Archive for August, 2009

கசப்பும் கடும்துன்பமும்…

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

வார்த்தைகளால் விபரணம் செய்ய முடியாத மனித  அவலமும் வெம்மையும் அச்சமும் அடக்குமுறையும் இலங்கை மண்ணில் சர்வமும்  வியாபித்துள்ளது. இந்த அழுகிய புதைகுழிக்குள்ளிருந்து மீண்டெழ எவ்வித வழியுமற்று மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும்  இலங்கையின் அனைத்து மக்களினதும் வாழ்வு தொடரும் அரசியற் போர் சூதாட்டக்களத்தில் பணயம் வைக்கப்பட்டுள்ளது.Editorial

அழிவின் அரசியலும் போராட்டத்தின் அழிவும் தொடர்கிறது. இன்றைய உச்ச நெருக்கடிக்கும் மனித அவலத்திற்கும், உள்நாட்டளவில்  பிரதான பாத்திரப் பொறுப்பாளிகள் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளின் தலைமையுமே! இந்த உண்மையை நேரடியாக சுட்டிக்காட்டுவதற்கு தயங்கும் போக்கும் இன்றைய நிலைக்கு வலுச்சேர்த்தே வந்திருக்கிறது.

இவ்விரு அதிகார மையங்களுக்கிடையில் நிகழும் போரை தேசிய இனப் பிரச்சினையுடன் மாத்திரம் சம்பந்தப்படுத்தி எம்மால்  பார்க்கமுடியவில்ல. இருதரப்பிற்குமே நீடித்து நிற்கும் தேசிய இனப் பிரச்சினைக்கு சாத்தியமான வழியில் அரசியல் தீர்வு காண  வேண்டுமென்ற நிலைப்பாடு கிடையவே கிடையாது! (more…)

Advertisements

August 18, 2009 at 4:02 pm Leave a comment

இலங்கையில் இன உறவுகளின் சாத்தியம் – ரவி சுந்தரலிங்கம்

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

ravi sundralingam

இலங்கையில் இனங்களிடையே உறவுகள் சாத்தியமா? எமது பதில் வெறும் அகக்காரணிகளுள்ளே அடங்கியவை என்பதையும்,  வெளி நாட்டவரது நடத்தைகளை தவிர்த்து காணப்பட்டவை என்பதையும் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எரிந்து  கொண்டிருக்கும் இனப் பிரச்சனையில் உணர்வுபூர்வமான ஏட்டுச் சரித்திரத்தையும் பொருளாதாரத்தையும் கொண்டு இன உறவுகள்பற்றி கருத்துச் சொல்பவர்கள் பலர். அவர்களில் இருந்து சற்றே விலத்தி நின்று இனங்களை இலட்சியக் கண்ணுடன்  அவதானித்து கருத்துகள் சொல்ல வேண்டும் என்ற கடமையை உணர்ந்தவர்களும் உளர். அதில் பெரும் பாலானோர் மக்களை கூட்டங்களாக எடை போட்டு பேரியல் (macro) ரீதியில் காரணிகள் சொல்லும் கருவிகளை, அக்கருவிகளை சற்றும் புரிந்து  கொள்ளாதவர் கூட, பாவித்து கருத்துகள் கூறும் நிலையே உள்ளது. இவ்வழியில் மார்க்ஸிசம் என்ற கருவி ஏதோ எமது  சமூகத்தின் பொது அறிவு போல பலவழிகளில் போலிப் பிரதிப்பதிப்புகளாகின்றன. (more…)

August 18, 2009 at 3:23 pm Leave a comment

கலாமோகனின் கதைகள் – திறனாய்வு

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

Kalamhogan

க. கலாமோகன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்ப்  படைப்பாளிகளில் ஒருவராக அறியப்பட்டவர். பிரெஞ்சு மொழியிலும் எழுதி வருபவர். 1983 இல் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தற்போது பிரான்சில் வாழ்ந்து வருகின்றார்.

1999 இல் பிரான்சில் இருந்து எக்ஸில் வெளியீடாக வந்த ‘நிஷ்டை’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கிய  உலகின் கவனிப்பைப் பெற்றவர்.  இதன் பின்னர் 2003 இல் அவுஸ்திரேலியாவில் இருந்து மித்ர வெளியீடாக ‘ஜெயந்தீசன் கதைகள்’ தொகுப்பும் வெளிவந்துள்ளது. இவை தவிர ‘வீடும் வீதியும்’ என்ற நாடக நூலும், பிரெஞ்சு மொழியில் கலா மோகனால் படைக்கப்பட்ட ‘Et damain’ (நாளையும்) கவிதைத் தொகுப்புமாக இதுவரை நான்கு நூல்கள் வெளியாகியுள்ளன. (more…)

August 7, 2009 at 10:15 am Leave a comment

விட்டு விடுதலையாகி…

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

nwshad 0

இங்கே..,
பூமியில், ஆசியாக் கண்டத்தில், இலங்கையில், கொழும்பில், பழைய டப்ளியு பெரேரா மாவத்தையில், 186/2 இலக்க அறையில், கணிணி முன் உட்கார்ந்து, தலைநகரில் தற்கொலைத் தாக்குதல் பற்றிச் சிறுகதை எழுதிக் கொண்டிருக்கிறேன்…

இப் பெருவெளிச் சுழற்சி முடிவடைந்து, இதனை விட்டு விடுதலையாகி விட மட்டும்… இன்னும் ஒரு மணி நேரத்தில் தலைநகரில், ஒரு இராணுவ உயர்  அதிகாரியைக் குறி வைத்து வெடித்துச் சிதறவிருக்கிறேன். உலகில் வாழும் கடைசி மணித்துளியில், ஒரு சிறுகதை எழுதிக் கொண்டிருக்கிறேன்..
கதைக்கு விட்டு விடுதலையாகி என்று தலைப்பு வைத்திருக்கிறேன். கொஞ்சம்தான் எழுதியிருக்கிறேன். இன்னும் முற்றும் போடவில்லை. ஆனால், இலக்கை நெருங்கும் நேரம் நெருங்குகிறது. (more…)

August 7, 2009 at 9:11 am Leave a comment


August 2009
M T W T F S S
« Jul   Sep »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts