Posts filed under ‘அயல்’
பேராசிரியர். சுச்சரித கம்லத் – தமிழில்: ஃபஹீமா ஜஹான்
எதுவரை? இதழ் 4 மே-ஜூன் 2010

இலங்கையின் அறிவுசார் காலாசாரத்தினுள்ளே முக்கியத்துவமுடைய பாத்திரமொன்றை வகிக்கும் ஆளுமை. பல்கலைக்கழக ஆசான்களில் ஒருவராக இருந்து அவர் பல்கலைக்கழகக் கல்வித் துறையில் சிறந்த சேவையைச் செய்தார். சிங்களம், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழித்துறைகளிலும் சிறப்புத் தேர்ச்சிபெற்ற புத்திஜீவி ஒருவரான இவர் கீழைத்தேய மேலைத்தேய தத்துவங்கள் மற்றும் அழகியல் துறையிலும் ஆற்றல்மிக்கவர். விவாதமுறைப்படி உண்மையை ஆராயும் மெய்யியல் சிந்தனைகளின் ஊடாகத் தனது திறனாய்வுகளைப் புகுத்தி பொதுவுடமைவாத திறனாய்வாளர் ஒருவராக 80களில் பேராசிரியர் கம்லத் அவர்கள் பிரசித்தி பெற்றிருந்த தோடு இயங்குகின்ற ஒருவராவும் திகழ்ந்தார்.
சிறந்த இலக்கியப் படைப்புக்களையும் மொழிபெயர்ப்புக்களையும் வெளியிட்டு அவர் இருவழிகளில் செய்த இலக்கியச் சேவை விரிந்த பரப்பில் நோக்கப் படுகிறது. தற்கால இலக்கியம் மற்றும் திறனாய்வுத்துறை செல்நெறிகள் பல்கலைக் கழகங்கல் சார்ந்த விமரிசனங்களுடன் கூடிய அவருடைய கருத்துக்கள்
தற்கால சிங்கள இலக்கியங்களின் செல்நெறி
இலக்கியம் என்பது சமூகத்தில் உள்ள அறிவார்ந்த உரையாடல் ஒன்றாகும். ஆனாலும் இன்று இந்தக் கலையானது முறைசார் கல்வியற்ற, மரபு ரீதியான மொழி அறிவு அற்ற, மேற்கின் மொழி அறிவில் பயிற்சியற்ற வெற்று மனிதர்களிடம் போய்ச் சேர்ந்துள்ளது. கடந்த காலங்களில் எமது சிங்கள இலக்கியம் பெருமளவு சிதைவடைந்துள்ளது. இவை அனைத்திற்கும் காரணமாக அமைவது மேல்குடி வர்க்கத்தினரின் ஆதிக்க மனோபாவங் கொண்ட செயற்பாடுகளேயாகும். அவர்கள் திட்டமிட்டுச் செய்த செயல் தான் இந் நாட்டில் காணப்பட்ட கல்வி முறையைச் சீர்குலைத்தது. ஆங்கிலக் கல்வியை நாசமறுத்தது. (more…)


