Archive for June, 2009

நூல் மதிப்புரைகள்

எதுவரை

? இதழ் 1 ஏப்ரல். மே. 2009? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

வடுVadu Book

இலங்கை தலித் மக்களின் மேம்பாட்டிற்காகவும்
அவர்களின் குரலற்ற குரலுக்கு தார்மீக ஆவேசத்துடன்
குரல்தரும் இதழாக வடு உள்ளது. இலங்கை தலித்
சமூக மேம்பாட்டு முன்னணியின் (பிரான்ஸ்)
அமைப்பின் வெளியீடு இது.
நீண்டகால பெருங்கதையாடலான “தமிழர் அரசியலி
னுள்” புதைக்கப்பட்டுவரும் தலித் மக்களின் பிரச்சனை
கள் குறித்த கவனத்தை ஏற்படுத்தும் அரசியல் குரல்
முக்கியமானது, தேசிய இனப் பிரச்சனைக்கு அரசியல்
தீர்வு காணும் போது தலித்மக்கள் மீதான அரசியல்
சமூக ஒடுக்குமுறைகளுக்கும் தீர்வுகாண வேண்டு
மென இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி
வலியுறுத்தி வருகிறது.
கற்பிதப்பட்ட அனைத்து புனிதங்கள் மீதான
விமர்சனங்களை முன்வைப்பதும், இலங்கை தலித்
அரசியல் பண்பாட்டு கலாசார மேம்பாட்டிற்கான
கருவியாகவும் தமது குரல் உள்ளது என வடு ஆசிரியர்
குழுவினர் அழுத்தி உரைக்கின்றனர்.
தொடர்புகளுக்கு:
FDSDS
70, SQUARE DES BAUVES
95140 GARGES LES GONESSE
FRANCE
Emai: vadu.world@hotmail.fr

 

ஏவிவிடப்பட்ட கொலையாளி

90 களில் இலங்கைத் தமிழ் சிறுகதைத் துறையில்
உருவாகி, பெரும்பாலும் பரிசோதனையாக முயற்சித்து
வரும் திசேராவின் முதலாவது நாவல் அமைப்புக்கு
நெருக்கமான படைப்பு இது. பொதுவாக
இலக்கியத்தின் வடிவமாதிரியில் அக்கறையற்ற
திசேராவின் கபாலபதி, வெள்ளைத்தோல் வீரர்கள்
ஆகிய சிறுகதைத் தொகுப்புக்கள் ஏற்கனவே
வெளியாகியிருக்கின்றன. கபாலபதி அவரது சிறுகதை
விநோதம் என்றால் ஏவிவிடப்பட்ட கொலையாளி
ஒரு நாவல் விநோதம். விநோதங்களைக் கலையாக்கும்
அவரது விஞ்ஞானசாயல் படிந்த எழுத்துப்பாணி
2004இல் இலங்கையைத் தாக்கிய சுனாமியுடன்
தொடர்பான கதைகளை முன்மாதிரிகளற்ற விதத்தில்
இந்நாவலில் எடுத்தாள்கிறது.Eavi vidappadda kolayazy
இது நதியின் நாள்

இலங்கை கவிஞர் பெண்ணியாவின் இரண்டாவது
கவிதைத் தொகுப்பு. முதல் தொகுப்பு ‘என்
கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை’ 2006
இல் ஊடறு வினால் வெளியிடப்பட்டது. ‘இது
நதியின் நாள்’ 2008 டிசம்பரில் சிறகுநுனி வெளியீடாக
வந்திருக்கிறது.

வெளியீடு:
சிறகுநுனி
நூல்கள் தொடர்பான விபரங்கட்கு:
sirahununi@gmail.com, srthisera@gmail.com
071 439 9249, 071 828 8627

Advertisements

June 29, 2009 at 1:42 pm Leave a comment

அஞ்சலி: ஹெரோல்ட் பின்ரர் (1930 – 2008)

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

finder 2

பின்ரரின் அரசியல் ஈடுபாடு பிரசித்தமானது. மனித உரிமை விவகாரங்களுக்காக உலக அரங்கில் அவர் வாதாடினார். ஜனநாயக மேம்பாடுடைய நாடுகள் தாமென தம்பட்டமடித்து வந்த மேற்கு நாடுகளின் இரட்டைத் தனங்களை, சுயரூபங்களைத் தயக்கமின்றி அம்பலப்படுத் தினார். 1973 காலப்பகுதியில் சிலி ஜனாதிபதி அலன்டே படுகொலை செய்யப்பட்டு, அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து மனித உரிமை மற்றும் அரசியல் விவகாரங்களில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கினார். பகிரங்கமாகக்  கருத்துக்களைக் கூறுவதால் சர்ச்சைகள் மூண்டன. எனினும் அவர் ஒதுங்கிவிடவில்லை. பின்ரரின் அரசியல் நிலைப்பாடு உறுதியானது.  (more…)

June 28, 2009 at 11:51 am 1 comment

புலிகளுக்குப் பிறகு

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

A.marks

இந்தக் கட்டுரையை நான் எழுதத் தொடங்கிய போது ‘கர்னல்’ கருணா எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் ஆளும் கட்சியில்  (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி) சேர்ந்து அமைச்சராகப் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொள்ளும் செய்தி வெளி வந்துள்ளது. எனது கணக்குப்படி அவர் 106வது  அமைச்சர் என நினைக்கிறேன். தேசிய ஒருமைப்பாட்டுத் துறைக்கு அவர் பொறுப்பேற்றுள்ளார்.

