Posts filed under ‘நூல் மதிப்புரைகள்’

அஸீஸ் எம்.பாய்ஸின் ‘வயலான் குருவி’: ஈழத்து நாவல் உலகிற்கு புதிய வரவு. – செ.யோகராசா

எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் தொடக்கம் ஈழத்து தமிழ் நாவல் செல்நெறி கிழக்கில் அம்பாறை மாவட்ட முஸ்லீம் எழுத்தாளர்களிடமிருந்து அதிக ஊட்டச்சத்தினைப் பெற்று வளர்ந்து வருகின்றது என்று கூறத்தோன்றுகிறது. பின் நவீனத்துவ பாணியிலான இரண்டொரு நாவலின் முகிழ்ப்பு ஒரு புறத்திலும் யதார்த்தப் பாங்கிலான நாவலின் முகிழ்ப்பு இன்னொரு புறத்திலுமாக இது வெளிப்பட்டு வருகின்றது. பிற்கூறப்பட்ட வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக இவ்வேளை நச்சு வளையம் (எஸ்.நஸீறுதீன், 2004) வாக்குமூலம் (அப்துல் ரஸாக், 2002) நட்டுமை (கீரன், ஆர்.எம். நௌசாத் 2007) என்பனவே நினைவிற்கு வருகின்றன. இவ்வரிசையில் அஸீஸ் எம். பாய்ஸ் அண்மையில் எழுதிய வயலான் குருவியும் இப்போது இணைந்து கொள்கிறது.’

வயலான் குருவி வரவின் சிறப்பம்சங்களு ளன்று அரசியல் நாவல் என்று நோக்குகின்ற போது அது பெறுகின்ற முக்கியத்துவம், ஏலவே நச்சு வளையம் விரிந்த தளத்தில் ஈழத்தின் தேசிய இனங்களின் பிரச்சினைகள் பற்றி முதன் முதலாகப் பேசியிருப்பினும் சிங்களப் பேரினவாதம் முஸ்லிம் சமூகத்தை நசுக்குவது பற்றிப் பேசுவதற்கு அந்நாவலில் கொடுக்கப்பட்ட அழுத்தம் போதாது. மாறாக இந்நாவல் அதனை உரத்துப் பேச முற்படுகிறது. இன்றைய அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் பொனன்குடிப் (தீகவாபிப்) பிரச்சினைபற்றி அதன் ஆரம்பம் தொடக்கம் அண்மைக்காலம் வரை கவனஞ்செலுத்துகிறது!. இவ்விதத்தில் அதாவது சிங்களப் பேரினவாதத்தால் முஸ்லிம் மக்கள் நசுக்கப் படுவது (more…)

June 2, 2010 at 3:54 pm Leave a comment

இப்படியாயிற்று ஒவ்வொரு தடவையும் -நூல் மதிப்புரை

எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009

N. Shathiyapalan Book

ஆழ்ந்த தேடலும், முறையான தேர்ந்த வாசிப்பும் இலக்கியம் பற்றிய பரிச்சயமும் உள்ளவர்களுக்கு படைப்புக்கள் சித்திக்கின்றன. கவிதைகள் வார்த்தைகளைக் குவிக்காது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அதனதன் அர்த்தப் பரிமாணத்தில் கையாளப்படுதல் வேண்டும்.  வடிவங்களைத் தாண்டி அதனதன் விடயப்பரப்பு சார்ந்து பாடுதல் நன்றெனப்படுகிறது. உண்மையான உணர்வுகளுடன் கவிதை தனது எல்லாப் பரிமாணங்களையும் தொட்டு நிற்க வேண்டும்.

அம்பலம் குழுமத்தினால் வெளியீடு செய்யப்பட்ட, 1980ளில் இருந்து இன்று வரையான எழுத்துக்களைக் கொண்ட ந.சத்தியபாலனது  முதலாவது கவிதை தொகுப்பு ‘இப்படியாயிற்று நூற்றுயராவது தடவையும்…’ வெளிவந்திருக்கிறது. நாற்பத்திரண்டு கவிதைகளை உள்ளடக்கி இலக்கிய உலகில் தனது முதல் படைப்புத் தொகுதியை சேர்ந்திருக்கின்றது அம்பலம் குழுமம்.

கவிஞரின் உரையான “நானும் என் கவிதைகளும் வாழ்க்கையின் மீதும் மனிதர்கள் மீதும் எனக்குள்ள நேசமும், வாழ்தலில் எனக்குள்ள பேரார்வமும் என்னை எழுதுதவைக்கின்றன. மேலான இனிய மனுஷ குணங்கள் என்னை வசீகரிக்கின்றன நெகிழ்த்துகின்றன தொடர்ந்து பல தோல்விகளையே பரிசளித்த இன்மைகைளின் நிர்த்தாட்சண்யமற்ற வெகுமதிகள் என்னை துவண்டு போக வைத்தாலும், அவற்றுக்கு  அப்பால் எனக்கான தரிசனங்களையும் உவந்தளித்துக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை மீதும் எழுத்தின் மீதும் எனக்கிருக்கும் நேசமும்
 பிடிப்பும் கரைந்து போய்விட மாட்டா என்றே நம்புகின்றேன்” (more…)

October 20, 2009 at 9:46 am Leave a comment

உயிர்மெய் – நூல் மதிப்புரை

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

uyir mai

இதழ்: 5-6,
தொகுப்பாசிரியர்கள்: பானுபாரதி, தமயந்தி
“இலங்கை தேசமே
நீ எதைச் சாப்பிடுகிறாய்?
கண்களை மூடிக்கொண்டு
எனது எதிர்காலத்தையே
நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்”
என தனது ஆசிரியர் தலையங்கத்திலேயே
குறிப்பிட்டுள்ள உயிர்மெய், மாற்று அரசியல் தளத்தில்
அதிக பங்காற்றி வருகிறது. நோர்வேயைச் சேர்ந்த
படைப்பாளிகள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள்
தொடர்பான அறிமுகங்களும் அவர்தம் படைப்புகளின்
மொழிபெயர்ப்பும் இவ்விதழுக்கு தனிச்சிறப்பு
சேர்க்கிறது.
தொடர்புக்கு:
KEPTEIN LINGES VEI GA, 6006, AALESUND
NORWAY
Email: editor.uyirmei@hotmail.com

July 28, 2009 at 1:34 pm Leave a comment

Older Posts


 

May 2012
M T W T F S S
« Jun    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Categories

Feeds

Flickr Photos

Untitled

Upper Dentdale Valley, Yorkshire Dales (Explored)

Nets

More Photos

Recent Posts


Follow

Get every new post delivered to your Inbox.