நவாஸ் செளபி கவிதை

எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009
Nwash shopi
முயல் குட்டியாய் மெல்ல மெல்லத் துள்ளிக் குதித்து
நட்சந்திரங்களைக் கொறித்தபடி வந்த ஒரு இரவை
செவியில் பிடித்துத் தூக்கி விடிய விடிய விளையாடியிருக்கிறேன்.
பல்லாயிரம் மயில்கள் தோகை விரித்தபடியாக
என் படுக்கையைச் சுற்றி ஓர் இரவு சாமரம் வீசியுமிருக்கிறது.
வாசல் மாமரத்தில் நின்று குயிலாகக் கூவிய ஒரு இரவின்
இசை இன்னும் விழிகளைத் தழுவிக் கொண்டிருக்கிறது.
குழந்தை போல் தவழ்ந்து வந்த ஒரு இரவை
உப்பு மூட்டை சுமந்துமிருக்கிறேன். (more…)

September 24, 2009 at 5:51 pm Leave a comment

மரணத்துக்கு முன்னும் பின்னுமான குறிப்புகள் – த. அகிலன் கவிதை

எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009

Akilan kavithai

01
25.02.2009 (முன்)
நமது தொலைபேசி
உரையாடலை
கேட்டுக்கொண்டிருக்கின்றன

நமக்குச் சொந்தமற்ற செவிகள்.
பீறிட்டுக்கிளம்பும் சொற்கள்
பதுங்கிக் கொண்டபின்
உலர்ந்து போன வார்த்தைகளில்
நிகழ்கிறது.

நீ உயிரோடிருப்பதை அறிவிக்கும்
உன் ஒப்புதல் வாக்குமூலம்.
வெறுமனே
எதிர்முனை இரையும்
என் கேள்விகளின் போது
நீ (more…)

September 24, 2009 at 5:39 pm Leave a comment


September 2009
M T W T F S S
« Aug   Oct »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts