Posts filed under ‘திரை மொழி’
ABBAS KIAROSTAMI- அப்பாஸ் ஹெரொஸ்ரமி-தமிழில் – ஜி.ரி.கேதாரநாதன்
கைவிடப்பட்ட நிலம் – விமுக்தி ஜயசுந்தர
எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009

உலகத் திரைப்பட விழாக்களில் மிகச் சிறந்த திரைப்பட விழாவான பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இலங்கையைச் சேர்ந்த இளம் சிங்களத் திரைப்படக் கலைஞரான விமுக்தி ஜயசுந்தர இயக்கிய ‘சுலங்க எனு பினிஸ’ (The Forsaken Land) கைவிடப்பட்ட நிலம் என்ற 108 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப் படத்திற்கு கேன்ஸின் கேமரா டி ஓர் என்ற உயர் விருது பெற்றதைக் குறிப்பிட வேண்டும். அத்தோடு பாங்கொக் நகரில் நடைபெற்ற மூன்றாவது உலகத் திரைப்பட விழாவின் போதும் இத்திரைப் படத்திற்குச் சர்வதேச அளவிலான சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. ‘இரண்டு தசாப்த கால யுத்தத்தின் விளைவுகளையும் போர் நிறுத்தம் அமுலில் இருந்த சூழலில் மனித வாழ்க்கையில் உள்ள வெறுமையை ஆழமாக ஆராயும் படைப்பாக 27 வயது நிரம்பிய விமுக்தியின் திரைப்படத்தைக் குறிப்பிட முடியும்’ என வீரகேசரி வார வெளியீட்டில் எழுதியிருந்த சதீஷ் கிருஷ்ணப்பிள்ளை குறிப்பிடுகின்றார்.
விமுக்தி ஏற்கனவே ‘நிகண்ட தேசய’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அவர் இத்திரைப்படம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போது ‘எனது தாய் நாட்டில் உள்ள ஏராளமான பிரச்சினைகளையே இத் திரைப்படம் பிரதிபலிக்கின்றது. மேற்கத்திய நாட்டவர்களுக்காக இது உருவாக்கப்பட்டதாகப் பலர் கருதுகின்றனர். ஆனால் எனது நாட்டவர்களுக்காகவும் ஆசிய நாட்டவர்களுக்காகவுமே இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்திலிருந்து நான் இவ்விருதைப் பெற்றதன் மூலம் ஆசியர்களுக்காகவே இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது’ என்கிறார் விமுத்தி ஜயசுந்தர. (more…)



