Archive for July, 2009

முத்தமிடக் காத்திருந்த நாள்

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

theepachelvan

01
உன்னை முத்தமிடக் காத்திருந்த
நாளில்
என் கடைசிக் கவிதை
கொலை செய்யப்பட்டிருந்தது.
விஷர் பிடித்த
மோட்டார் சைக்கிள்
விழுங்கிய நகரத்தில்
எனது முகம்
தனியே தொங்குகிறது.
ஆட்களில்லாதவர்களின்
வார்த்தைகளை கொலுவிய
புத்தகக் கடையில்
புத்தகங்கய்டையில்
சொருகப்பட்டிருந்தது
ஒரு துப்பாக்கி.
ஆமணக்கம் விதைகளை
தின்று மயங்கிய
குழந்தைகள் திரும்பி
அழும் சத்தத்திற்கு அருகில்
கிடந்தன சவப்பெட்டிகள்.
உன் முத்தத்திற்கும்
என் கவிதைக்கும் இடையில்
ஒரு நூல் வளருகிறது.
அந்த நூலை அறுக்கிறது
என்னை அவர்களின்
குருதிச் சொற்களால்
எழுதிய சுவர்களிலிருந்து
திரும்புகிற துப்பாக்கி.
என் கடைசிக் கவிதையை
எழுதிய தாள்களினை மூடுகிறது
ஒரு இராணுவத் தொப்பி.

2
நான் உன் முத்தத்திற்காகவும்
பேனாக்களை எடுத்துச் செல்கிறேன்.
நாம் குழந்தைகள் நிறைந்த வீட்டில்
சோறுசமைத்துக்
கொண்டிருந்த பொழுது
படலை துண்டு துண்டாய்
சிதைந்து போனதை நீ கண்டாய்.
சிதைந்த நகரத்தில்
திறந்திருக்கும் தேனீர்க்கடைக்கு
உன்னை இன்னும் அழைத்துச் செல்லவில்லை
நான் இன்னும்
உன்னை முத்தமிட வேண்டும்
குழந்தைகள்
அழைத்து வரப்பட்ட நகரத்தில்.
மிகவும் பிரியத்துடன்
முத்தமிடக் காத்திருந்த நாளில்
குருதி கசிந்த கைகளினால் எழுதிய
கடைசிக் கவிதையினோடு
நான் கொலை செய்யப்பட்டிருந்தேன்.
உடைந்த வானத்தின் கீழாக
நிலவு
தொங்கிக் கொண்டிருந்தது
நட்சத்திரங்கள்
பேரிரைச்சலோடு
புழுதியில் விழுந்து கிடந்தன.

Advertisements

July 28, 2009 at 1:46 pm Leave a comment

பெரிய மரைக்கார் சின்ன மரைக்கார் தனிவரைவா? இனவரைவா?

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

ghadar

கருத்துவைப்பு முறையாகவே இன்றுவரை விமர்சிக்கப்பட்டு வருகின்ற போதிலும் மேற்படி எஸ்.எல்.எம். ஹனிபாவின் பட்டியலின் தொடக்கமாக வ.இ.இராசரத்தினத்தின் ‘கொழு கொம்பு’ வையும், சண்முகம் சிவலிங்கத்தின் ‘நாலாண்டுகளை’யும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது என் திடமான  கருத்தாகும்.

மேற்படி பட்டியலில் சொல்லப்பட்ட புனை  பிரதிகளை நுணுக்கமாக வாசிப்புச் செய்யும் வாசகன் ஒருவன், பலவிதமான இலக்கிய அனுபவங்களையும்,  கலாசாரத் தன்மைகளையும் நிச்சயமாகப் பெற்றுக் கொள்ளலாம். கடலும் கடல் சார்ந்த களப்பும் நதியும் நதி சார்ந்த களிமுகமுமான ஒரு நீர்க்கரை  நாகரீகத்தை அணுக்கமாகக் கெண்ட ஒரு மக்கள் கூட்ட மொன்று இயற்கையைக் கையகப்படுத்தி, அதனை மாற்றியமைத்து, அபிவிருத்தி செய்து ஆதிபத்தியம் செய்து கொண்ட ஒரு நிலஉருவாக்கத்தினை இப்புனைவுகளிலிருந்து கண்டு கொள்ளலாம். சிறப்பாகக் கிழக்கிலங்கையினை நிலக் குறியாகக் கொண்ட தமிழ் பேசும் மக்களின் பல நூற்றாண்டுகால வாழ்க்கை வரலாற்றினை இப்புனைவுகளில் தோண்டி எடுக்கலாம். கிழக்கிலங்கையின் நிலக் குறிக்குள் வேறுபடும் வெவ்வேறு புனைகளங்களை தரிசித்தனுபவிக்கலாம். (more…)

