சமகால ஈழத்து இலக்கியம் : சொல்ல நினைத்த சில குறிப்புகள்
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

1
சமகால ஈழத்து இலக்கியம் என்பது பரந்த தளத்தில் அணுக வேண்டியது. விரிவான வாசிப்பும், ஆழமான விமர்சனப் பண்பும் இல்லாது ஒரு வாசிப்பை முன்வைத்தல் என்பது கடினமானது. ஈழத்திலிருந்து எனக்கு வாசிக்க கிடைத்த பிரதிகள் மிகச் சொற்பமே. எனவே ஈழத்திலக்கியம் என்ற வகைக்குள் ஈழத்திலிருந்தும் புலம் பெயர்ந்தும் வந்த படைப்புக்களை சேர்த்து, சில வாசிப்புப் புள்ளிகளை முன்வைக்கலாமென நினைக்கின்றேன். அத்துடன், இது எதற்கான முடிந்த முடிபுகளோ அல்ல மேலும் போர் தின்றுவிட்டுப் போயிருக்கின்ற ஈழத்துச் சூழலில், இன்று இலக்கியம் பேசுவது கூட ஒரு வகையில் அபத்தமானதுதான்.
சமகால ஈழத்திலக்கியம் என்பதை 2000ம் ஆண்டுக்குப் பிறகான சில பிரதிகளினூடாக அணுக விரும்புகின்றேன். ஈழத்திலக்கியத்தில், மிக நீண்ட காலமாக புனைவுகளின் பக்கம் தீவிரமாக இயங்கியவர்கள் என, எவரேயையேனும் கண்டு கொள்ளுதல் சற்றுக் கடினமாகவே இருக்கிறது. விமர்சனத்துறையில் ஒரு தொடர்ச்சியும், தொன்மை யும் இருந்ததைப் போல, புனைவுகளின் வழியே நம்மிடையே ஒரு தொடர்ச்சி இருந்ததில்லை. அவ்வாறு இல்லாதது நல்லதா கூடாதா என்பதைப் பிறகொரு தளத்தில் பார்ப்போம். இந்தக் காலப்பகுதியில், ஒரளவு தொடர்ச்சியாக கவிதைத் தளத்தில் தீவிரமாய் இயங்கிவந்த வில்வரத்தினத்தை இழந்திருக்கின்றோம். இன்னொரு புறத்தில் மிகவும் நம்பிக்கை தந்துகொண்டிருந்த எஸ். போஸை மிக இளமவயதில் துப்பாக்கியிற்குப் பலியும் கொடுத் திருக்கின்றோம். ஆகவே ஈழ இலக்கியத்தை வாசிப்புச் செய்யவரும் ஒருவர், புறநிலைக் காரணிகளான, தொடர்ச்சியான போர், இடம் பெயர்தல், சுதந்திரமாக எதையும் எழுத முடியாத சூழல் என்பவற்றைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகின்றது. இதை விமர்சகர்களுக்கு முக்கியமாய் இந்தியாவில் சொகுசான சூழலில் இருந்து கொண்டு, வருமான வசதிகளுக்காய் கோடம்பாக்கத்தில் புரண்டு கொண்டிருப்பவர்களுக்கு விளங்கப்படுத்துவது கடினம்.
(more…)
அவலத்தின் வணிகம் – காலச்சுவடு கண்ணன்
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

