Posts filed under ‘சிறுகதை’
கம்யூனிஸ்ட்- ஜிஃப்ரி ஹஸன்
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

ஆங்கில மீடியத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசையில் உந்தப்பட்டு எனது ஊரிலிருந்து தொலைவிலிருந்த பல்கலைக்கழகமொன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கு என்னைப் போன்று சிங்களமோ, ஆங்கிலமோ தெரியாத அநேகமான தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் வந்திருந்தனர். அவர்கள் பொதுவாக நாட்டின் வடக்குப்புறத்திலும்-கிழக்குப்புறத்திலுமிருந்து வந்திருந்தனர். எங்களது இந்தப் பல்கலைக் கழகமும் காட்டுப்புறத்தில்தான் அமைந்திருந்தது.
தனிச் சிங்கள ஊரான கும்பல்கமவில் உருப்படியாக அமைந்திருந்தது அது மட்டும்தான். மலைகளால் சூழப்பட்ட, ஏற்றமும் இறக்கமுமான நிலத்தில் நேராகவும், சாய்வாகவும் கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. பிரமாண்டமான நவீன மாடிக் கட்டடங்களோ குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளோ நவீன விடுதி வசதிகளோ குறைந்தபட்சம் சமதரை யான பாதைகளோ அங்கில்லை. நாட்டிலுள்ள ஆகவும் ஏழ்மையான பல்கலைக்கழகம் இதுவாகத் தானிருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த மாத்திரத்தில் எல்லோருக் குள்ளும் வந்துவிடும். (more…)
அரசனும் குதிரை வீரனும் அழியுங்காலத்தின் சனங்களும் – ஜெகன் அபூர்வன்
மூன்று படுகளத்துடன் தேடுபவன் – த மலர்ச்செல்வன்.
எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009
தற்செயலாக ‘அஃ’ இதழை வாசித்துக் கொண்டிருந்தபோது படுகள இதழ்களை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் மேலெழுந்தது.அந்த இதழ்களைத் தேடி நான் அலையாத இடமேயில்லை. தேடாத நூலகங்களே இல்லை. விசாரிக்காத எழுத்தாளர்களேயில்லை இறுதியில் ஆவணக் காப்பாளர் குரும்புச்சிட்டி குலசிங்கத்திடம்இருப்பதாக அறிந்து அவர் வாசல் அடைந்தேன்.
வீடு முழுவதும் பழைய கடதாசியால் நிரம்பியிருந்தன. எழுத்துக்கள் எங்கும் ஒட்டிக்கொண்டு ஊஞ்சலாடின. அவர் மர வேலைகள் நிறைந்த அறையைத் திறந்து என்னை அழைத்துக்கொண்டு போனார். அறை நகர்ந்து கொண்டே இருந்தது. இரு பகலும் ஒரு இரவும் நடந்திருப்போம். அறையின் முடிவில் சிலர் எந்தச் சலனமுமில்லாது ஏடுகளை ஆராய்ந்துகொண்டேயிருந்தனர். எங்களைக் கண்டு எதுவும் பேசவில்லை. அடிக்கடி கண்ணாடியைச் சரி செய்துகொண்டு படியெடுத்துக்கொண்டேயிருந்தனர்.
“யார் இவர்கள்?” என்று கேட்டேன். “சாம வேதத்தை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் இசைஞானிகள்” என்றார் குலசிங்கம்.
“இளையராஜாவின் குழுவினரா?” என்றேன் “இல்லை இல்லை, இவர்கள் மேதைகள்” என்றார். திரும்பினேன் பின் பக்க மொட்டையிலிருந்து ‘சரிகமபதநிச” ஆவியாகிக்கொண்டிருந்தன. சற்றுப் பின் மேதைகள் உறைநிலையாய் போனார்கள். (more…)



