Posts filed under ‘நிகழ்வுப் பதிவுகள்’
பகை மறப்பு அல்லது மீளிணக்கம்: ஒரு விவாதம் -அ.மார்க்ஸ்
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010
- [‘உரையாடல்கள் மற்றும் ஆய்வுக்கான மையம்’ (Centre for Dialogues and Research) அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் சென்ற மார்ச் 9, 2010 அன்று நடைபெற்ற கருத்தாடல்களின் தொகுப்பு.]
நிகழ்வினைத் தொடங்கி வைத்து சிராஜ் பேசுகையில்:
மற்றவர்கள் சொல்வதைக் கேட்டல் அவர்கள் சொல்வதை உண்மையாகப் புரிந்து கொள்ளுதல், கருத்துக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் நம்மைப் புரிய வைத்து, மற்றவர்களையும் புரிந்து கொள்ளுதல், ஒன்றிணைந்து சிந்தித்தல் என்கிற வகையான பண்பு இன்றைய, குறிப்பாக யுத்தத்திற்குப் பிந்திய காலத்துச் சமூக அரசியல் சூழலில் மிகவும் அவசியப்படுகிறது என்கிற அடிப்படையிலேயே இந்த அமைப்பை உருவாக்கியுள்ளோம்.
உரையாடல் மட்டுமின்றி கூடவே ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமாகிறது. உரையாடலும் பகுப்பாய்வு மனோபாவமும் இணைந்து கொள்வதன் ஊடாகத்தான் புதிய சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த முடியும். (more…)
இலங்கை விவகாரம், நிலவரம் தொடர்பான மாநாடு – நிகழ்வு பதிவு -தாஸ்
எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009

புலம் பெயர்ந்த இலங்கையர்களின் சர்வதேச வலையமைப்பு (INSD) இந்தியக் கேரள மாநிலத்தில் 7 நாள் செயலமர்வொன்றை நடாத்தியது. இலங்கையிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள தமிழ் முஸ்லிம் செயற்பாட்டாளர்களும், நிறுவனப் பிரதிநிதிகளும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் பலரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இலங்கையில் சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதற்கான சிறந்த அரசியலமைப்பு மாதிரி எது? இலங்கையில் இனத்துவ சமத்துவம், அரசியல் சமத்துவத்தை அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்துவதற்கான சிறந்த மார்க்கங்கள் எவை? இலங்கையில் நல்லாட்சியும், அதன் சட்டமும் ஒழுங்கும் அரசிற்குள்ளும் சமூகங்களுக்குள்ளும் அனைத்து மனித உரிமைகளையும் எப்படி உறுதிப்படுத்துவது? உலகப் பொருளாதார போட்டிகளின் நடுவே,இலங்கைப் பொருளாதாரத்தை கட்டி வளர்ப்பதற்கு சிறந்த பொருளாதார மாதிரிகள் எவை? என்கிற பிரதான தலைப்புகளின்கீழ் உரைகளும் கருத்துகளும் பகிரப்பட்டன.
(more…)