‘எதுவரை’ (பிப்ரவரி-மார்ச் 2010) இதழில் பூதந்தேவனாரின் குறிப்பு கண்டேன்.
தமிழ் வெகுஜன ஊடகங்களிலும் வணிகப் பதிப்பகங் களிலும் அவை கையாளும் பிற எல்லாப் பிரச்சனைகளையும் போலவே, ஈழத்தின் பேரவலமும் விற்பனைச் சரக்காக மாறியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. இதைச் சுட்டிக்காட்டி விமர்சிப்பதில் எங்களுக்கும் தயக்கம் இல்லை. இதுபற்றி காலச்சுவடில் வெளிவந்த பதிவு இது:
பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகளுக்குப் புலி ஆதரவு நிலை என்பது ஒரு வியாபார உத்தி. பிரபாகரனின் மரணத்தைச் சிங்கள அரசாங்கம் அறிவித்த பிறகு வந்த ஒரு தமிழ்ப் பத்திரிகை தனது மரணம் குறித்த செய்தியைப் பிரபாகரன் பார்த்துக்கொண்டிருப்பதுபோல ஒரு புகைப்படத்தை அட்டையில் வெளியிட்டது. அந்தப் பத்திரிகை ‘பிளாக்’கில் விற்பனை செய்யப்பட்டது; மக்கள் முண்டியடித்துக் கொண்டு வாங்கினார்கள். சில மாதங்களுக்கு முன்பு இலங்கையைப் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் என்னுடன் கலந்துகொண்ட தமிழ்ப் பத்திரிகை யாளர் ஒருவர் பிரபாகரனின் படத்தை அட்டையில் போட்டால் அந்த இதழ் குறைந்தபட்சம் 50,000 பிரதிகள் கூடுதலாக விற்பனையாவதாக அந்த அரங்கில் சொன்னார். அப்போது போர் முடிந்திருக்கவில்லை. பிரபாகரன் இறந்திருக்கவில்லை. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது இன்றைய சூழலில் பிரபாகரனுக்கே அதிகம் பொருந்தும்.
(ஊடகங்களின் இருண்ட காலம், கவிதா, இதழ் 117, செப்டம்பர், 09)
(more…)
ஒகோனி மக்களின் போராட்டம் – சொகரி எகின்னே
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

நைகர் ஆற்றின் மற்றைய கழிமுகப் பிரதேசங் களைப் போல, 1958ல் ஒகோனிகளின் நிலத்தில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது அந்த நிலத்தின் வரலாற்றில் நிகழ்ந்த துர்ப்பாக்கிய நிகழ்வாகும். அந்த மக்களின் துயரத்தில் கென்சரோ விவாவின் குறுக்கீடு முக்கியமானதாகும். அது அவர்களின் போராட்டத்தில் பாரிய தாக்கம் செலுத்தியது. இப்போராட்டத்தில் ஒன்பது ஒகோனி செயல்பாட்டாளர்கள் தூக்கிலிடப் பட்டனர்.
நதிப் பிரதே அரசின் தலைநகர் போட் வராகெட்டிலிருந்து வடக்குப் பக்கமாக உள்ள 400 சதுர மைலில் பரந்து கிடக்கும் 200 கிராமங்களில் கிட்டத்தட்ட 5,00,000 ஒகோனி மக்கள் வாழ்கிறார்கள். கழிமுகத்தின் மற்றைய பிரதேசங்களைப் போல ஒகோனிகளின் நிலத்திலும் நூற்றுக்கணக்கான குழாய்கள் குடிமனைகளுக்கூடாகவும் விவசாய நிலங்களுக்கூடாகவும் மசகு எண்ணெய்யை கொண்டு செல்கின்றன. அவைகளிலிருந்து வெடித்தெழும் தீச்சுவாலைகளால் கரும் தூசும் கக்கும் சூழலை மாசுபடுத்துகின்றன. கடந்த 40 வருடங்களாக நாள் தவறாமல் இந்நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இவை எண்ணெய் கம்பெனிகளின் கவனக்குறைவாலும் பராமரிப்பு குறைவாலும் நிகழ்கின்றன. சூழல் துஷ்பிரயோகம் தொடர்ந்து வரும் அரசாங்கங்களின் பாராமுகம், சரியான வளப்பங்கீடு இன்மை, விவசாய நிலங்களின் சேதத்துக்கு இழப்பீடு இன்மை போன்றவையே நைகர் கழிமுகப் பிரதேசங்களில் நடைபெறும் போராட்டத்துக்கு காரணங்களாகும். (more…)


