Posts filed under ‘அஞ்சலி’

மரிலீன் பிரென்ச் (1929 – 2009) – அஞ்சலி

எதுவரை? இதழ் 2 செப்டம்பர் – அக்டோபர் 2009
Anjalina
ஆங்கில மூலம்:
ஹோவான் சிமித், கேற்மொஸி, எலைன் வூ

தமிழில்:
ஜி.ரி. கேதாரநாதன்

பிரபலம் வாய்ந்த அமெரிக்கப் பெண்ணிய எழுத்தாளரும் பெண்ணிய ஆளிணிவாளரும் கல்வியாளருமாகிய மரிலீன் பிரென்ச் தமது 79 ஆவது வயதில் காலமானார். சமரசங்களுக்கு ஆட்படாது அவருக்கேயுரிய இயல்பான சுயத்துடன் எழுதிய மரிலீன் பிரென்ச் தமது முதலாவது படைப்பான Women’s Room நாவலின் மூலம் சர்வதேசளவில்  பெரும் புகழீட்டியிருந்தார். அந்த நாவலை எழுதியபோது 50 வயதை அவர் எட்டியிருந்தார். அது 77களில் வெளியானது. அக்காலகட்டத்தில் பெண்களது அனுபவங்களை  அவர்களது வாழ் நிலைமைகளைப் பெண்ணிய நோக்கில் மையப்படுத்திய ஒரு இலக்கியப் பிரதி என்ற வகையில அந்த நாவல் ஒரு முன்னோடிப் படைப்பாக முக்கியத்துவத்தைப் பெற்றிருந்ததாக பெண்ணிய விமர்சகர்கள் சிலாகிக்கின்றனர்.

பெண்ணிய எழுத்தில் சிமோன்டி பொவாரின் Second Sex க்கு நிகராகக் கலாசாரப் பண்பாட்டுத் தளத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்தி, பல மாற்றங்களுக்கு உந்தியதொரு,  படைப்பாக மரிலீன் பிரென்ச்சின் Women’s Room நாவலை அவர்கள் கருதுகின்றனர். அந்த நாவலுக்குக் கிடைத்த வரவேற்பும் பரந்தளவிலான வாசகர் பெருக்கமும் வெளியீட்டுத்துறையினருக்கு ஆச்சரியத்தையும் பிரமிப்பினையும் ஏற்படுத்தியிருந்தது. எல்லாமாக இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில், மொழி மாற்றம் செய்யப்பட்ட நாவல், விற்பனையில் 11 மில்லியன் பிரதிகளையும் தாண்டி சாதனை படைத்திருந்தது. பின்னர் அது தொலைக்காட்சி திரைப்படமாகவும் பரந்தளவிலான பார்வையாளர்களை  எட்டியுமிருந்தது. (more…)

October 20, 2009 at 2:59 am Leave a comment

அஞ்சலி: ஹெரோல்ட் பின்ரர் (1930 – 2008)

எதுவரை? இதழ் 1 ஏப்ரல். மே. 2009

finder 2

பின்ரரின் அரசியல் ஈடுபாடு பிரசித்தமானது. மனித உரிமை விவகாரங்களுக்காக உலக அரங்கில் அவர் வாதாடினார். ஜனநாயக மேம்பாடுடைய நாடுகள் தாமென தம்பட்டமடித்து வந்த மேற்கு நாடுகளின் இரட்டைத் தனங்களை, சுயரூபங்களைத் தயக்கமின்றி அம்பலப்படுத் தினார். 1973 காலப்பகுதியில் சிலி ஜனாதிபதி அலன்டே படுகொலை செய்யப்பட்டு, அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து மனித உரிமை மற்றும் அரசியல் விவகாரங்களில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கினார். பகிரங்கமாகக்  கருத்துக்களைக் கூறுவதால் சர்ச்சைகள் மூண்டன. எனினும் அவர் ஒதுங்கிவிடவில்லை. பின்ரரின் அரசியல் நிலைப்பாடு உறுதியானது.  (more…)

June 28, 2009 at 11:51 am 1 comment


 

May 2012
M T W T F S S
« Jun    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Categories

Feeds

Flickr Photos

Untitled

Upper Dentdale Valley, Yorkshire Dales (Explored)

Nets

More Photos

Recent Posts


Follow

Get every new post delivered to your Inbox.