அவரது திறமையை மெச்சிப் பேசிய ஜனாதிபதி ராஜபக்சே அபிவிருத்தி மற்றும் சமூகநலம் என்கிற அம்சங்களில் கருணாவின் கொள்கை
தமது சுதந்திரக் கட்சியின் கொள்கையுடன் பொருந்தி வருகிறது என்று சொல்லியுள்ளார். சில தசாப்தங்களுக்கு முன் மட்டகளப்பு  தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் செ.இராஜதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக்  கட்சியில் சேர்ந்தபோது ‘கிழக்கு மாகாணத் தமிழரின் அபிவிருத்திக்காக’ இப்படிச் செள்வதாகக் கூறியது நினைவுக்கு வருகிறது.

முல்லைத் தீவுப் பகுதியில் மேலும் மேலும் புலிகளின் ஆடற்களம் சுருங்கிக் கொண்டேபோகிறது. (more…)

June 3, 2009 at 1:30 pm Leave a comment

சிறுபான்மையினரின் ஒருமைப்பாடு – இன்றைய தேவை!

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

Nirmala

இன்று இலங்கையில் நடக்கும் போர் சிங்கள தமிழ் தேசியவாதங்களுக்கிடையிலான நீண்ட  வரலாற்று ரீதியான ஒரு போட்டியினால் ஏற்பட்ட தெனச் சொல்லலாம். காலனித்துவ காலத்திலும் காலனி எதிர்ப்புப் போராட்டக்காலத்திலும்  உருவாகிய இத்தேசியவாதங்கள் இலங்கையின் பின்காலனித்துவ வரலாற்றில் மிகுந்த வன்முறையுடனும் யுத்த மூர்க்கத்துடனும் தம் நடவடிக்கைகளை அரங்கேற்றியுள்ளன.

சுதந்திரமடைந்த காலத்திலிருந்து, சிங்கள  பௌத்த தேசியவாதமானது இலங்கையின் நவீன காலனித்துவ அரசின் மீது தன்  மேலாண்மையை நிறுவியதன் மூலம் சகல சிறுபான்மை மக்களையும் விளிம்புநிலைக்கு தள்ளியுள்ளது. அனைத்து ஒருமைப்பாடுடைய இனங்களையும் உள்வாங்கிய ‘இலங்கையர்‘ என்ற தேசிய அடையாளமொன்று கட்டமைக்கப்படுவதை இது  இல்லாமல் ஆக்கி விட்டது. இதற்குப் பதிலிறுக்கும் வகையில், மிகுந்த தீவிரமான தமிழ்த்தேசியவாதமொன்று உருவாகி, அது ஈற்றில் ஆயுத வன்முறைப்போராட்டமாக உருவெடுத்தது. (more…)

June 3, 2009 at 1:26 pm Leave a comment

கடவுளர்களின் நகரங்களில் வாழுதல்

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

-சித்தார்த்தன்

எல்லாப்பாதைகளும் திருப்பங்களில் முடிகின்றன
ஓப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தில்
வெறும் பிரார்த்தனைகளுடன் வாழுகின்றோம்
எல்லாப் பிரார்த்தனைகளும் கடவுளருக்கானதில்லை
எல்லாக்கடவுளர்களும் சனங்களுக்கானவையுமல்ல
இருந்தபோதும்
பிரார்த்தனைகளால் நிறைகிறது நகரம்
கடவுளர்கள்
மகா காலங்களினது அற்பத்தனங்களிலிருந்து
வந்துவிடுகின்றனர் நகரங்களுக்கு
மதுவருந்தி போதையில் மிதக்கும் கடவுள்கள்
கொலைகளின் சாகசங்களைப் பேசும் கடவுள்கள்
சித்திரைவதைக் கூடங்களில்
குதவழி முட்கம்பி சொருகும் கடவுள்கள்
தெருக்களில்
உடைகளைந்து வெடிகுண்டு தேடும் கடவுள்கள்
அடையாள அட்டைகளைத் தொலைத்தவனின் மனமும்
மறந்துபோய் வீட்டில் விட்டு வந்தவனின் மனமும்
தெருக்களில் கதறுகின்றன
கடவுளரின் அற்பத்தனங்களுக்கிடையில்
வெறும் பிரார்த்தனைகளுடன் இரவுகளை உறங்குகிறோம்
பகல்களை ஓட்டுகிறோம்
கடவுளர் அலையும் காலத்தில்
இரவில் புணர்ச்சிக்கலையும் நாய்களினது
காலடி ஓசைகளும் கடவுளர்களுடையவைதான்
ஓப்பாரிகளும் விசும்பல்களும்
ஓலங்களினாலுமான நகரத்தில்
சனங்களின் பிரார்த்தனை
தெருவில் சுடப்பட்டு இறந்தவனின்
இறுதி மன்றாடலாயும் கதறலாயும்
நிர்க்கதியாய் அலைகிறது.

June 3, 2009 at 12:55 pm Leave a comment


June 2009
M T W T F S S
    Jul »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Categories

Feeds

Flickr Photos

Recent Posts