July 28, 2009 at 1:42 pm Leave a comment

கனவைப் பெய்த மழை

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

murthala
இன்றிரவு
திடீரென பெய்த மழையில்
நனைந்து போனது பேருறக்கத்தின் ஒரு பகுதி
இரண்டாய் பிளந்து கிடந்த அவ்வுறக்கத்தின் தேவைகளை
கையில் எடுத்துக் கொண்டு
இந்த நள்ளிரவில் எங்கே ஒதுங்குவது?
கடலென பெய்யும் கனவுகளைத் தடுக்க
வழியேதுமற்ற சிறு குடையுடன்
பூனை முழி முழித்த என்னுடலின் ஒரு பாதி
கரைந்து போக மீதி உடலை நந்தனுக்குப் பங்கு வைத்து
விரும்பியபடி கனவுகளை மீட்டெடுக்க
இரவுகளை அளைந்தபடி இருந்தேன்
கனவுகளாய் சரி பாதியாய் உடைந்து கிடக்கும்
பகல்களையும் இரவுகளையும் (சிறு சிறு கூறுகளாய்)
உண்டு முடித்தேன்.
எலி அளைந்த தேங்காய்ப் பாதியைப் போல
பிளந்து கிடந்த உறக்கத்தை
சரிபாதியாய் பகிர்ந்து கொள்ளும் (முயற்சியில்)
அறைக்குள்ளும் வெளியிலும் குறுக்கும் (மறுக்குமாய்)
அலைந்து திரிந்தன
இரு வேறு கறுப்பு வெள்ளைப் பூனைகள்
பெருமழை ஓய்ந்து கிழக்கே
வானம் வெளித்த போதும் இழந்து போன தூக்கத்தை
(மீளப்பெற முடியவில்லை)
மீட்டுத் தருவது யார்?
பூனையா?
கனவா?
மழையா?
எது?
இடியும் மின்னலுமற்ற சூட்சும வெளியில்
கனவை பெரு மழையாய் இறக்கியவள்
இவை ஏதுமற்ற நீர்ச்சலனத்துடன் இன்னொரு
பகலை திறந்து அதன்வழி வெளியேறுகிறாள்!

July 28, 2009 at 1:37 pm Leave a comment

உயிர்மெய் – நூல் மதிப்புரை

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

uyir mai

இதழ்: 5-6,
தொகுப்பாசிரியர்கள்: பானுபாரதி, தமயந்தி
“இலங்கை தேசமே
நீ எதைச் சாப்பிடுகிறாய்?
கண்களை மூடிக்கொண்டு
எனது எதிர்காலத்தையே
நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்”
என தனது ஆசிரியர் தலையங்கத்திலேயே
குறிப்பிட்டுள்ள உயிர்மெய், மாற்று அரசியல் தளத்தில்
அதிக பங்காற்றி வருகிறது. நோர்வேயைச் சேர்ந்த
படைப்பாளிகள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள்
தொடர்பான அறிமுகங்களும் அவர்தம் படைப்புகளின்
மொழிபெயர்ப்பும் இவ்விதழுக்கு தனிச்சிறப்பு
சேர்க்கிறது.
தொடர்புக்கு:
KEPTEIN LINGES VEI GA, 6006, AALESUND
NORWAY
Email: editor.uyirmei@hotmail.com

July 28, 2009 at 1:34 pm Leave a comment

காலம் – நூல் மதிப்புரை

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

kalam

இதழ்-31, ஆசிரியர்: செல்வம்

புலம் பெயர் தேசம், இலங்கை, தமிழகத்தைச் சேர்ந்த பல்
வேறு எழுத்தாளர்கள், படைப்பாளிகளின் பங்காற்று
தலோடு தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கும் இதழ்.
இவ் விதழின் ஆசிரியர் தலையங்கம் இலங்கையில் இன்று
எழுந்துள்ள மனித அவலத்தையும், தமிழக உணர்வுகளையும்
கோடிட்டு காட்டுகிறது.
செல்வா கனகநாயகம், மு. புஷ்பராஜன், அ. முத்துலிங்கம்,
ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், மு.பொ, பொ.
கருணாகரமூர்த்தி, வெங்கட்சாமிநாதன், என்.கே.
மகாலிங்கம், சச்சிதானந்தன், சுகிர்தராஜா, எம்.கே. முரு
கானந்தம், செழியன், டானியல் ஜீவா, மெலிஞ்சி முத்தன்,
பா. துவாரகன், மணி வேலுப்பிள்ளை, சேரன், வாசுதேவன்,
ராஜமகள், சோலைக்கிளி, அ. சிவானந்தநாதன், அனார்,
தீபச்செல்வன், ஆகியோரின் எழுத்துக்களை தாங்கி வெளி
வந்துள்ளது.
தொடர்புக்கு:
KALAM,
16, HAMPSTEAD COURT,
MARKAM, ONT L3R 3S7
CANADA
Email: kalam@tamilbook.com

July 28, 2009 at 1:30 pm Leave a comment

உயிர் நிழல் – நூல் மதிப்புரை

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

murthala and uir nizal

தொகுப்பாசிரியர்கள்: லஷ்மி, சுசீந்திரன்
ஓரளவு காலத் தொடர்ச்சியுடன் பிரான்சிலிருந்து
வெளிவந்து கொண்டிருக்கிறது உயிர்நிழல். கலைச்
செல்வனாலும் அவரது நண்பர்களாலும் தொடங்கப்பட்ட
இம்முயற்சி அவரின் மறைவின் பின்னும் தொடர்கிறது
என்பது அவர் தொடர்பான நினைவுகளுக்கு மட்டுமல்ல
அவர் கொண்டிருந்த குறிக்கோள்களையும் நமக்குள்
பலப்படுத்துகிறது. பன்முகமான எழுத்துக்களுக்கும்
கருத்துக்களுக்கும் களம் தரும் உயிர்நிழல் நமது அரசியல்
சமூக பண்பாட்டுத் தளங்களில் நிகழும் பல்வேறு
விடயங்களையிட்டு ஆழமாக கேள்வி எழுப்புகிறது.
தொடர்புக்கு:
EXIL, 27, RUE JEAN MOULIN, 92400 COURBE VOIE
FRANCE
Email: exilpub@gmail.com , இணைய தளத்தில்: www.uyirnizhal.com

July 28, 2009 at 1:25 pm Leave a comment

இத்தாலியன் குடுமி சும்மா ஆடாது

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

kalaiyarasan

இத்தாலியின் அனுபவத்தில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டால், இலங்கை தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய நிலைப்பாட்டை புரிந்து கொள்வது எளிது. எண்பதுகளுக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளிற்கு வந்த, இன்னும் வந்து கொண்டிருக்கும் இலங்கை அகதிகள் தொகை அதிகரித்து வந்துள்ளது. அதிகளவான அகதிகள் வரும் நாடுகளில் இலங்கையும் அடங்குகின்றது. ஒரு காலத்தில் அதிகளவில் வந்து குவிந்து கொண்டிருந்த ஈராக், பொஸ்னிய, ஆப்கானிய அகதிகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக; ஐரோப்பிய ஒன்றியம்  அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு குறிப்பிட்ட நாடுகளின் பிரச்சினைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வர ஆற்றிய பங்கைப் பற்றி நிறைய  எழுதலாம்.

கடந்த வருடம், உலகில் இதற்கு முன்னர் நடைபெறாத அதிசயம் ஒன்று நடந்தது. இத்தாலி தனது காலனியாதிக்க ஆக்கிரமிப்பிற்கு நஷ்ட ஈடாக,  லிபியாவிற்கு 5 பில்லியன் டாலர் வழங்கியது. லிபிய மாணவர்களுக்கு இத்தாலியில் உயர்கல்வி பெறுவதற்கு புலமைப்பரிசில் திட்டம் ஒன்றையும்  கூடவே அறிவித்தது.  அகமகிழ்ந்த லிபிய தலைவர் கடாபியும் ஓகஸ்ட் 30 ம் திகதியை, இத்தாலி-லிபிய நட்புறவு நாளாக அறிவித்தார். இத்தாலி  லிபியாவை முதலாம் உலகப்போருக்கும், இரண்டாம் உலகப் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆக்கிரமித்து பல அழிவுகளை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. (more…)

July 18, 2009 at 4:19 am Leave a comment

Older Posts


July 2009
M T W T F S S
« Jun   Aug »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts